முடியாது என எதுவுமில்லை, எதுவும் சாத்தியம் தான் என்பதை பலமொழிகளில் வெறும் வார்த்தையாக விட்டு வைக்காமல் நிஜத்திலும் அவ்வபோது அரங்கேற்றி வருகிறார்கள் மனிதர்கள். இதில் 50 : 50 நன்மை, தீமை அளிக்கின்றன என்பதையும் நாம் மறுக்க முடியாது.
நாம் இருவர், நமக்கு இருவர் என்பது போய், நாம் மூவர் நமக்கு ஒருவர் என்பது போல ஒரு புது மெடிக்கல் டெக்னிக் வந்துள்ளது. அதாவது இரு வேறு பெண்களின் கரு முட்டை மற்றும் ஒரு ஆணின் விந்து சேர்த்து மூன்று பெற்றோருக்கு ஒரு குழந்தை பிறக்கும் டெக்னிக் தான் அது.
த்ரீ பேரன்ட் டெக்னிக்!
இரண்டு மாதங்களுக்கு முன்னர் உலகின் முதல் மூன்று பெற்றோருக்கு பிறந்த குழந்தை பிரசவிக்கப்பட்டது. இது “த்ரீ பேரன்ட் டெக்னிக்” எனப்படும் கான்ட்ரவர்ஸியான முறை ஆகும்.
கடவுளுக்கே சவால்!!!
மருத்துவ நிபுண விமர்சகர்கள் இது மனிதர்கள் மத்தியல் மரபணு மாற்று முறையை உட்புகுத்த வழிவகுக்கும் முறையாக இருக்கும். கடவுளுக்கே மனிதர்கள் இனி சவால் விடலாம் என விமர்சனம் செய்துள்ளனர்.
ஆரோக்கியமான குழந்தை!
த்ரீ பேரன்ட் டெக்னிக் முறையை ஆதரிக்கும் நபர்கள், இந்த முறை தாயிடம் இருந்து குழந்தைக்கு எந்த விதமான நோயும் பரவாமல், ஆரோக்கியமான முறையில் குழந்தையை பெற்றெடுக்க உதவியாக இருக்கும் என ஆதரவு தெரிவித்துள்ளனர்.
லே நோய்க்குறி (Leigh syndrome)!
லே நோய்க்குறி என்பது நரம்பு மண்டலத்தை தாக்கும் நோய். இந்த குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு இந்த நோய் இருந்தது. இதன் காரணமாக இவருக்கு பிறந்த முதல் இரண்டு குழந்தைகள் ஒருசில மாதங்களிலேயே இறந்துவிட்டனர்.
டாக்டர் ஜான் ஜாங்!
நியூயார்க்கில் உள்ள டாக்டர் ஜான் ஜாங் தான் த்ரீ பேரன்ட் டெக்னிக்கை பயன்படுத்தியுள்ளார். இவரது அணி, தாயின் முட்டையின் கருவை எடுத்து, தானம் செய்யப்பட்ட மற்றொரு பெண்ணின் முட்டையில் (கரு நீக்கப்பட்ட முட்டை) சேர்த்து கருத்தரிக்க வைக்கின்றனர்.
அமெரிக்காவில் அனுமதி இல்லை!
இந்த முறையில் கருத்தரிக்க வைக்க அமெரிக்காவில் அனுமதி இல்லை என்பதால், எந்த தடையும் இல்லாத மெக்சிக்கோவிற்கு சென்று இந்த புதிய முறையை பரிசோதனை செய்துள்ளனர். ஒரு உயிரை காக்க எதுவும் நியாயம் தாம் என்கிறார் மருத்துவர்.
தடைகளும், வரவேற்புகளும்!
ஒருசில நாடுகள் இந்த முறையை தடை செய்து வைத்திருந்தாலும். பல ஆராய்ச்சியாளர்கள் இந்த முறைக்கு வரவேற்ப்பு அளித்துள்ளனர்.