28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
superfoods
ஆரோக்கிய உணவு

தெரிந்துகொள்வோமா? வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க உதவும் 25 ஆரோக்கிய உணவுகள்!

நாம் ஏன் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும்? வேறு எதுக்கு வாழ்நாள் முழுக்க உடல் வலிமையோட இருக்க தான். சரி என்ன உணவு சாப்பிட்;டால் ஆரோக்கியமாக இருக்கலாம். நாம் தினசரி சாப்பிடுகிற எல்லா உணவும் சிறந்த உணவென்று நினைக்கிறீர்களா? கிடையவே கிடையாது. சில உணவுகளில் நிறைய ஊட்டசத்து இருக்கும். சில உணவுகளில் வெறும் கலோரி மட்டும் தான் இருக்கும். பின் எந்த வகையான உணவு சிறந்த உணவு? எந்தெந்த உணவுகள் தினசரி சாப்பிட்டால் நாம் உடல் வலிமையோட நிறைய நாள் உயிர்வாழலாம்?

தற்போதய ஃபாஸ்ட் ஃபுட் உணவு கலாச்சாரத்தினால் இயற்கை உணவுகளை விட பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தான் நாம் நிறையவே உட்கொள்கிறோம். இதனால் தான் இப்போது தெருவுக்கு தெரு பெட்டிக் கடைகளை விட அதிகமாய் கிளீனிக்கும் ஆஸ்பத்திரிகளும் நிறைந்திருக்கின்றன. இதில் இருந்து வேறுப்பட்டு நீங்கள் திடகாத்திரமாக திகழவேண்டுமா? இந்த கட்டுரையை படிங்க…

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியில் அப்படி என்ன இருக்கிறது என கேட்கிறீர்களா? நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கே மற்றும் மாங்கனீஸ் போன்ற சத்துகள் நிறைந்து உள்ளதால் தினமும் ப்ளூபெர்ரி சாப்பிட்டு வந்தால் உடல்நலத்திற்கு நல்லது.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம், இந்த பெயரைக் கேட்டதும் நாவில் எச்சில் ஊராட்டி உங்கள் நாக்கில் தான் எதோ பிரச்சனை. வெயில் காலத்திற்கு உகந்த பழம் இந்த அன்னாசிப்பழம். அதுவும் உப்பும் மிளகாத்தூளயும் சேர்த்து சாப்பிட்டால் சொல்லவா வேண்டும். சரி இதில் என்ன சத்தெல்லாம் இருக்கிறது? வைட்டமின் சி மற்றும் பி6, மாங்கனீஸ், தாதுக்கள், நார்சத்து போன்ற ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளது.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பழம் பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஸ்ட்ராபெர்ரி பிரியர்களுக்கான இன்ப செய்தி என்னவெனில் மிகவும் ருசிகரமான ஸ்ட்ராபெர்ரியில் மாங்கனீஸ், வைட்டமின் சி, ஐயோடின் போன்ற சத்துகள் கொண்டுள்ளன. ஸ்ட்ராபெர்ரியை வாரம் ஒருமுறை சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது.

ஆளிவிதை

இதுவரை உங்கள் உணவுகளில் ஆளிவிதையை உபயோகப்படுத்த மறந்திருந்தால் மிகவும் ஊட்டசத்து மிகுந்த ஆளிவிதையை இனிவரும் நாள்முதல் பயன்ப்படுத்த துவங்குங்கள். ஆளிவிதையில் வைட்டமின் பி1, மாங்கனீஸ், நார்சத்து, மெக்னீசியம் மற்றும் ஒமேகா 3 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

வெண்ணெய் பழம் (அவகேடோ)

ஊட்டசத்து நிறைந்த உணவுகளில் வெண்ணெய் பழம் எனப்படம் அவகேடோ குறிப்பிடத்தக்க சிறந்த ஒன்றாகும். உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் தின்பண்டங்களுக்கு பதிலாக அவகேடோ உண்பது நல்லது. இதில் நார்சத்து, வைட்டமின் கே, சி மற்றும் பி5 போன்ற சத்துகள் அதிகம் உள்ளது.

கேரட்

பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி மற்றும் கே, நார்சத்து மிகுந்துள்ள கேரட் உடல்நலத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. முக்கியமாக தினசரி கேரட் சாப்பிடுவது கண்பார்வைக்கு நல்லது. கேரட்டை பழரசமாகவோ, நேரடியாகவோ அல்லது உணவோடு சமைத்தோ உட்கொள்வது நல்லது.

கேல்

பச்சை காய்கறிகள் உடல்நலத்திற்கு எப்போதும் நன்மை விளைவிக்கும் உணவாகும். அதிலும் இது ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். இதில் வைட்டமின் ஏ, கே, மற்றும் சி, மாங்கனீஸ் மற்றும் நார்சத்துகள் அடங்கியுள்ளன.

பசலைக்கீரை

பசலைக்கீரையை தினசரி உணவில் உட்கொள்வது நல்லதாகும். கீரை வகைகளில் பசலைக்கீரை மிகவும் ஆரோக்கியமான உணவு. இதில் வைட்டமின் ஏ, கே, மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.

ஓட்ஸ்

பல ஊட்டசத்து நிபுணர்கள் ஓட்ஸினை காலை உணவாக உட்கொள்ள அறிவுறை கூறுவர். ஏனெனில் ஓட்ஸின் மூலமாக மாங்கனீஸ், நார்ச்சத்து, செலினியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துகள் அதிக அளவில் இருக்கின்றன.

