25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
3459 oats
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா காலையில் ஓட்ஸை உணவாக உட்கொண்டு வருவதால் கிடைக்கும் 10 நன்மைகள்!!!

இன்றைய பரபரப்பான உலகத்தில் நாம் செய்யும் பல்வேறு வேலைகளுக்கு நேரம் என்பதே போதுமானதாக இருப்பதில்லை. இந்த களேபரத்தில் நாம் சரியான உணவை, சரியான நேரத்தில் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. எதிலும் வேகத்தை எதிர்ப்பார்க்கும் நாம் உணவையும் வேகமாக எதிர்ப்பார்க்க ஆரம்பித்து விட்டோம். அப்படி தலைத்தூக்கியது தான் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம். ஆனால் அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றி நம்மில் பல பேர் இன்று உணர்ந்து கொண்டோம். அதற்கான மாற்றாக நமக்கு கிடைத்தது தான் ஓட்ஸ். துரிதமாக உண்ண வேண்டுமானால் இதனை தாராளமாக தேர்ந்தெடுக்கலாம். நொடிப்பொழுதில் தயார் செய்து சாப்பிட்டு விடவும் செய்யலாம்.

ஓட்ஸ் என்பது உங்கள் உடல் நலத்தை மேம்படுத்தும் மிகச்சிறந்த முழு தானிய காலை உணவாக விளங்குகிறது. இந்த தானியத்தில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது. மேலும் உங்கள் உடல்நலத்திற்கு தேவையான சக்தி வாய்ந்த ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது.

ஓட்ஸ் உணவால் கிடைக்கும் உடல்நல பயன்களை ஊக்குவிக்க நட்ஸ், பழங்கள் அல்லது மசாலாக்களை அதில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்த்துக் கொள்ளாதீர்கள். மாறாக, பழங்கள் மற்றும் மசாலாக்களின் இயற்கையான நறுமண சுவைகள் அதன் சுவையை மேம்படுத்தும். ஓட்ஸ் உணவால் அப்படி என்ன தான் பயன் கிடைக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? தொடர்ந்து படியுங்கள்!

கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

ஓட்ஸில் உள்ள நார்ச்சத்தில் லிப்பிட் கொழுப்பை குறைக்கும் நன்மைகள் உள்ளது. இதிலுள்ள கரையத்தக்க நார்ச்சத்து, கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, கொலஸ்ட்ராலை உங்கள் குடல் உறிஞ்சுவதையும் குறைக்கும். கூடுதலாக, ஓட்ஸில் அவெனாந்த்ரமைட் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது LDL விஷத்தன்மைக்கு எதிராக பாதுகாக்கும். அதனால் கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமானால், ஓட்ஸ் உணவுடன் ஆரஞ்சு பழம் போன்ற வைட்டமின் சி வளமையாக உள்ள உணவுகளையும் சேர்த்து உண்ணுங்கள்.

இதய குழலிய நோய் இடர்பாட்டை குறைக்கும்

ஓட்ஸ் உணவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ளது. இது இயக்க உறுப்புகளை எதிர்த்து போராடும். அதே போல் மாரடைப்பு ஏற்பட காரணமாக இருக்கும் தமனித் தடிப்பை உண்டாக்கும் விஷத்தன்மை அழுத்தம் மற்றும் அழற்சியையும் இது குறைக்கும்.

மேலும் ஓட்ஸில் உள்ள லிக்னன்ஸ் இதய நோய்களைத் தடுக்கும். இதிலுள்ள பீட்டா-க்ளுக்கான் ஆரோக்கியமான இதயத்தை மேம்படுத்தும். அதேப்போல் குருதியூட்ட குறைக்கான அறுவை சிகிச்சையையும் இது மேம்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறுதி மாதவிடாய்க்கு பிறகு பெண்களுக்கு இதயகுழலிய பயன்களை அளிக்கவும் இது அருமையான உணவாக விளங்குகிறது.

உடல் எடை குறைப்பிற்கு உதவிடும்

உடல் எடையை குறைக்க படாத பாடுபடுபவர்களுக்கு ஓட்ஸ் ஒரு சிறந்த காலை உணவாக விளங்குகிறது. ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் இது உதவிடும். வளமையான புரதம் மற்றும் நார்ச்சத்தை இது கொண்டுள்ளதால், இது உங்கள் வயிறை நிறையச் செய்து உங்களை திருப்தியாக்கும்.

