27.1 C
Chennai
Tuesday, Dec 3, 2024
19 masala aloo fry
சமையல் குறிப்புகள்

சூப்பரான மசாலா உருளைக்கிழங்கு ப்ரை

உருளைக்கிழங்கு பிரியர்களே! உங்களுக்கு அருமையான சுவையில் ஒரு உருளைக்கிழங்கு ப்ரை ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. இந்த ரெசிபியானது மதிய வேளையில் சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றதாக இருக்கும். மேலும் இதனை 5 நிமிடங்களில் தயார் செய்துவிடலாம்.

அதிலும் இதில் மசாலா பொருட்கள் சேர்த்திருப்பதால், அவை இந்த உருளைக்கிழங்கு ப்ரையின் சுவையை அதிகரித்துக் கொடுக்கும். சரி, இப்போது அந்த மசாலா உருளைக்கிழங்கு ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 2 (தோல் நீக்கி, நீளமாக வெட்டியது)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
ஓமம் – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
சாட் மசாலா – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பல் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஓமம், 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் உருளைக்கிழங்கை போட்டு, அதில் மஞ்சள் தூள், சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை வாணலியில் போட்டு, தீயை குறைவில் வைத்து, சிறிது நேரம் கிளவி விட வேண்டும்.

பிறகு பச்சை மிளகாய் சேர்த்து பிரட்டி, வாணலியை தட்டு கொண்டு மூடி, 10-15 நிமிடம் உருளைக்கிழங்கு நன்கு வேகும் வரை கிளறி இறக்கினால், மசாலா உருளைக்கிழங்கு ப்ரை ரெடி!!!

Related posts

ருசியான முட்டை சப்பாத்தி எப்படி செய்வது?…

sangika

ஆரோக்கியமான ராகி தோசை

nathan

சாதம் மீதி இருக்கா? சூப்பரா கட்லெட் செய்யலாம்!

nathan

நோய்களை அண்டாமல் தடுக்கும் வேர்க்கடலை சாதம் தயார் செய்வது எப்படி?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

செட்டிநாடு மசாலா சீயம்

nathan

தக்காளி பேச்சுலர் ரசம்

nathan

சுவையான ஆப்பம்… இப்படி அரிசி அரைச்சு சுடுங்க!

nathan

புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு

nathan

சுவையான கோவைக்காய் பொரியல்

nathan