28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
dcfyghjk
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

பிளாக்ஹெட்ஸை அகற்ற, நீங்கள் முட்டையின் வெள்ளை பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அழகான மற்றும் கவர்ச்சியான முகம் வேண்டும் என்பது பெண்கள் மட்டுமல்ல, ஆண்களின் விருப்பமாகவும் உள்ளது. ஆண்களும் தங்கள் சருமத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.

தூசி, மண், மாசுபாடு ஆகியவற்றாலும், சருமத்தை ஒழுங்காக கவனித்துக்கொள்ளாததாலும் பிளாக்ஹெட்ஸ் பிரச்சினை உருவாகிறது. ஆனால், இதை எளிதாக வீட்டிலேயே சரி செய்யலாம்.

பிளாக்ஹெட்ஸ் முகத்தில் புள்ளிகள் மற்றும் அடையாளங்களை ஏற்படுத்தும். ஆனால் ஒரே ஒரு முட்டையின் (Eggs) உதவியால் பிளாக்ஹெட்ஸின் சிக்கலை நீக்கலாம். அதை எப்போது எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

பிளாக்ஹெட்ஸை அகற்ற முட்டையின் பயன்பாடு:

பிளாக்ஹெட்ஸை அகற்ற, நீங்கள் முட்டையின் வெள்ளை பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். காலையிலும், பிற்பகலிலும், மாலையிலும் எந்த நேரத்திலும் பிளாக்ஹெட்ஸை அகற்றுவதற்கான இந்த செயல்முறையை நீங்கள் செய்யல்லாம்.
dcfyghjk
பிளாக்ஹெட்ஸை அகற்றுவதற்கான உதவிக்குறிப்புகள்: முட்டை மற்றும் பேக்கிங் சோடா

இதற்கு, நீங்கள் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றை கலந்து ஒரு பேஸ்ட்டாக செய்ய வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் (Face) நன்கு தடவி 5 நிமிடங்கள் கைகளால் லேசாக மசாஜ் செய்யவும். 10 நிமிடங்கள் இப்படி செய்த பிறகு முகத்தை சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

பிளாக்ஹெட்ஸ் அகற்றும் கிரீம்: தேன் மற்றும் முட்டை

முட்டையின் வெள்ளைக்கரு கொண்டு பேஸ்ட் தயாரிக்கும் அளவிற்கு அதில் தேனை (Honey) கலக்க வேண்டும். இப்போது ஒரு பிரஷ்ஷின் உதவியுடன், இந்த பேஸ்டின் இரண்டு மூன்று லேயர்களை முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் உலர விட்டு பின்னர் சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும். பிளாக்ஹெட்ஸை அகற்ற இந்த முறையை நீங்கள் தினமும் பயன்படுத்தலாம்.

பிளாக்ஹெட்ஸ் அகற்றும் தீர்வு: முட்டை மற்றும் ஓட்மீல்

முட்டையின் வெள்ளைக்கரு 2 டீஸ்பூன் மற்றும் ஓட்மீல் 2 தேக்கரண்டி கலந்து பேஸ்ட் தயாரிக்கவும். வட்ட இயக்கத்தில் இந்த பேஸ்ட் கொண்டு முகத்தை மசாஜ் செய்யவும். 10 முதல் 15 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி உலர வைக்கவும்.

பிளாக்ஹெட்ஸை நீக்க: முட்டை மற்றும் சர்க்கரை

1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 2 முட்டைகளின் வெள்ளைக்கரு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் தயாரிக்கவும். இந்த பேஸ்டை முகத்தில் தடவி வட்ட இயக்கத்தில் தேய்க்கவும். மசாஜ் செய்த பிறகு, முகத்தை 10 நிமிடங்கள் விட்டுவிட்டு, பின்னர் சாதாரண தண்ணீரில் கழுவவும்.

குறிப்பு- தோலில் எதையும் பயன்படுத்துவதற்கு முன், பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்று அல்ல. இது கல்வியின் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

Related posts

முகக் கரும்புள்ளிகள் போக்கும் எளிய 5 வழி

nathan

சருமத்தை பாதுகாக்கும் வெந்தய பேஸ் பேக்….

nathan

இந்தியப் பெண்கள் மூக்குத்தி அணிவதன் முக்கியத்துவம் என்ன?தெரிஞ்சிக்கங்க…

nathan

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கான கோடைக்கால ஃபேஸ் பேக்குகள்

nathan

அடேங்கப்பா! அஜித்தின் மனைவி ஷாலினி தங்கையுடன் மாடர்ன் உடையில்…

nathan

பாத அழுத்த சிகிச்சை பறந்து போகுமே உடல் வலிகள் !

nathan

சர்க்கரை வள்ளி கிழங்கு உங்களுக்கு தெரியுமா எண்ணெய் வடியும் சருமத்திற்கு தீர்வு தரும்

nathan

சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் ஃபேஸ் பேக்குகள்!!!

nathan

பெண்களே பொடுகு இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!! ஒரே அலசுல போயிடும்

nathan