மற்ற தானியங்களை விட ஓட்ஸ் உங்கள் வயிற்றை அதிகமாக நிறையச்செய்யும் என 2013 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. சுவைமணம் இல்லாத ஓட்ஸை, ஓட்ஸ் கலந்த குளிர்ந்த தானியங்களுடன் ஒப்பிட்டு பார்த்த போது, சுவைமணம் இல்லாத ஓட்ஸே வயிற்றை அதிகமாக நிறையச் செய்து, ஆற்றலை அதிகரிக்க மற்ற உணவை நாடுவது குறைந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையை சீராக்கும்

ஓட்ஸில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகமாக உள்ளது. காலையில் உண்ணக்கூடிய மற்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில், இது நிலையான ஆற்றலை அளிக்கும் மூலமாக விளங்குகிறது. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், உங்கள் உடல் அதை மெதுவாக செரிக்க செய்யும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையில் திடீர் உயர்வு இருக்காது. ஓட்ஸ் போன்ற முழு தானியங்களை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால், டைப் 2 சர்க்கரை நோய் உண்டாவது குறையும் எனவும் அறிவியல் சார்ந்த ஆய்வுகள் கூறுகிறது.

இரத்த கொதிப்பை குறைக்கும்

மிதமான இரத்த கொதிப்பை உள்ளவர்களுக்கு சுருக்கியக்க மற்றும் உச்சிவிரிவு இரத்த கொதிப்பை குறைக்க ஓட்ஸ் உதவுகிறது என 2002 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறியுள்ளது. இரத்த கொதிப்பை குறிப்பாக கட்டுப்படுத்த, ஓட்ஸ் தவிடு மற்றும் முழு தானிய ஓட்ஸ் உதவுகிறது. கூடுதலாக, ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் இரத்த உறைக்கட்டி ஏற்படுவதை குறைக்கும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

முழு ஓட்ஸ் மற்றும் இதர முழு தானியங்களை தினமும் உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால், உங்கள் இரத்த அழுத்தம் கட்டுப்பட்டு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.

மார்பக புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும்

ஓட்ஸில் லிக்னன்கள் மற்றும் என்ட்ரொலாக்டோன் போன்ற பைட்டோ-ரசாயனங்கள் வளமையாக உள்ளது. இது புற்றுநோய்களுக்கு எதிராக உங்களை பாதுகாக்கும். குறிப்பாக, மார்பக புற்றுநோய் மற்றும் இதர ஹார்மோன் சம்பந்தப்பட்ட புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்க என்ட்ரொலாக்டோன் உதவுகிறது. கூடுதலாக, ஓட்ஸ், கம்பு மற்றும் அதே போன்ற இதர உணவுகளில் உள்ள கரையத்தக்க நார்ச்சத்துக்கள் மார்பக புற்று அணுக்களின் மீது நேரடியான தாக்கத்தை கொண்டுள்ளது.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

ஓட்ஸில் அதிக நார்ச்சத்து இருப்பதால், அது உங்கள் பெருங்குடல் மற்றும் குடல் சார்ந்த ஆரோக்கியத்திற்கு பல பயன்களை அளிக்கிறது. பெருங்குடல் அழற்சியால் அவதிப்படுபவர்களுக்கு இது மிகவும் நல்லதாகும். மேலும் குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் இது குறைக்கும். கூடுதலாக, மலங்கழித்தல் நன்றாக நடந்திட தூண்டும். அதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் நீங்கும். உடற்குழி நோய் உள்ளவர்கள் கோதுமைக்கு மாற்று உணவாக இந்த முழு தானிய உணவை பயன்படுத்தலாம். இருப்பினும், இதில் சிறிய அளவில் பசையம் இருப்பதால், இதனை மிதமான அளவிலேயே உண்ண வேண்டும். உங்கள் உணவில் நார்ச்சத்தை சேர்த்துக் கொள்ளும் போது, அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அப்போது தான் நார்ச்சத்து அதன் வேலையை ஒழுங்காக செய்ய முடியும்.

