25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
06 coconut oil image
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா பலவித பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு தரும் தேங்காய் எண்ணெய்!!!

நீங்கள் சளியால் அவதிப்படுகிறீர்களா? பொடுகு மற்றும் முடி உதிர்தல் ஆகிய பிரச்சனைகளால் தூக்கத்தை இழந்துள்ளீர்களா? உங்கள் உடலில் இருந்து வீசும் துர்நாற்றம் உங்கள் நண்பர்களை தெறித்து ஓட வைக்கிறதா? கவலையை விடுங்கள்; இந்த பொதுவான பிரச்சனைகளுக்கான தீர்வுகள் எல்லாம் தேங்காய் எண்ணெய் பாட்டிலில் ஒளிந்திருக்கிறது.

பொதுவாக தேங்காயை பலவித காரணத்திற்காக பயன்படுத்தி வருகிறோம். தெய்வீக காரியங்கள் அனைத்திற்கும் தேங்காய் தான் முன்னிறுத்தப்படுகிறது. தேங்காய் இல்லாத பூஜைகளும் சடங்குகளுமே கிடையாது. அதேப்போல் தான் சமையலும். நம் அன்றாட சமையலில் தேங்காய் பயன்பாடு இல்லாமல் இருக்கவே இருக்காது. அதன் பாலை கூட நாம் பயன்படுத்துகிறோம். குடல் புண்கள் ஆகியவைகளுக்கு தேங்காய் பால் மிகவும் நல்லதாகும்.

இப்படி பல வழிகளில் பயன்படுத்தும் தேங்காயின் உடல்நல பயன்கள் ஏராளம். தேங்காயில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் கூட பலவித பயன்கள் ஒளிந்திருக்கிறது. நாம் தலைக்கு தேய்ப்பது பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்யே. இதுப்போக உடல் மசாஜ் போன்றவைகளுக்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவையெல்லாம் நாம் அறிந்த ஒன்றே. ஆனால் மேல் கூறிய பிரச்சனைகளுக்கும் கூட தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.

தேங்காய் எண்ணெய் மலிவான பொருள் தான் என்றாலும் கூட மிக சிறப்பாக செயல்படும். அதனால் தான் அதனை பல விதமான பிரச்சனைகளுக்கு வீட்டு சிகிச்சை பொருளாக பயன்படுத்தலாம். அது அழகு பிரச்சனையாக இருந்தாலும் சரி, உடல்நல பிரச்சனையாக இருந்தாலும் சரி, உடனடி தீர்வுக்கு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

 

சளியில் இருந்து நிவாரணம்

நீங்கள் சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? அப்படியானால் சீமைச்சாமந்தி டீயில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வலியை நீக்கும்

வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்யை கொண்டு மூட்டு மற்றும் தசை வலிகள் ஏற்பட்டுள்ள இடங்களில் மசாஜ் செய்யுங்கள். நீங்கள் தசை மற்றும் மூட்டு வலிகளால் நீண்ட காலம் அவதிப்பட்டு வருகிறீர்களா? அப்படியானால் தேங்காய் எண்ணெய் மசாஜை செய்து நிவாரணம் பெற்றிடுங்கள்.

உடல் துர்நாற்றத்திற்கு சிகிச்சை

உங்கள் அக்குள் பகுதிகளில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யை தடவினால் போதும், உங்கள் உடலில் இருந்து வெளிப்படும் துர்நாற்றத்தால் நீங்கள் சந்திக்க போகும் அவமானங்களை தடுக்கலாம்.

பொடுகு மற்றும் முடி உதிர்தலுக்கான சிகிச்சை

தேங்காய் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் பூஞ்சை எதிர்ப்பி குணங்கள் உள்ளதால் அது பொடுகை தடுக்கும். இது தலை முடி வளர்ச்சியை ஊக்குவித்து, சுற்றுச்சூழல் அழுத்தம் மற்றும் மாசில் இருந்து தலைமுடியை பாதுகாக்கும். வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்யை கொண்டு தலைச்சருமத்திலும், முடி வேரிலும் மசாஜ் செய்தால், தலை முடியை சிறந்த முறையில் ஈரப்பதத்துடன் இருக்கும். மேலும் அரிப்பு போன்றவைகள் நீங்கும். தலைச்சருமத்திற்கு ஊட்டமளித்து முடி உதிர்தலையும் தடுக்கும்.

லேசான தீக்காயங்களுக்கு சிகிச்சை

உங்களுக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டால், காயம் பட்ட இடத்தில் குளிர்ச்சியான ஒன்றை உடனே போடவும். அதன் பின், தேங்காய் எண்ணெய்யை பாதிக்கப்பட்ட இடங்களில் நிறைய ஊற்றிக் கொள்ளவும். வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும் வரை, ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒரு முறை தேங்காய் எண்ணெய்யை அங்கே தடவவும். சொல்லப்போனால், தழும்புகளை குறைக்கவும் கூட தேங்காய் எண்ணெய் உதவிடும்.

