25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
clearskinremedies
முகப் பராமரிப்பு

பெண்களே உங்க முகத்தில் அழுக்கு அதிகமா இருக்குற மாதிரி இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்

அனைவருக்குமே அழகாக ஜொலிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால் உடல் ஆரோக்கியம் பாழாவதோடு, சரும ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டு, இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது. பொதுவாக உடலிலேயே வயது அதிகரிக்கும் போது மற்ற உறுப்புக்களை விட வேகமாக சருமம் அதன் நெகிழ்வுத்தன்மையை இழந்துவிடும்.

ஒருவர் தங்களின் சருமத்திற்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுக்காமல் போனால், இன்னும் வேகமாக சருமம் முதுமைத் தோற்றத்தைப் பெற்றுவிடும். அதனால் தான் பெண்கள் மாதந்தோறும் தவறாமல் தங்கள் அழகிற்கு என்றே தனியாக பணத்தை செலவிடுகிறார்கள். ஆனால் அழகைப் பராமரிக்க அழகு நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்பதில்லை. நம் வீட்டில் உள்ள மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தாலே போதும்.

 

இப்போது முகத்தின் பொலிவைக் கெடுக்கும் சரும பிரச்சனைகளை விரட்டி, சருமத்தை சுத்தமாகவும் முகத்தை பொலிவோடும் காட்ட உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம். அதைப் படித்து பின்பற்றி நன்மை பெறுங்கள்.

புதினா

புதினாவின் சாற்றினை இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் பெரிய பருக்கள் இருந்தாலும் ஒரே இரவில் சுருங்கிவிடும். இல்லாவிட்டால் புதினா இலைகளை அரைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவலாம். இதனால் சருமம் புத்துணர்ச்சி அடைவதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகளும் நீங்கி, முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.

பப்பாளி

பப்பாளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது காயங்களைக் குணப்படுத்த வல்லது. பப்பாளியைக் கொண்டு அடிக்கடி மாஸ்க் போட்டால், முகம் இளமையோடு இருக்கும். முக்கியமாக பப்பாளி ஃபேஸ் மாஸ்க் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றது. அதற்கு 1/4 கப் கொக்கோ, 2 டீஸ்பூன் க்ரீம், 1/4 கப் கனிந்த பப்பாளி கூழ், 2 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி மற்றும் 1/4 கப் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

வால்நட்ஸ்

வால்நட்ஸ் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த பொருளாக கருதப்படுகிறது. முக்கியமாக வால்நட்ஸ் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் நச்சுக்களை நீக்கக்கூடியது. அதற்கு வால்நட்ஸை அரைத்து பொடி செய்து, 2 டீஸ்பூன் வால்நட்ஸ் பொடியுடன், 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தை நீரில் கழுவி விட்டு, பின் அந்த வால்நட்ஸ் கலவையை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்கரப் செய்ய வேண்டும். முக்கியமாக கண்களைச் சுற்றி தேய்க்காதீர்கள். பின் 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

மஞ்சள்

மஞ்சளில் ஆன்டி-செப்டிக் பண்புகளைத் தவிர, சருமத்தில் உள்ள கருமையைக் குறைக்க உதவக்கூடியது. மஞ்சள் தூளுடன் அன்னாசி சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவினால், கருவளையங்கள் குறையும். சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குவதற்கு மஞ்சள் தூளை கரும்பு சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவ வேண்டும். வறண்ட சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்ய மஞ்சள் தூளுடன் சந்தன பவுடர் சேர்த்து ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் செய்து முகத்தில் தடவ வேண்டும்.

அரிசி மாவு

அரிசி மாவு சரும சுருக்கங்கள் மற்றும் சரும கருமையைப் சரிசெய்யக்கூடியது. அதற்கு 1/4 கப் அரிசி மாவுடன், 1/4 கப் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் அழகு பராமரிப்பு பொருட்களுள் முக்கியமானவை என்பது அனைவருக்குமே தெரியும். முக்கியமாக இந்த கற்றாழை சூரியக் கதிர்களால் சருமத்தில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் பருக்களைப் போக்க உதவுகிறது. அதற்கு தினமும் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

தேன்

தேன் ஒரு இனிப்பான பொருள் மட்டுமின்றி, சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தரக்கூடியது. தேன் சருமத்தில் ஏற்படும் பரு வெடிப்பு மற்றும் தொற்றுக்களைத் தடுக்கும். மேலும் இதில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இத்தகைய தேனை நேரடியாக முகத்தில் தடவி காய்ந்த பின் முகத்தைக் கழுவ, முகம் வறட்சியின்றி பொலிவோடு காணப்படும்.

Related posts

முகப்பரு, வீக்கம் போன்றவற்றை எளியமுறையில் போக்கனுமா?இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

nathan

நீராவி பயன்படுத்தி முக அழகை மேம்படுத்துவதற்கான முறை

nathan

நீங்கள் கற்றாழை தேய்ச்சும் கலராகலையா?இதை முயன்று பாருங்கள்

nathan

வசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா? இதோ டிப்ஸ்

nathan

வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம் பேசியல்

nathan

வறண்ட மற்றும் எண்ணெய் பசை மிக்க முகங்களுக்கு

nathan

சருமத்தின் கரும்புள்ளிகளை நீக்கும் பேக்கிங் சோடா

nathan

எண்ணெய் வடியாத சருமம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? தீர்வுகள் இங்கே

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முகத்தில் அசிங்கமா இருக்கும் கரும்புள்ளிகளை விரட்டுவது எப்படி தெரியுமா?

nathan