30.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
சிற்றுண்டி வகைகள்

சுவையான வெங்காய பொடி தோசை

எப்போதும் ஒரே மாதிரி தோசை சுட்டு அலுத்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக கடைகளில் விற்கப்படும் வெங்காய பொடி தோசையை செய்து சுவையுங்கள்.

சுவையான வெங்காய பொடி தோசை
தேவையான பொருட்கள் :

தோசை மாவு – 1 கப்
இட்லி பொடி – தேவையான அளவு
வெங்காயம் – 1
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை ஊற்றி, மெல்லிய தோசையாக சுடவும்.

* பின்னர் அதன் மேல் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி மற்றும் இட்லி பொடி தூவி, மேலே எண்ணெய் ஊற்றி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.

* பின்பு தோசையை திருப்பி போட்டு, 1 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறினால், வெங்காய பொடி தோசை ரெடி!!!

* இதற்கு தொட்டு கொள்ள எதுவும் வேண்டாம். சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Related posts

தினை இனிப்புப் பொங்கல்

nathan

சுவையான சத்தான பீட்ரூட் சப்பாத்தி

nathan

முட்டைக்கோஸ் பக்கோடா செய்வது எப்படி

nathan

சுவையான சத்தான உளுந்து கார புட்டு

nathan

சுவையான உருளைக்கிழங்கு சமோசா

nathan

ஓட்ஸ் குழி பணியாரம்

nathan

குழந்தைகளுக்கான குளுகுளு சாக்லேட் புட்டிங்

nathan

பிரெட் மசாலா

nathan

சத்தான மிளகு அடை

nathan