27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
861
அழகு குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தாய்ப்பால் சுரக்கின்றது தெரியுமா?

குழந்தைக்கு மிகவும் ஜீரணமாகக் கூடிய, கிரகித்துக்கொள்ளக் கூடிய விதத்தில் உள்ள தாய்ப்பால், குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது.

தாய்ப்பாலின் மகத்துவத்தை பற்றிக் கூற வேண்டியதில்லை. பிறந்த குழந்தைக்கு இயற்கையான உணவு, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புக் கவசம் அது. மார்பகங்களின் அமைப்பு எப்படி இருக்கும்? தாய்ப்பால் எப்படி தயாராகும் என்பதை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் ஒரு தாய்க்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை பால் சுரக்கிறது.
குழந்தை பாலை உறிஞ்சும்போது பிட்யூட்டரி சுரப்பி, `ஆக்சிடோசின்’, `புரோலாக்டின்’ ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது, பால் உற்பத்தியைத் தூண்டுகிறது.
ரத்தத்தில் இருந்து குளுக்கோஸை கிரகிப்பதற்கு பால் சுரபிகளை `புரோலாக்டின்’ தூண்டுகிறது. அந்த குளுக்கோஸானது லாக்டோஸாகவும் மற்ற சர்க்கரைகளாகவும் மாற்றபடுகிறது.

கால்சியம், அமினோ அமிலங்கள், புரதங்கள், கொழுப்பு ஆகியவையும் பெறப்படுகின்றன.
பால் சுரபிகள் சுருங்கி, பால் நாளங்களுக்குள் பாலைச் செலுத்துவதை `ஆக்சிடோசின்’ தூண்டுகிறது.
ஆரம்பத்தில் சுரக்கும் பால் அடர்த்தி குறைவானது. குழந்தையின் தாகத்தைத் தணிக்கிறது.
பல நிமிடங்கள் கழித்துச் சுரக்கும் `சீம் பால்’, அடர்த்தியானது. அதிக கொழுப்பு உள்ள அது பசியை போக்குகிறது. ஆண்கள் தங்களின் மார்பகக் காம்புகளுக்கு பின்னே வேலை செய்யாத மார்பகத் திசுக்களைக் கொண்டிருக்கின்றனர்.
அதாவது, வளர்ச்சி அடையாத பால் நாளங்கள், கொழுப்பு மற்றும் இணைப்புத் திசு. ஆண்களில் 1000 பேரில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. அபாயக் காரணிகளில், பாரம்பரியம், கதிரியக்கதுக்கு உள்ளாகும் வாய்ப்பு போன்றவை அடங்கும்.
குழந்தைக்கு மிகவும் ஜீரணமாகக் கூடிய, கிரகித்துக்கொள்ளக் கூடிய விதத்தில் உள்ள தாய்ப்பால், குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது.
குழந்தைக்கு 6 மாதங்கள் வரை கட்டாயமாக பால் கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.
மஞ்சள் புரதம் செறிந்த பால், குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு சுரக்கிறது. அது குழந்தையின் உணவுக் குழலைச் சுத்தம் செய்கிறது, எதிர்உயிரிகளைக் கொண்டிருக்கிறது. குழந்தைக்கு இந்த பாலைக் கொடுப்பது அவசியம்.
தாய்ப்பால் கொடுப்பது, கர்பபை மீண்டும் தனது உண்மையான அளவுக்கு சுருங்க உதவுகிறது, எடை இழப்பை ஊக்குவிக்கிறது.

Related posts

அவரவர் முக அமைப்பிற்கேற்ற டிப்ஸ்!…

sangika

பெண்களே சீக்கிரம் வெள்ளையாக வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

நீங்களே பாருங்க.!.ஆளே மாறிய பிரபல நடிகை அனுராதா மகள் அபிநயாஸ்ரீ !!

nathan

உடலை அழகாக வைத்துக் கொள்ள கடலை மாவு

nathan

ஆணுடன் படுக்கையறையில் ஜூலி…புகைப்படம்

nathan

சருமத்தை தூய்மையாக்கும் கிளிசரின்,beauty tips on tamil

nathan

சூப்பர் டிப்ஸ் சருமத்தை பொலிவோடு வைத்துக்கொள்ள உதவும் ஓட்ஸ் ஃபேஸ் ஸ்கரப்!!

nathan

நீங்களே பாருங்க.! பிகினி உடையில் கடற்கரையில் இருந்தபடி நாகினி நடிகை

nathan

கருப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம்..

nathan