சூரியன் பூமிக்கு ஒளி மற்றும் வெப்பத்தை அளிப்பதோடு, உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாத்து வருகிறது. சூரிய ஒளி உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் முதன்மையானது வைட்டமின் டி. உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால், குழந்தைகளுக்கு மெட்டபாலிக் எலும்பு நோய்கள் ஏற்படும்; பெரியவர்களுக்கு தீவிரமான பல பொதுவான நோய்கள் ஏற்படும்.
ஆனால் வெறும் வைட்டமின் டி-யுடன் மட்டும் சூரிய ஒளியின் உடல்நல பயன்கள் நின்று விடுவதில்லை. இருப்பினும் சூரிய ஒளியின் முக்கியமான பயன்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. ஆனாலும், அளவுக்கு அதிகமான சூரிய ஒளி படுவதால், வெப்ப வாதம் போன்ற சில பிரச்சனைகள் ஏற்படும். ஏன், சில சமயங்களில் மரணம் கூட ஏற்படலாம்.
சூரிய ஒளியில் செல்லும் போது போதிய அக்கறையும் கவனமும் தேவை. காலை நேரத்தில் வெப்பம் குறைவாக இருப்பதாலும், வளிமண்டலத்தில் மாசு குறைவாக இருப்பதாலும், காலை நேர சூரிய ஒளியே சிறந்தது. புறஊதாக் கதிர்களால் ஆபத்து ஏற்படுவதால், மதிய வேளையின் சூரிய ஒளி ஆபத்தாய் விளங்கும். இதோ, சூரிய ஒளியால் கிடைக்கும் சில உடல்நல பயன்களைப் பற்றி சற்று விரிவாக பார்க்கலாமா? நம் உடலுக்கு ஏன் சூரிய ஒளி நல்லது என்பதைப் பற்றியும் நாங்கள் கூறியுள்ளோம்.
ஆழமான தூக்கம்
எந்த நேரம் மற்றும் எவ்வளவு மணிநேரங்கள் தூங்குகிறோம் என்பது மிகவும் முக்கியமாகும். மெலடோனின் என்ற ஹார்மோன் தான் நம்மை இரவில் தூங்க வைக்க உதவுகிறது. பகல் நேரத்தில் மெலடோனின் சுரப்பதை நம் உடல் நிறுத்திவிடும். சூரிய ஒளியில் எந்தளவு வெளிப்பட்டோமோ, அதை பொறுத்து இரவு நேரத்தில் இதன் சுரத்தல் தொடங்கிவிடும். சூரிய ஒளி நம் உடல்நலத்திற்கு நன்மையை விளைவிக்கும் காரணங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.
உடல் எடை குறைப்பு
காலை வேளையில் சூரிய ஒளியானது நம்மீது பட்டால், அது உடல் எடையை குறைக்க உதவிடும். சூரிய ஒளியால் கிடைக்கும் உடல் நல நன்மைகளில் இதுவும் ஒன்றாகும். போதிய அளவில் தூக்கம் கிடைத்தால், உங்களால் உடல் எடையை குறைப்பதை சுலபமாக்கி விட முடியும். மேலும் சூரிய ஒளிக்கும் BMI-க்கும் முக்கிய தொடர்பு உள்ளது என பல ஆய்வுகள் கூறியுள்ளது.
குளிர் கால அழுத்தத்தை எதிர்க்கும்
நீங்கள் உலகத்தில் எந்த இடத்தில் வசிக்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் இது அமையும். பல இடங்களில் நீண்ட, கருமையான குளிர்காலம் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் போது, உடல் நலக் குறைவால் மக்கள் பாதிக்கப்படலாம். இதற்கான மிகச்சிறந்த சிகிச்சையே இயற்கையான சூரிய ஒளி தான். சூரிய ஒளி உடல்நலத்திற்கு நல்லது என்று கூறுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
ஆரோக்கியமான எலும்புகள்
சூரிய ஒளியால் கிடைக்கும் முக்கிய உடல்நல பயன்களில் ஒன்று தான் வைட்டமின் டி உற்பத்தி. நம் உடல் கால்சியத்தை உறிஞ்சிட இந்த வைட்டமின் உதவிடும். இதனால் எலும்புகள் ஆரோக்கியமடையும். சால்மன் போன்ற மீன்களிலும், செறியவூட்டிய பால் சார்ந்த பொருட்களிலும் கூட வைட்டமின் டி உள்ளது. ஆனால் சூரிய ஒளி நம் சருமத்தில் பட்டால், இது சீக்கிரமாக உற்பத்தியாகும்.
பிற நோய்களில் இருந்து பாதுகாப்பு
உடலில் வைட்டமின் டி குறைவாக இருந்தால், இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும் இடர்பாடு அதிகமாக உள்ளது என சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. வைட்டமின் டி உள்ள உணவுகள் மற்றும் பொருட்களை விட சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் இயற்கையான வைட்டமின் டி-யில் இருந்தே சிறந்த பலன் கிடைக்கிறது. சூரிய ஒளியால் கிடைக்கும் நன்மைகளில் இதுவும் ஒன்று.
தன்நோயெதிர் நோய்களை தடுத்தல்
சூரிய ஒளியால் கிடைக்கும் மற்றொரு முக்கியமான உடல் நல பயன் – தன்நோயெதிர் நோய்களில் இருந்து பாதுகாப்பு. அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை தடுக்க சூரிய ஒளியில் இருந்து உண்டாகும் புறஊதா கதிர்கள் உதவிடும். தோல் அழற்சி போன்ற தன்நோயெதிர் நோய்களை தடுக்க இது ஒரு சிறந்த வழியாக விளங்குகிறது.