தினை

40 கிரேம் தினையில் மாங்கனீஸ், மெக்னீஸியம், பாஸ்பரஸ் மற்றும் ட்ரிப்டோஃபன் போன்ற சத்துகள் அடங்கியுள்ளன.

பருப்பு

இந்திய உணவில் பருப்பு ருசிக்காக சேர்க்கப்படும் ஓர் பொருள் ஆகும். பருப்பில் நிறைய கனிமச்சத்துகளும், நார்சத்துகளும் நிறைந்துள்ளன. அப்படிப்பட்ட பருப்பு இல்லாமல் சாம்பாரினை ருசிக்க இயலுமா என்ன?

சோயா பீன்ஸ்

சைவ உணவுகளில் புரதச்சத்து நிரம்பிய உணவினை விரும்புவோர் சோயா பீன்ஸினை தேர்வு செய்யலாம். இதில் இரும்புச்சத்து, மாங்கனீஸ், புரதம் போன்றவை அதிக அளவில் உள்ளன.

மாட்டிறைச்சி

சிலருக்கு மாட்டிறைச்சி உண்பதென்பதில் அதிக பிரியம் இருக்கும். மாட்டிறைச்சியில் புரதம், வைட்டமின் பி3, செலினியம் போன்ற சத்துகள் அதிகமாய் இருக்கின்றது.

சிக்கன்

இறைச்சி வகைகளில் சிக்கன் பெரும்பாளானவர் விரும்பும் உணவாகும். மிக மிக ருசியான உணவென்பதால் பலரால் விரும்பி உண்ணப்படும் உணவு சிக்கன். சிக்கனில் புரதம், செலினியம், வைட்டமின் பி 3 மற்றும் பி6 போன்ற சத்துகள் அடங்கியுள்ளன.

சால்மன் மீன்

மீன் வகைகளில் சால்மன் மீன் மிக சிறந்த உணவாகும். இதில் வைட்டமின் பி12 மற்றும் டி. ட்ரிப்டொஃபன் மற்றும் புரதம் போன்ற சத்தகள் நிறைந்துள்ளன.

தக்காளி

தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளன. அதுமட்டுமில்லாது பொட்டாசியம் மற்றும் நாரச்சத்துகளும் தக்காளி வழங்குகிறது. இந்திய உணவுகளில் தக்காளியின்றி உணவு சமைப்பது என்பது இன்றியமையாத ஒன்றாகும். ஏனெனில் இது உணவின் ருசியை அதிகரிக்க உதவுகிறது.

இஞ்சி

இஞ்சி பல வேறுப்பட்ட வியாதிகளுக்கு நோய் நிவாரணியாய் பயன்படுகிறது. இதை தேனீரோடு உட்கொள்வது உடல்நலத்திற்கு நன்மை தரும்.

சீரகம்

இந்திய உணவில் அதிகமாய் சேர்க்கப்படும் பொருட்களில் சீரகமும் ஒன்றாகும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் குணம் வாய்ந்தது. அதுமட்டுமின்றி இதில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்துகள் நிறையவுள்ளன.

பப்பாளி

ருசி மட்டுமின்றி ஊட்டச்சத்துகளும் நிரம்பிய உணவு பப்பாளி. இதில், வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ உள்ளன. சருமம் மற்றும் நோய் எதிர்ப்பிற்கு மிக அருமையான உணவு பப்பாளி.

மஞ்சள்

மஞ்சளில் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பி6 தோள் சார்ந்த நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. மற்றும் முகப்பொழிவடையவும் பயனளிக்கிறது.

முட்டை

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் உணவு முட்டை. இதில் அதிகளவில் புரதசத்து நிறைந்துள்ளது.

பாதாம்

பாதாமில் இருக்கும் ஊட்டசத்துகள் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஈ, மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்துகள் ஆகும்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் பல்வேறு வகையிலான வைட்டமின் சத்துகளும், கனிமசத்துகளும் உள்ளன. அதுமட்டுமின்றி பல வகையிலான நோய்களை எதிர்த்துப் போராட உடலுக்கு வலிமையளிக்கிறது.

பூண்டு

பூண்டிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி நம்மை பல வகையிலான நோய்களிலிருந்து காத்திட உதவுகிறது. இரத்தக்கொதிப்பிற்கு பூண்டு ஒரு நல்ல இயற்கை நிவாரணம் ஆகும்.

காலிஃப்ளவர்

காலிஃப்ளவரில் அதிக அளவில் வைட்டமின் மற்றும் கனிம சத்துகள் உள்ளன. இது புற்றுநோயினை எதர்த்து போராட உதவுகிறது. அதுமட்டுமின்றி பல வகைகளில் உடல்நலத்தினை காத்திட காலிஃப்ளவர் உதவுகிறது.

Related posts

உங்களுக்கு தெரியுமா உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்….!

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்தத்தில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் வெங்காயம் ..!

nathan

தினமும் ஆண்கள் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் பெறும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

nathan

கோக் குடிப்பதை நிறுத்தியதால் 50 கிலோ எடை குறைத்த பெண்மணி!!!

nathan

மூளைக்கு சுறுசுறுப்பு தரும்!

nathan

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோயாளிகள் முட்டைகோஸ் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!!!!

nathan

இட்லி மற்றும் தோசைக்கு பொருத்தமாக இருக்கும் சட்னிக்கள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்பிணி பெண்கள் இறாலை சாப்பிடலாமா.?!

nathan

சூப்பர் சத்து… சிறுதானியப் பால்!

nathan