29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
sl3775
சைவம்

தேங்காய்ப்பால் பேபி கார்ன் புலாவ்

என்னென்ன தேவை?

பேபி கார்ன் 2 கப்,
பாஸ்மதி அரிசி 1 கப்,
தேங்காய்ப் பால் 1/4 கப் (முதல் பால்),
ஏலக்காய் 1,
கருப்பு ஏலக்காய் 2, லவங்கப்பட்டை 2,
கிராம்பு 3 (அ) 4,
பிரிஞ்சி இலை 1,
சீரகம் 1/2 டீஸ்பூன்,
துருவிய இஞ்சி 1/4 டீஸ்பூன்,
சில்லி சாஸ் 1 டீஸ்பூன்,
வெள்ளை மிளகுத்தூள் 1/4 டீஸ்பூன்,
உப்பு சுவைக்கேற்ப,
வெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் + தேங்காய்ப் பால் 2 கப்.
எப்படிச் செய்வது?

பாஸ்மதி அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். பேபி கார்னை 2 இஞ்ச் நீளத் துண்டுகளாக நறுக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு, திறந்ததும் தண்ணீரை வடித்து, தனியே வைக்கவும்.பிரஷர் பானில், எண்ணெய், வெண்ணெய் ஊற்றி, மசாலா பொருட்களைப் போட்டு, 1 நிமிடம் வறுத்து, சீரகம், இஞ்சி, வெந்த சோளப் பிஞ்சு, சில்லி சாஸ் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும்.

தேங்காய்ப் பால், தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் கொதிக்கும் போது, ஊறவைத்த அரிசியிலிருந்து தண்ணீரை வடித்து, இதில் சேர்த்து, தேவையான உப்பு போடவும். நன்கு கலந்து, 3 விசில் வரும்வரை வேகவிடவும். குக்கர் திறந்ததும் வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து பூப்போல கலக்கவும். பாத்திரத்தில் மாற்றி, மிளகு அப்பளம், ரைத்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.
sl3775

Related posts

உருளைக்கிழங்கு வரமிளகாய் வறுவல்

nathan

காளான் dry fry

nathan

நெய் சாதம் வைப்பது எப்படி

nathan

ஓமம் குழம்பு

nathan

சூப்பரான பச்சை பட்டாணி மசாலா

nathan

சிம்பிளான… மோர் குழம்பு

nathan

மீல் மேக்கர் கிரேவி

nathan

நாவூறும் நெல்லைச் சுவை: தாளகக் குழம்பு

nathan

மழைக் காலத்திற்கேற்ற மிளகுக் குழம்பு

nathan