டையப்பர் சிராய்ப்புகளுக்கு சிகிச்சை

டையப்பர் சிராய்ப்புகளால் உங்கள் குழந்தை படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்க பாதுகாப்பான வழியாக தேங்காய் எண்ணெய் இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், டையப்பர் சிராய்ப்புகளை தடுக்க சிறந்த வழியாக விளங்குகிறது தேங்காய் எண்ணெய். டையப்பர் மாற்றும் போதெல்லாம் பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்காய் எண்ணெய் தடவி விடவும்.

தூக்கத்தை வரவழைக்கும்

நீங்கள் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறீர்களா? அப்படியானால் 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை தினசரி அடிப்படையில் எடுத்துக் கொண்டால், உடலின் செயற்பாடுகள் சீராகும். இதனால் தேவையான தூக்கத்தை அது தூண்டி விடும்.

காதில் உள்ள அழுக்கை (வேக்ஸ்) உதவிடும்

நம் அனைவருக்கும் காதில் அழுக்கு சேர்வது இயற்கையே. ஆனால் சில நேரம் அது அதிகமாக சேர்ந்து காதை விட்டு எடுக்க சிரமமாகி விடும். அப்போது ஒரு சொட்டு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம். காதிற்குள் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய்யை நேராக ஊற்றுங்கள். இது காதிலுள்ள அழுக்கை தளர்த்தும். இதனால் அது தானாகவே வெளிவந்து விடும்.

சூரிய வெப்பத்தால் ஏற்படும் அழற்சிக்கு சிகிச்சை

சூரிய வெப்பத்தால் ஏற்படும் அழற்சிக்கு சிகிச்சை அளித்திட தேங்காய் எண்ணெய்யை தடவுங்கள். வரும் முன் காப்பது தானே சிறந்தது. அதனால் சூரிய ஒளியில் வெளிப்படுவதற்கு முன், உங்கள் சருமம் முழுவதும் தேங்காய் எண்ணெய்யால் மசாஜ் செய்து கொள்ளுங்கள். இதனால் நீண்ட நேரம் சூரிய ஒளியில் வெளிப்பட, அதனை தாங்கிக் கொள்ளும் சக்தியை உங்கள் சருமம் பெறும். அதனால் அதிகமான தேங்காய் எண்ணெய்யை தடவுங்கள். மேலும் உங்கள் தினசரி உணவில் கூட தேங்காய் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளுங்கள்.

சரும சுருக்கங்களை தடுக்கும்

தேங்காய் எண்ணெய் உங்கள் சருமத்திற்கும் அதிக நன்மையை அளிக்கிறது. இயற்கையான மாய்ஸ்சுரைசராக விளங்கும் இது உங்கள் சருமத்திற்கு நீர்ச்சத்தை அளித்திடும். அமைதிப்படுத்தும் பண்பை கொண்ட தேங்காய் எண்ணெய் சருமத்தை மென்மையாக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ளதால், சீக்கிரமே வயதாகும் செயல்முறையை எதிர்த்து போராடும். குழந்தையை போன்ற மென்மையான சருமம் வேண்டும் என்றால், தேங்காய் எண்ணெய்யை கொண்டு வாரம் இருமுறையாவது மசாஜ் செய்யுங்கள். உங்கள் உணவிலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தேங்காய் எண்ணெயில் இவ்வளவு பயன்கள் உள்ளது என என்றாவது நினைத்து பார்த்துள்ளீர்களா? தேங்காய் எண்ணெய்யை சரியாக பயன்படுத்தினால், உங்கள் வீட்டில் இருந்த படியே பலவித பிரச்சனைகளுக்கு நீங்கள் நிவாரணம் காணலாம். அதனால் தேங்காய் எண்ணெய்யை இன்று முதல் பயன்படுத்த தொடங்குங்கள்.

Related posts

அதிக உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறீர்களா? கட்டாயம் இத படிங்க!….

sangika

இந்த 5 ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் மனைவிக்கு நேர்மையான கணவர்களாக இருப்பார்கள்…

nathan

குழந்தையின் பற்களை சொத்தையாக்கும் உணவுகள்

nathan

இத படிங்க இரத்த அழுத்தத்தை குறைக்கும் கொத்தமல்லி!

nathan

குழ‌ப்ப‌ங்களு‌க்கு ‌தீ‌ர்வு கா‌ண்பது எ‌ளிதா‌க இத செய்யுங்கள்!….

sangika

பெண்களுக்கு பலன் அளிக்கும் கேரட்

nathan

தினம் ஒரு நாட்டு கோழி முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா…?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா ? அப்போ யார்மேலையோ தீரா வன்மம் இருக்காம்…!

nathan

குழந்தை வளர்ப்புமுறையில் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிவை

nathan