28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
01 sunsamayal chicken cutlet
சிற்றுண்டி வகைகள்

சிக்கன் உருளைக் கிழங்கு கட்லெட்

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி

வெங்காயத் தாள் – 1

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

மல்லித் தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

ஜீரகத் தூள் – 1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி

சிக்கன் மின்ஸ் – 300 கிராம்

உருளைக்கிழங்கு – 1 (வேக வைத்தது)

உப்பு – தேவையான அளவு

மல்லித் தளை – 3 மேஜைக்கரண்டி

எலுமிச்சை சாறு – 3 மேஜைக்கரண்டி

மைதா மாவு – 3 மேஜைக்கரண்டி

பிரட் தூள் – 2 மேஜைக்கரண்டி

எண்ணெய் – பொரிக்க
01 sunsamayal chicken cutlet

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

பின்பு அதில் வெங்காயத் தாள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்

பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் கிளறவும்

பச்சை மிளகாய் சேர்க்கவும்

பின்பு அனைத்து மசாலாக்களையும் சேர்க்கவும்

பின்பு கரம் மசாலா தூள் சேர்க்கவும்

பின்பு உப்பு சேர்க்கவும்

சிக்கன் மின்ஸ் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்

அவற்றை சிறிது நேரம் வேக வைக்கவும்

அவை பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும்

பின்பு அதனுடன் மல்லித் தளை சேர்க்கவும்

பின்பு எலுமிச்சை சாறு சேர்க்கவும்

பின்பு வேக வைத்த உருளைக் கிழங்கை எடுத்துக் கொள்ளவும்

அதனை நன்கு மசித்துக் கொள்ளவும்

பின்பு அதனுடன் வதக்கிய மசாலாவை சேர்க்கவும்

அவற்றை கையால் நன்கு பிசையவும்

பின்பு அதனுடன் பிரட் தூள்களை சேர்த்து நன்கு பிசையவும்

பின்பு அதிலிருந்து சிறிய பகுதி எடுத்து அதனை பந்து போன்று உருட்டிக் கொள்ளவும்

பின்பு அதனை தட்டையாக்கவும்

பின்பு மைதா மாவை எடுத்துக் கொள்ளவும்

அதனுடன் சிறிது நீா் சேர்த்து நன்கு கலக்கவும்

பிரட் தூளை எடுத்துக் கொள்ளவும்

பின்பு செய்து வைத்திருக்கும் கட்லெட்டை மைதா மாவில் முக்கி எடுக்கவும்

பின்பு அதனை பிரட் தூளில் பிரட்டி எடுக்கவும்

அனைத்து கட்லெட்டுகளையும் மாவில் முக்கி எடுத்து அவற்றை 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

பின்பு கட்லெட்டை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்

பொன்னிறமாக பொரிக்கவும்

பின்பு அதனை எடுத்து பேப்பர் டவ்வலில் வைக்கவும்

பின்பு அதனை பரிமாறவும்

Related posts

சத்தான கம்பு – காலிபிளவர் அடை

nathan

சுவையான சுண்டல் கிரேவி

nathan

குழந்தைகளுக்கு பிடித்தமான சென்னா சாட்

nathan

வெஜிடபிள் கோதுமை ரவா உப்புமா

nathan

சுவையான பட்டாணி தோசை

nathan

மிரியாலு பப்பு

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான கைமா இட்லி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் முந்திரி பக்கோடா

nathan

எடையை குறைக்க ஓட்ஸ் பணியாரம்

nathan