இன்றைய நவீன உலகில் பலரும் தங்களது உணவை ரசித்து ருசித்து சாப்பிடுவதில்லை.வேலைக்கு செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் வேக வேகமான சாப்பிட்டு விட்டு செல்பவர்கள் தான் அதிகம்.
பொதுவாக சாப்பிடும் முறை என்று வரும்போது மெதுவாக சாப்பிடுவது மற்றும் வேகமாக சாப்பிடுவது என்று இரண்டு வகை உள்ளது.
பலரும் வேகமாக சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது மிகவும் ஆபத்தான பழக்கமாகும். ஏனெனில் வேகமாக சாப்பிடும்போது அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
அந்தவகையில் வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்களில் முக்கியமான ஒன்று எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஆகும். விரைவாக சாப்பிடுவது பசியைக் கட்டுப்படுத்த உதவும் குடல் ஹார்மோன்களை சீர்குலைத்து உங்களுக்கு முழுமையான உணர்வை ஏற்படுத்தும்.
வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு இன்சுலின் பாதிப்பு ஏற்படும். இதனால் உங்கள் உடல் இன்சுலினை திறம்பட பயன்படுத்த தவறுகிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படலாம்.
இன்சுலின் எதிர்ப்பு வளர்ச்சிதை மாற்ற நோயுடன் தொடர்புடையதாகும். இதனால் சர்க்கரை நோய் மட்டுமின்றி மாரடைப்பு, இதய நோய் போன்ற பல நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது.
வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு நல்ல கொழுப்பு எனப்படும் HDL கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகும். இதனால் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
வேகமாக சாப்பிடுவது இரைப்பை அழற்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் குடல் வீக்கம், கடுமையான வயிற்றுப்புண் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வேகமாக உணவு சாப்பிடுகிறவர்கள் அவர்கள் உணவை சாப்பிடுவதில்லை மாறாக முழுங்கவே செய்கிறார்கள். இதனால் மூச்சுக்குழல் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எப்படி சாப்பிட வேண்டும்?
உங்களின் ஒவ்வொரு உணவிற்கும் குறைந்தது 20 நிமிடமாவது எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் உடலுக்கு மூளைக்கு முழுமையான உணர்வை ஏற்படுத்தும் சிக்னலை அனுப்ப இந்த காலம் கண்டிப்பாக தேவை.
சாப்பிட தொடங்குவதற்கு முன் உங்கள் உணவினை ரசிக்க பழகுங்கள். உணவை உணர்ந்து சாப்பிட்டால் கண்டிப்பாக நீங்கள் சாப்பிட நீண்ட நேரம் எடுத்து கொள்வீர்கள்.
சிறிய துண்டுகளாக எடுத்து நன்கு மென்று சாப்பிடுங்கள். இது நீங்கள் சாப்பிடும் வேகத்தை குறைப்பதுடன் உணவு செரிக்கும் வேகத்தை அதிகரிப்பதுடன் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் வீணாவதையும் தடுக்கிறது.