25.8 C
Chennai
Thursday, Dec 26, 2024
ac75
ஆரோக்கிய உணவு

துரியன் பழத்தை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!

துரியன் பழம் தற்போது மக்களிடம் மிகவும் பிரபலமான பழமாக உள்ளது. நறுமண வாசனையுடைய இந்த துரியன் பழம், மிகுந்த இனிப்பு சுவையை கொண்டுள்ளதுடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகின்றது.

தென்கிழக்காசியாவில் துரியன் பழம் அதிகம் விற்கப்படும் பழமாக உள்ளது. அதோடு பல்வேறு சத்துக்கள் நிறைந்த இந்த பழத்தினையும், இதன் நன்மைகளையும் தமிழர்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

 

துரியன் பழத்தை சாப்பிட்டால், உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். அத்துடன் அதன் பழங்கள் மட்டுமின்றி, இலைகளும் பல மருத்துவ பலன்களை கொண்டுள்ளது.

மஞ்சள் காமாலை

துரியன் பழத்தின் சதைப் பகுதியை சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தலாம். நகங்களில் நோய்த்தொற்று, நகங்களில் பிரச்சனை இருக்கும் போது, துரியன் பழத்தின் வேர்களைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும். நீரிழிவு, துரியன் பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால், அதனைச் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம்.

காய்ச்சல்

துரியன் மரத்தின் வேர் மற்றம் இலைகளை தண்ணீருடன் சேர்த்து பருகுவதால், காய்ச்சலில் இருந்து குணம் பெறலாம்.

ஆரோக்கியமான மூட்டுகள்

துரியன் பழத்தில் உள்ள வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

இரத்த சோகை

துரியன் பழத்தில் இரும்பு மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகளவு இருப்பதால், இதனைச் சாப்பிட இரத்த சோகையை குணமாகும்.

 

முதுமை தோற்றம்

இளமையிலேயே முதுமை தோற்றத்தில் காணப்படுபவர்கள், துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி சத்தால், முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம்.

மன அழுத்தம்

மற்றும் மன இறுக்கம், மன அழுத்தம் மற்றும மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுன் துரியன் பழம் மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் ஃபைரிடாக்ஸின் என்னும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது.

தைராய்டு

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், தைராய்டு சுரப்பியானது சீராக இயங்கும்.

குறைந்த இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தமானது அதிகரிக்கும்.

ஒற்றை தலைவலி

ஒற்றைத் தலைவலியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, துரியன் பழம் ஒரு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். ஏனெனில் இதில் ஒற்றைத் தலைவலியைப் போக்கும் ரிபோஃப்ளேவின் அதிகம் நிறைந்துள்ளது.

பல் பிரச்சனைகள்

துரியன் பழத்தில் பாஸ்பரஸ் அதிகம் நிறைந்திருப்பதால், அதனைச் சாப்பிட பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

[

பலவீனமான கருப்பை

பொதுவாக கருப்பை பலவீனமாக இருந்தால் கருத்தரிக்க முடியாது. ஒருவேளை கருத்தரித்தாலும், சில நாட்களில் கலைந்துவிடும். எனவே இத்தகைய பிரச்சனை உள்ள பெண்கள், துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால், கருப்பை பலமாகி, ஆரோக்கியமாக ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

விந்தணு குறைபாடு

ஆண்கள் துரியன் பழத்தை சாப்பிட்டால், விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பசியின்மை

பசியின்மை பிரச்சனை உள்ளவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள தயமின் மற்றும் நியாசின் பசியைத் தூண்டும்.

சொறி சிரங்கு

சொறி சிரங்கு பிரச்சனை இருந்தால், துரியன் பழத்தின் தோலை அரைத்து தடவினால் குணமாகும்.

அத்துடன் வாழைப்பழத்தை விட 10 மடங்கு அதிகமாக இரும்புச்சத்து, மற்றும் பாஸ்பரஸ் துரியன் பழத்தில் நிறைந்துள்ளது. மேலும் துரியன் பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால், அதனைச் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம்.

அதே சமயம் சில நேரங்களில் இப்பழங்களை சாப்பிட்டால், உடலில் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் மக்களிடையே உள்ளது. உண்மையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை. ஏனெனில் துரியன் பழம் சாப்பிடுவதால், உடலில் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்பதால் தான் அவ்வாறு கூறுகின்றனர்.

அளவோடு சாப்பிட்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என சொல்லப்படுகின்றது.

 

Related posts

பூசணிக்காயை விரும்பி சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள்

nathan

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாசி.

nathan

சூப்பர் டிப்ஸ் சப்போட்டா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!!

nathan

இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கும் காளான்

nathan

சுண்டல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா இஞ்சியில் ஒழிந்திருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்..!

nathan

சுலபமான வழிமுறைகள் இதோ..! இளநரை பிரச்சினை அடியோடு அழிக்க வேண்டுமா?..

nathan

கொழுப்பை குறைக்கும் வெங்காயத்தாளின் மேலும் பல பயன்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா ஹார்மோன் இம்பேலன்ஸ் எனப்படுகிற கோளாறுகளை ஓட ஓட விரட்ட வைப்பது, மஞ்சள்

nathan