ஏதாவது ஒரு சின்ன தலைவலி வந்தால் கூட நம்ம மக்கள் முனகும் முதல் வார்த்தை இந்த சைனஸ் தொல்லை தாங்க முடியலை. சைனஸ் என்பது வழக்கம் போல் இதுவும் ஒரு வியாதி இல்லை. இது நம் வாழ்வின் ஒரு அங்கம். இது நாலு இடங்களில் நம் முகத்தில் இருக்கும் ஒரு அற்புத ஃபில்டர்தான் இந்த சைனஸ். இந்த சைனஸில் இன்ஃபெக்ஷன் ஆனால் தான் சைனசைட்டீஸ் என்பது. என்ன குழப்பமாக இருக்கிறதா சைனஸ், சைனஸைட்டீஸ் என்பது இரு தனி தனி விஷயங்கள் அனால் ஒன்றுடன் ஒன்று சம்பந்தபட்டது.
சைனஸ் என்பது நம் தலை எலும்புகூட்டில் ஜோடியாக காற்று பாக்கெட்கள் / கேவிட்டீஸ் / ஸ்பேஸஸ் மற்றும் இதை டெக்னிக்கலாக “பாரானாசல் சைனைஸஸ்” என டாக்டர்கள் அழைப்பார்கள். நமக்கு நான்கு ஜோடி சைனஸ் கேவிட்டீஸ் உண்டு. ஒவ்வொரு சைனஸுக்கும் ஒரு ஒப்பனிங் இருக்கும். இது நாம் மூக்கின் வழியாக மூச்சு விடும்போது இதன் வழியாகத்தான் நம் உறிஞ்சும் காற்றை சுத்தகரிக்கும். அது போக “மூகஸ்’ எனப்ப்டும் லைனிங்கள் சிறு மயிர்களுடன் இருக்கும் செல்கள் இது கெட்ட மூகஸ்களை நாசிதுவரம் மூலம் வெளிகொண்டுவரும்.
சைனஸ் மொத்தம் நான்கு வகை எனகுறிபிட்டு இருந்தேன். இதை பற்றி பார்ப்போம்.
1. எத்மோயிட் (கண்களுக்கு நடுவே)சைனஸ்: இது நமது மூக்கின் பிரிட்ஜ்க்கு பின்னே இரண்டு கண்களுக்கு நடுவே இருக்கும். இது நம் பிறக்கும் போதே இருக்கும், வளரும் போது அதுவும் வளரும். இந்த கேவிட்டீஸ் பாதிக்கபட்டால் தான் எத்மோய்டிட்டீஸ் வரும்.
2. பிரன்டல் (நெற்றியில்) சைனஸ்: இது நமது கண்களுக்கு மேல் இருக்கும் ஒரு சைனஸ். இது நமக்கு ஏழு வயது ஆகும்போது தான் இந்த சைனஸ் வரும். இது பாதிக்கபட்டால் பிரன்டல் சைனஸ்சைட்டீஸ் வரும்.
3. மாக்ஸில்லரி (கன்னத்தில்) சைனஸ்: இது கன்னத்தின் இடது அல்லது வலது மூக்கின் கீழ் பகுதியில் ஏதாவது ஒரு சைடுதான் இது இருக்கும். இந்த சைனஸ் தான் கெட்ட பாக்டீரியாக்கலால் பாதிக்கபட்டு ஆன்ட்ரைட்டீஸ் எனப்படும்.
4. ஸ்பீனாயிட் (கண்களுக்கு பின்) சைனஸ்: இது நம் கண்களுக்கு பின்னால் உள்ளே இருக்கும் ஒரு சைனஸ் 13 வயதில் வரும் இந்த சைனஸ் பாதிக்கபட்டால் ஸ்பீனாயிட்டீஸ் என அழைக்கபடும்.
Your ads will be inserted here by
Easy Plugin for AdSense.
Please go to the plugin admin page to
Paste your ad code OR
Suppress this ad slot.
பொதுவாக குளிரோ அல்லது வெயிலோ முதலில் பாதிக்கபடுவது நம் முகம் தான் ஆம் இந்த சைனஸ் தான் நம் தலையை வெகு லைட்டாக வைப்பது மட்டுமில்லாமல் நம் ஒரு வித குரலோடு பேசவோ அல்லது பாடவொ இந்த சைனஸ் தான் ரினொஸன்ஸ் தரு. அது போக நம் சுவாசிக்கும் காற்று, ஈரபதத்தை இந்த நான்கு சைனஸ்கள் தான் சுத்தகரித்து நமக்கு ஆக்ஸிஜனை தருகிறது. ஒருவரின் முகம் நல்ல அழகாக இருந்தால் அவர்களுக்கு பெர்ஃபெக்ட் சைனஸ் எண்ரு பொருள். சைனஸ் ஆண்டவன் கொடுத்த ஒரு அற்புத வரப்பிர்சாதம். சைனஸால் பாதிக்கபட்டால் தலை பாரமாக ஆகும் அது போக அடுத்ததாக சைனஸைட்டீஸ், அக்யூட் சைனசைட்டீஸ் பகுதியில் பாதிப்பை பற்றி பார்ப்போம்.
சைனஸ் பாதிக்கப்டுவது அடிக்கடி குளிர் தண்னீரில் முகம் கழுவி துடைக்காமல் விடுதல் வெளியில் மாசு உள்ள இடங்களுக்கு போய் வந்தால் முகம் கழுவாமல் படுப்பது, ஏசியின் முன் படுப்பது, சிலருக்கு தரையில் படுத்தால் கூட வரும். மாசு தான் முதல் எதிரி. வெளியே போய் வந்தால் முகத்தை ஒரு பஞ்சில் துடைத்து எடுத்து பிறகு முகம் கழுவினால் மாசு உள்ளே செல்வதை தடுக்கமுடியும்.
ஜன்னால் இல்லாத வீடுகளில் டிஹிமிடிஃபையர் வைத்தால் நல்லது. சிலருக்கு தலைவலி வந்தால் கண்டுகொள்ள மாட்டார்கள் ஆனால் மஞ்சள் சளி கொஞ்சம் நாற்றத்துடன் வந்தாலே சுதாரித்து கொள்ளுங்கள் உங்களுக்கு சைனஸ் இன்ஃபக்ஷென் இருக்கிறது என்று. சிலருக்கு கண்களின் மேல் கண்களுக்குள் , ஒரு அழுத்தமான வலி இருந்தால் கண்டிப்பாக சைனஸ் இன்ஃபெக்ஷன் தான். சாதாரனகுளிர் மற்றும் ஜுரத்தில் அரம்பித்து இன்ஃபெக்ஷன் இருந்தால் இந்த கோல்ட் போகவே போகாது. சிலருக்கு பத்து நிமிடம் கூட ஏசியில் இருக்கவே முடியாது.