25.5 C
Chennai
Sunday, Dec 22, 2024
depression
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த மருந்து மாத்திரைகள் தான் உங்களை கருத்தரிக்க முடியாமல் செய்கிறது என்று தெரியுமா?

நீங்கள் கருத்தரிக்க முயற்சிக்கிறீர்களா? ஆனால் உங்களால் கருத்தரிக்க முடியவில்லையா? அப்படியெனில் உடனே மனம் தளராதீர்கள். ஏனெனில் கருத்தரிப்பதற்கு நீங்கள் உட்கொண்டு வரும் சில மருந்துகளும் இடையூறை ஏற்படுத்தும்.

எனவே நீங்கள் கருத்தரிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள மருந்துகளைத் தவிர்த்திடுங்கள். இதனால் கருத்தரிப்பதில் இடையூறு ஏற்படுவதைத் தடுக்கலாம். ஒருவேளை அம்மருந்துகளை எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தால், உங்கள் மருத்துவரிடம் உங்கள் திட்டம் குறித்து கூறுங்கள்.

ஸ்டெராய்டுகள்

ஆஸ்துமா, ஆர்த்ரிடிஸ் அல்லது லூபஸ் போன்ற பிரச்சனைகளுக்கு ஸ்டெராய்டு மருந்தான prednisolone எடுப்பவரா? ஸ்டெராய்டுகள் கருத்தரிப்பதில் இடையூறை ஏற்படுத்தும். எனவே கருத்தரிக்க நினைப்பவர்கள், அதுகுறித்து பேசுங்கள்.

ஸ்டெராய்டு இல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள்

ஆர்த்ரிடிஸ் மற்றும் முடக்கு வாதம் போன்றவற்றை சரிசெய்ய ஸ்டெராய்டு இல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளான meloxicam and diclofenac போன்றவை ஓவுலேசனில் இடையூறை ஏற்படுத்தும்.

மன இறுக்கத்தை எதிர்க்கும் மருந்துகள்

மன இறுக்கத்தைத் தடுக்கும் மருந்துகள் பாலுணர்ச்சி மற்றும் உறவில் ஈடுபடும் எண்ணத்தைப் பாதிக்கும். எனவே கருத்தரிக்க நினைத்தால், மன இறுக்கத்தைக் குறைக்க வேறுசில வழிகளை நாடுங்கள்.

சைக்ளோபாஸ்பைமடு

சைக்ளோபாஸ்பைமடு என்பது லூபஸ் போன்ற சரும பிரச்சனைக்கான அழற்சி நீக்க மருந்து. இதனை ஒருவர் அதிகம் எடுத்தால், அது ஓவுலேசனில் இடையூறை ஏற்படுத்தி, கருவுற முடியாமல் செய்யும்.

ஆன்டி-சைகோட்டிக்

Amisulpride மற்றும் Risperidone போன்ற ஆன்டி-சைகோடிக் மருந்துகள், பிட்யூட்டரி சுரப்பியை பாதித்து, மாதவிடாய் சுழற்சியை நிறுத்தும் அல்லது இடையூறை உண்டாக்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் அற்புத பழம்!

nathan

“வெரிகோஸ் வெயின்” (varicose veins) பிரச்னைக்கு தீர்வு

nathan

மஞ்சள் பற்களை எப்படி பளீர் பற்களாக மாற்றுவது?

nathan

தண்ணீர் அதிகமாக குடித்தால் ஆபத்தா?

nathan

குழந்தை பிறந்ததும் வேலையை இழக்கும் பெண்கள்

nathan

மூட்டுவலியால் ரொம்ப அவதிப்படுறீங்களா?

nathan

எளிய இயற்கை வைத்தியம் – 50 மருத்துவ குறிப்புகள்!

nathan

உங்கள் கவனத்துக்கு கால் கட்டை விரலில் மட்டும் சுருக்கென்று வலி வருகிறதா?அப்ப இத படிங்க!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்

nathan