28.2 C
Chennai
Tuesday, Dec 3, 2024
10 gongura chutney
சட்னி வகைகள்

சூப்பரான கோங்குரா சட்னி

ஆந்திராவில் கோங்குரா சட்னி மிகவும் பிரபலமானது. கோங்குரா என்றால் தமிழில் புளிச்ச கீரை. இந்த புளிச்ச கீரையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக உடல் வெப்பத்தால் அவஸ்தைப்படுபவர்கள், புளிச்ச கீரையை சாப்பிட்டால் தணிந்துவிடும். அதிலும் சட்னி செய்து சாதத்துடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

இங்கு ஆந்திராவில் அதிகம் செய்யப்படும் கோங்குரா சட்னியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

கோங்குரா/புளிச்ச கீரை – 1 கட்டு
வர மிளகாய் – 10
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
மல்ல – 1 1/2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 5 பற்கள்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 2 பற்கள் (தட்டியது)
வர மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் புளிச்ச கீரையை நன்கு சுத்தம் செய்து, நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், புளிச்ச கீரையை சேர்த்து 4-5 நிமிடம் மென்மையாகும் வரை வதக்கி இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.

பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், மல்லி, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, அதனையும் குளிர வைக்க வேண்டும்.

பின்பு மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள பொருட்களுடன், புளிச்ச கீரை, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, பின் அதில் வரமிளகாய், தட்டி வைத்துள்ள பூண்டு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், ஆந்திரா ஸ்பெஷலான கோங்குரா சட்னி ரெடி!!!

Related posts

ஆரஞ்சு தோல் பச்சடி

nathan

வெங்காய சட்னி

nathan

காசினி கீரை சட்னி

nathan

கொத்தமல்லி சட்னி

nathan

பருப்பு துவையல்

nathan

வெங்காய கார சட்னி

nathan

சுவையான… தக்காளி சட்னி

nathan

இடி சம்பல் (அ) இடிச்ச சம்பல்

nathan

சுவையான வெங்காய சட்னி

nathan