26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
ult 1
அழகு குறிப்புகள்

தெரிந்துகொள்வோமா? மீன் வறுவல் போன்று வாழைக்காய் வறுவல் செய்ய வேண்டுமா?

வாழைக்காய் பிடிக்காதவர்களுக்கு கூட இந்த வகையில் செய்து கொடுத்தால் ஒரு பீஸ் கூட மிஞ்சாது. மிகவும் எளிதாக செய்யக் கூடிய இந்த வாழைக்காய் வறுவல் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்….

தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 3,
மிளகாய்த்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
சோம்புத்தூள் – அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
கான்பிளவர் மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – வறுக்க தேவையான அளவிற்கு,
உப்பு – தேவைக்கு ஏற்ப.
செய்முறை

வாழைக்காய் வறுவல் செய்ய அதிகபட்சம் 30 நிமிடம் ஆகும். இதனை ஆறு பேருக்கு பரிமாறலாம். பஜ்ஜி சுட வாழைக்காயை பட்டை பட்டையாக சீவுவது போல இதற்கும் பட்டை பட்டையாக நீளமாக மெல்லியதாக நறுக்கி தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

அப்போது தான் வாழைக்காய் கறுத்துப் போகாமல் வெள்ளையாகவே இருக்கும். பின் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். கொதி வந்ததும் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய்களை சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். சூட்டிலேயே வாழைக்காய் வெந்து விடும். குறைந்தது பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை அப்படியே மூடி வைக்கவும்.

அதன் பிறகு ஒரு ஒரு வாழை காய்களையும் தனி தனியாக எடுத்து ஒரு தட்டில் உலர வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் சோம்பு தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து லேசாக பிரட்டி எடுக்கவும். கைகள் வைக்காமல் தட்டை சுழற்றி சுழற்றி எல்லா இடங்களிலும் மசாலா படும்படி செய்யுங்கள்.

பின்னர் ஒரு பௌலில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் கான்பிளவர் மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும். இந்த கலவையை மசாலாவுடன் சேர்த்து நன்கு எல்லா இடங்களிலும் தடவி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் குறைந்தது ஒரு மணி நேரமாவது அப்படியே மூடி வைத்து விடுங்கள்.

மசாலாக்கள் அத்தனையும் அதில் இறங்கி நன்கு ஊற வேண்டும், அப்பொழுது தான் வாழைக்காய் ஃபிஷ் ஃப்ரை செய்யும் பொழுது சுவையாக இருக்கும். ஒரு மணி நேரம் கழித்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சுட வைத்துக் கொள்ளுங்கள். அல்லது தவா பயன்படுத்துபவர்கள் அதில் லேசாக நல்லெண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.

பின்னர் ஒவ்வொரு வாழைக்காய்களை எடுத்து மீனை எப்படி வறுப்பீர்களோ! அதே போல இரண்டு புறமும் நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். மிகவும் மொறுமொறுவென்று மீனை போலவே பார்ப்பதற்கு தோற்றமளிக்கும் இந்த வாழைக்காயை யாருமே பிடிக்காது என்று கூறாமல் சாப்பிட்டு விடுவார்கள்.

Related posts

இந்த பழக்கவழக்கங்கள்தான் உடல் பருமனாவதற்கு காரணம்.!

nathan

beauty tips .. முகப்பரு தழும்புகள் நீக்கும் முறைகள்

nathan

என்றும் இளமையாக இருக்க சில சிறந்த உணவுகள்! நீங்கள் பின்பற்றுங்கள்…

nathan

இதோ சில வழிகள்! முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமையைப் போக்கி, சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்ட..!

nathan

சருமத்திற்கு சில எளிய வீட்டு பராமரிப்பு முறை!…

sangika

எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.

nathan

தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து ஸ்கரப் செய்ய 2 எளிய வழிகள்

nathan

முகத்தின் குறைகளை எப்படி சரிசெய்வது?

nathan

இறந்த செல்களை அகற்றும் சர்க்கரை ஃபேஸ் பேக்கை எவ்வாறு செய்வது என்பதை பார்ப்போம்.

nathan