அதிக எடை, அதிக நேரம் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வபர்களுக்கு முதுகு வலி பிரச்சனை இருக்கும். அதிக நேரம் நின்றிருத்தால் முதுகு வலிக்க ஆரம்பிக்கும். இவர்கள் இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து 20 நிமிடங்கள் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
இந்த பயிற்சியுடன் சில வார்ம்அப் பயிற்சிகளையும் செய்து வரவேண்டும். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களுக்கு நடுவில் அரை அடி இடைவெளி விட்டு, நேராக நின்று, இரு கைகளையும் மேலே உயர்த்தி, உள்ளங்கை மேலே தெரிவது போல் கோத்துப்பிடித்து, பொறுமையாக இடது பக்கம் சாய வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவேண்டும். இதே போல் வலது பக்கமும் சாய வேண்டும். இரு பக்கமும் 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: முதுகுத்தண்டில் இறுக்கம் குறையும். மேலும், இடுப்பில் இருந்து மார்பு வரை உள்ள எலும்புகள் விரிவடைவதால், இடுப்புப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும். முதுகெலும்பு வலுவடையும்.