மன அழுத்தத்தை அண்ட விடாது

வெதுவெதுப்புடன் இதமளிக்ககூடிய இந்த காலை உணவு உங்களிடம் இருந்து பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் நீக்க உதவும். செரோடோனின் என்ற நரம்பியகடத்துகையின் உற்பத்தியை அதிகரிக்க மூளையை இது தூண்டி விடும். செரோடோனின் தான் உங்கள் மனநிலை, தூக்கம் மற்றும் பசியை கட்டுப்படுத்துவதாகும்.

கூடுதலாக, இதில் மெக்னீசியம் உள்ளதால் உங்கள் தூக்கத்தின் தரம் மேம்பட இது உதவும். இதனால் அமைதி ஏற்படும். இந்த காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் உணவை கொஞ்சம் சாப்பிட்டாலும் போதும், உங்கள் மன அழுத்தம் நீங்கும். உடல் ஆரோக்கியம் மற்றும் மனநிலை பயன்களை அளிக்கும் இந்த உணவின் சுவையை மேம்படுத்த அதனுடன் ப்ளூபெர்ரி பழங்களை சேர்த்துக் கொள்ளலாம். ப்ளூபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி வளமையாக உள்ளதால், மன அழுத்தத்தை போக்க சிறந்த உணவாக அது கருதப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும்

முழு தானிய ஓட்ஸில் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் வளமையாக உள்ளது. டையட்டரி ஃபைபர் இதில் வளமையாக உள்ளது. நோய் எதிர்ப்பு அணுக்கள் செயல்பாடுகளின் மாற்றங்களுடன் இது சம்பந்தப்பட்டுள்ளது. மேலும் ஓட்ஸில் உள்ள பீட்டா-க்ளுக்கான்களில் நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்களும் உள்ளது. நுண்ணுயிர் தொற்றுகளுக்கு எதிராக உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்பட, அதனை மேம்படுத்த பீட்டா-க்ளுக்கான்கள் உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் பயன்களை பெற வேண்டுமானால், சர்க்கரை அதிகமாக கொண்டுள்ள தற்போதைய உடனடி ஓட்ஸ் உணவை தேர்ந்தெடுக்காமல் பழமையான ரோல்ட் ஓட்ஸ் அல்லது ஸ்டீல்-கட் ஓட்ஸை தேர்ந்தெடுங்கள்.

சருமத்தை இதப்படுத்தும்

உண்ணுவதற்கு மட்டுமல்ல ஓட்ஸ். உங்கள் சருமத்தை மென்மையாக வைத்து, அதற்கு நீர்ச்சத்து அளிக்கவும் கூட ஓட்ஸ் உதவுகிறது. ஓட்ஸ் குளியல் மேற்கொண்டால் அரிப்பு, சருமம் சிவத்தல், சரும எரிச்சல் போன்றவைகள் நீங்கும். அனைத்து வகையான சருமங்களுக்கும் இது ஒத்துப்போகும். இதில் அழற்சி எதிர்ப்பி மற்றும் இறந்த தோல்களை நீக்கும் குணங்களும் அடங்கியுள்ளது.

இயற்கையான சுத்தப்படுத்தும் பொருளாக விளங்கும் ஓட்ஸ், சருமத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் எண்ணெய், அழுக்கு மற்றும் மாசுக்களை நீக்கவும் உதவும். மேலும் சூரிய ஒளி பாதிப்பில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க புற ஊதா உறிஞ்சியாகவும் இது செயல்படும்.

Related posts

கர்ப்ப காலத்தில் சப்போட்டா சாப்பிடுவது பாதுகாப்பானதா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

வெண்டைக்காய் சாப்பிட்டால் நல்லா கணக்கு போடலாம்!

nathan

கருச்சிதைவுக்கு காரணமாகிறதா உருளைக்கிழங்கு! – அதிர வைக்கும் அலசல்!

nathan

தெரிஞ்சிக்கங்க… இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டாலாமா? இனி தயவு செய்து இந்த பிழையை மட்டும் இனி செய்யாதீர்கள்!

nathan

உடல் எடையை குறைக்கும் அவகேடோ பழம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஒல்லியாக விடாமல் தடுக்கும் உணவுகள்!!!

nathan

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பாகற்காய் – பாசிப்பருப்பு சூப்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருவளத்தை மேம்படுத்தும் அற்புத ஜூஸ்!

nathan

சுவையாக இருக்கும் கீரை குழம்பு

nathan