29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
245fb885defa
ஆரோக்கிய உணவு

உண்மை என்ன ?உணவுப் பொருட்களின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா?

சமைக்கும் உணவுப் பொருட்களின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

உணவுப் பொருட்களின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா?
உணவுப் பொருட்களின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா?
சமைக்கும் போது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

உணவுப்பொருட்கள் மற்றும் இறைச்சி வாங்கிவந்தால் அவற்றை சரியான வெப்பநிலையில் சேமித்துவைக்க வேண்டும். அப்போதுதான் அவை கெட்டுப்போகாமல் பாதுகாப்பாக இருக்கும். நுண்ணுயிரிகளால் பாதிப்பும் நேராது. சமைத்த உணவுகளை இரண்டு மணி நேரத்திற்கு மேல் திறந்த நிலையில் வைக்கக்கூடாது. விரைவில் கெட்டுப் போகும் உணவுகளை குளிர் சாதன பெட்டியில் 5 டிகிரி வெப்பநிலையில் சேமித்து வைக்கலாம்.

சமைத்த இறைச்சி வகைகளை குளிர் சாதன பெட்டியில் நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடாது. அதன் வாசம் குளிர்சாதன பெட்டியில் இருக்கும் மற்ற பொருட்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். சிலர் இறைச்சி வகைகளை அதிகமாக வாங்கி வந்து அவ்வப்போது பயன்படுத்துவார்கள். அப்படி வாங்கி வந்த இறைச்சியையும், சமைத்த இறைச்சியையும் அருகருகே வைக்கக்கூடாது. இரண்டையும் வெவ்வேறு இடங்களில் வைத்திருப்பது தான் நல்லது.

ஏனெனில் முட்டை, கோழி இறைச்சி, மீன் போன்ற கடல் உணவுகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் இருக்கலாம். அவற்றை சமைத்த இறைச்சியோடு சேர்த்து வைத்திருந்தால் தொற்று ஏற்படவழிவகுத்து விடும். அவற்றுள் இருக்கும் நுண்ணுயிரிகள் சமைத்த உணவுக்கும் கேடுவிளைவித்து விடும்.

முட்டை, கோழி இறைச்சி, மீன் போன்ற கடல் உணவுகளை சமைக்கும்போது குழம்பு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அவை நன்றாக வேகவைக்கப்படவில்லை என்று அர்த்தம். நன்றாக சமைத்தால் தான் தீங்குவிளைவிக்கும் நுண் கிருமிகள் இறந்துபோகும். 70 டிகிரி வெப்ப நிலையில் சமைத்தால்தான் அது நன்றாக சமைக்கப்பட்ட உணவு என்பது சமையல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

சமைக்கும்போது இறைச்சியை நன்றாக சுத்தம் செய்வதோடு கைகளையும் நன்றாக பராமரிக்க வேண்டும். சமையல் அடுப்பின் மேல்பகுதியையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சமைக்கும் முன்பு கைகளை கழுவ வேண்டியதும் அவசியம். கரப்பான் பூச்சிகள் மற்றும் பிற பூச்சி இனங்களிலிருந்து சமையலறையைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அவைதான் தீங்கு விளைவிக்கும் தொற்று நோய்களுக்கு முதன்மை காரணியாக அமைந்திருக்கும். உணவு தயாரிக்கும் போது எப்போதும் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் சுத்தமில்லாத நீர் உணவை மாசுபடுத்தும். தொற்றுநோயை ஏற்படுத்தும். உணவுப் பொருட்களை கழுவும் போது நன்றாக வடிகட்டிய நீரைப் பயன்படுத்த வேண்டும்.

maalaimalar

Related posts

உடல் எடையைக் கூட்டும் உளுந்தங்களி

nathan

பல்வேறு நோய்களை குணமாக்கும் மஞ்சள் பால்

nathan

அவசியம் தெரிந்து ககொள்ளுங்கள் சீத்தா பழத்தின் உடல்நல பயன்கள்

nathan

கோதுமை ரவையில் கருப்பட்டி பாயாசம் செய்வது எப்படி?தெரிஞ்சிக்கங்க…

nathan

ஜாக்கிரதை…!மறந்தும் கூட காலை உணவாக இதை சாப்பிட்டு விடாதீர்கள்!

nathan

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? நீங்களும் முயற்சி செய்யுங்கள்

nathan

1 பழம்… 14 பலன்கள்… பிரமிக்கவைக்கும் மாதுளை!

nathan

அடேங்கப்பா! ஆரஞ்சு பழத்தை விட விதையில் இவ்வளவு சத்தா?

nathan

சுவையான உளுந்தங்களி தயாரிக்கும் முறை

nathan