இன்றைய காலக்கட்டத்தில் வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைப்பது என்பது நிறைய பேருக்கு சிக்கலான காரியமாக உள்ளது.
இதற்காக பலர் செயற்றை வழிகளையே நாடுகின்றனர். இதனை எளிய முறையில் கரைக்க ஒரு சில வகை பானங்கள் உள்ளன. இவை சீரான குடல் ஆரோக்கியத்திற்கும், அதேநேரத்தில் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
கொழுப்பு பானங்களை குடித்து வரும் போது அதிக கொழுப்பு செல்களை உடைக்க முடியும். இது உங்க இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது
அந்தவகையில் தற்போது கொழுப்பை எரிக்கும் இந்த 5 பானங்களை எப்படி தயாரிக்கலாம் என அறிவோம்.
1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் 1 கப் வெதுவெதுப்பான நீர்,1 தேக்கரண்டி மூல தேன் 1 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு என நான்கு பொருட்களையும் ஒன்றாக கலந்து, வாரத்திற்கு 3-7 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்
1 டம்ளர் தண்ணீர் உடன் 1/4 பங்கு லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளுங்கள் அதனுடன் சுவைக்கு 1 டீ ஸ்பூன் தேன் அல்லது இஞ்சி சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இது உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆன்டி பாக்டீரியல் தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது. அதே மாதிரி எலுமிச்சை மட்டுமில்லாது பிற சிட்ரஸ் பழங்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
1 கப் க்ரீன் டீ, கொஞ்சம் சுடுநீர், ஒரு கப், 1/2 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ தூள் எடுத்துக் கொள்ளுங்கள். பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதில் க்ரீன் டீத்தூளை போட்டு கொதிக்க விடுங்கள். 45 நிமிடங்கள் கொதிக்க வேண்டும். பிறகு வடிகட்டி குடியுங்கள். தேன் சேர்ப்பது கூடுதல் சுவை அளிக்கும்.
பச்சை காபி கொட்டைகள் மற்றும் லேசாக வறுத்த காபி கொட்டைகளில் குளுரோஜெனிக் அமிலங்கள் உள்ளன. இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தவும், எடையை குறைக்க உதவும் பாலிபினால்கள் இதில் உள்ளனஎனவே தினமும் காபி குடிப்பது உங்க எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
உடல் எடையை குறைப்பதில் நீர் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு நீர் அருந்துவது உங்க பசியை குறைத்து உடல் எடையை குறைக்க உதவி செய்யும். குளிர்ந்த நீர் உங்க உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.