25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
mouthulcers
மருத்துவ குறிப்பு

இதோ எளிய நிவாரணம்! சொத்தைப் பற்களை இயற்கை வழியில் சரிசெய்ய சில டிப்ஸ்…

அனைவரும் சொத்தைப் பற்களானது பாக்டீரியாக்களால் தான் ஏற்படுகிறது என்று நினைக்கிறோம். ஆனால் சொத்தைப் பற்களானது ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் தான் ஏற்படுகிறது. அதனால் தான் பற்களில் அதிக அளவில் ஆசிட்டுகள் பட்டு, பற்களில் ஓட்டைகள் ஏற்பட்டு, அவ்விடத்தில் கிருமிகளானது குடிபுகுந்து பற்களை அழிக்கிறது. ஆகவே பற்கள் சொத்தை அடையாமல் இருக்க வேண்டுமானால், முதலில் பற்களை வலுவடையச் செய்ய வேண்டும். அதற்கு உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும்.

 

அதிலும் குறிப்பாக கார்போஹைட்ரேட், சர்க்கரை, ஸ்டார்ச் மிகுந்த உணவுகளில் கட்டுப்பாடு அவசியம். ஏனெனில் இந்த உணவுகளினால் தான் வாயில் உள்ள பாக்டீயாக்கள் வலிமையடைந்து, ஆசிட்டுகளை உற்பத்தி செய்து, பற்களின் எனாமலை அழிக்க ஆரம்பிக்கிறது. அதுமட்டுமின்றி வேறு பலவும் பற்களை சொத்தையாக்குகிறது.

அதில் உடலில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை குறைந்தாலோ, கரையக்கூடிய வைட்டமின்களானது ஏ, டி, ஈ மற்றும் கே குறைபாட்டு இருந்தாலோ அல்லது அதிக அளவில் பைட்டிக் ஆசிட் உணவுகளை உட்கொண்டாலும், பற்களில் ஓட்டை விழுந்து சொத்தையாகிறது.

 

சரி, இங்கு சொத்தைப் பற்களை இயற்கை வழியில் சரிசெய்ய சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை பின்பற்றி வந்தால், பற்களில் சொத்தை ஏற்படுவதையும், சொத்தையடைந்த பற்களையும் சரிசெய்யலாம்.

சர்க்கரையைத் தவிர்க்கவும்

சர்க்கரை உள்ள உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வாயில் உள்ள பாக்டீரியாக்களுக்கு சர்க்கரை மிகவும் பிடித்தமான உணவு. ஆகவே இவற்றை உட்கொள்வதை நிறுத்தினால், பற்களின் வலிமை நாளுக்கு நாள் அதிகரித்து, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் பற்களைத் தாக்குவதைத் தடுக்கலாம். வேண்டுமானால் உணவில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொள்ளலாம்.

பைட்டிக் ஆசிட் உணவுகளை தவிர்க்கவும்

பைட்டிக் ஆசிட்டானது உடலில் இருந்து ஊட்டச்சத்துக்களையும், ஆரோக்கியமான நொதிகளையும் உறிஞ்சிவிடும். அதனால் அந்த ஆசிட் நிறைந்த உணவை அதிகம் உட்கொண்டால், அவை பற்களில் ஓட்டைகளை ஏற்படுவதோடு, பற்களை சொத்தையாக்கிவிடும். மேலும் ஆஸ்டியோபோரோசிஸையும் ஏற்படுத்திவிடும். ஆகவே பைட்டிக் ஆசிட் அதிகம் நிறைந்த உணவுகளான தானியங்கள், நட்ஸ், விதைகள், பீன்ஸ் மற்றும் சோயா போன்றவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக நொதிக்க வைக்கப்படாத சோயா பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் நட்ஸ், தானியங்கள் ஆகியவற்றை சாப்பிடும் முன், நீரில் ஊற வைத்து பின் உட்கொள்ள வேண்டும்.

கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகள்

பற்களில் சொத்தை, ஓட்டை போன்றவை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வைட்டமின் டி குறைபாடு தான். ஆகவே உடலில் வைட்டமின் டி சத்தை அதிகரிக்க, அதிகாலையில் சிறிது நேரம் சூரிய ஒளியில் உடற்பயிற்சி செய்வதோடு, உணவில் சால்மன் மீன், காளான், பால் பொருட்கள், முட்டை போன்றவற்றை உட்கொண்டு வாருங்கள்.

ஆயில் புல்லிங்

2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 டீஸ்பூன் நல்லெண்ணெய், 1 துளி கிராம்பு எண்ணெய், 1 துளி டீ ட்ரீ ஆயில் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், வாயில் ஊற்றி 20 நிமிடம் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பற்கள் மட்டுமின்றி ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் அன்றாட உணவில் தேங்காய் எண்ணெய் சேர்த்து வருவதும் மிகவும் நல்லது.

நேச்சுரல் டூத் பேஸ்ட்

ப்ளூரைடு பற்களை வலிமையாக்குவதோடு, சொத்தை ஏற்படுவதைத் தடுக்கும். ஆகவே ப்ளூரைடு நிறைந்த டூத் பேஸ்ட்டை வாங்கிப் பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால் வீட்டிலேயே தயாரித்து அதனைக் கொண்டு அன்றாடம் பற்களை துலக்குங்கள். நேச்சுரல் டூத் பேஸ்ட் தயாரிக்க, 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 5 டேபிள் ஸ்பூன் கால்சியம் மாத்திரைகளை பவுடர் செய்தது மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு டப்பாவில் போட்டு, பற்களை துலக்கும் போது, அதனைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

சாம்பல்

சாம்பல் பயன்படுத்தி பற்களை துலக்கினால், சாம்பலானது வாயில் உள்ள டாக்ஸின்களை உறிஞ்சி, பற்களுக்கு நல்ல பாதுகாப்புத் தரும். அதிலம் சாம்பல் கொண்டு பற்களைத் துலக்கினால், பற்கள் வெண்மையாக இருப்பதோடு, பற்களை அழித்துக் கொண்டிருக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றி, பற்களுக்கு வலிமையைத் தரும்.

வேப்பங்குச்சி

அன்றாடம் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கினால், அதில் உள்ள கசப்புத்தன்மையினால், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்துவிடுவதோடு, வாயும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

தண்ணீர் அதிகம் குடிக்கவும்

தினமும் சிறு இடைவெளியில் அவ்வப்போது தண்ணீரைக் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால், பற்களை அழிக்கும் ஆசிட்டுகளை நடுநிலைப்படுத்தும். இதனால் பற்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம். மேலும் எப்போது உணவுகளை உட்கொண்ட பின்னரும் வாயை கொப்பளிக்க வேண்டும்.

 

Related posts

நாம் சாப்பிடும் மருந்துகள் விஷமாகும் அதிர்ச்சி!அப்ப இத படிங்க!

nathan

ரத்தசோகையைப் போக்க…!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! ஆவி பிடிக்கும் போது இந்த தவறை செய்யாதீங்க…

nathan

புதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு…

nathan

பிரசவ வலி இல்லாமல் 15 நிமிடத்தில் குழந்தை பிறக்க ..!

nathan

சிறந்த பீர் எது என எப்படிக் கண்டுபிடிப்பது? – சொல்கிறார் பீர் நிபுணர்

nathan

இதோ எளிய நிவாரணம்! இந்த அற்புத மூலிகை தேநீர் குடிச்சு பாருங்க…

nathan

இதோ எளிய நிவாரணம்! மூட்டு வலி பிரச்சனையில் இருந்து தீர்வு காண இத முயற்சி பண்ணுங்க!!!

nathan

நீரிழிவு நோயாளியா நீங்கள்? கண்களில் இந்த பிரச்சனைகள் ஏற்படுமாம்! கட்டாயம் இதை படியுங்கள்

nathan