28.7 C
Chennai
Saturday, Jul 26, 2025
9 4 shave
முகப் பராமரிப்பு

மாய்ஸ்சுரைசர் உபயோகிப்பதன் அவசியம்!!!

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்காமல் வீட்டை விட்டு வெளியே வரமாட்டோம், சரிதானே? அதேப்போல் தான் வெளியே செல்லும் முன், சருமத்திற்கும் போதிய நீர்ச்சத்தை வழங்க வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு தங்களின் அழகைப் பராமரிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்லித் தான் அவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை. சொல்லாமலேயே பெண்கள் வெளியே செல்லும் முன் மாய்ஸ்சுரைசர், சன் ஸ்க்ரீன், லோசன் போன்றவற்றை சருமத்திற்கு தடவிக் கொள்வார்கள்.

ஆனால் ஆண்கள் இயற்கை அழகே போதும் என்று நினைத்து, சருமத்திற்கு எவ்வித க்ரீம்களும் பயன்படுத்துவதில்லை. அக்காலத்தில் ஆண்கள் அப்படி இருக்கலாம். ஆனால் இன்றைய காலத்தில் ஆண்கள் அப்படி இருந்தால், சுற்றுச்சூழல் மாசுபாட்டினாலும், சூரியனின் புறஊதாக்கதிர்களாலும் சரும செல்கள் பாதிக்கப்பட்டு, விரைவில் முதுமைத் தோற்றத்தையும், சரும வறட்சியினால் வேறு சில பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும். ஆகவே ஆண்கள் அன்றாடம் மாய்ஸ்சுரைசரைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

இங்கு ஒவ்வொரு ஆண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அன்றாடம் மாய்சுரைசர் பயன்படுத்துவதன் அவசியம் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

ஆரோக்கியமான சருமம்

மாய்சுரைசர் பயன்படுத்துவதால், அதில் உள்ள பொருட்கள், சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். மாய்ஸ்சுரைசர் அழுக்குகள், தூசிகள் போன்றவற்றில் இருந்து சருமத்தை பாதுகாப்பதோடு, சருமமானது அதன் வளைந்து தரும் தன்மையை இழக்காமல், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சுரைசர்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம் இருக்கும். அதாவது எண்ணெய் பசை, வறட்சி, காம்பினேசன் அல்லது சாதாரண சருமம் போன்றவை. எனவே சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சுரைசரை தேர்ந்தெடுத்து சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தின் செயல்பாடு சீராக இருக்கும். மேலும் சருமமும் இளமையுடன் காட்சியளிக்கும். உடலில் சருமம் தான் மிகவும் பெரிய உறுப்பு. எனவே இதனை சரியாகவும், முறையாகவும் மாய்ஸ்சுரைசர் கொண்டு பாதுகாக்க வேண்டும்.

சருமத்தின் நீர்ச்சத்தை அதிகரிக்காது

உண்மையிலேயே, மாய்ஸ்சுரைசர் சருமத்தின் நீர்ச்சத்தை அதிகரிக்காவிட்டாலும், அது மிகவும் சிறப்பான எதிர்ப்பு பொருளாக செயல்படும். சருமத்தில் எவ்வித தூசிகளின் தாக்கமும் இல்லாதவாறு, சருமத்தைப் பாதுகாப்பதோடு, வறட்சி ஏற்படாமல் தடுக்கும்.

பகலை விட இரவே சிறந்தது

பகல் நேரத்தில் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதற்கு பதிலாக, இரவு நேரத்தில் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது சிறந்தது. ஏனெனில் இரவில் நமது உடல் அதிக அளவு நீரை இழக்கும் மற்றும் இந்நேரத்தில் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தினால், சருமம் வறட்சியடையாமல் இருக்கும். மேலும் இரவில் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தும் போது, அது பாதிப்படைந்த சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கும்.

ஷேவிங் பிறகே சிறந்தது

மாய்ஸ்சுரைசரை ஷேவிங் செய்த பின்னரோ அல்லது ஸ்கரப் செய்த பின்னரோ பயன்படுத்துவது தான் சிறந்தது. இதனால் இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறிவிடுவதால், அப்போது சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தும் போது, அது சருமத்தில் நீர்ச்சத்தை தங்க வைக்கும். மேலும் குளித்து முடித்த பின்னர், சருமம் முற்றிலும் உலர்ந்துவிடுவதற்கு முன், சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இதனால் நீண்ட நேரம் சருமத்தில் நீர்ச்சத்து தங்கும்.

அளவே இல்லை

மாய்ஸ்சுரைசரை இவ்வளவு தான் பயன்படுத்த வேண்டுமென்ற வரையறை எதுவும் இல்லை. ஏனெனில் வறட்சியான சருமத்தினருக்கு எண்ணெய் பசை சருமம் அல்லது சாதாரண சருமத்தினரை விட அதிக வறட்சி ஏற்படுவதால், அவர்கள் ஒரு நாளைக்கு நிறைய முறை மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த நேரிடும். குறிப்பாக குளிர்காலம் வந்துவிட்டால், அப்போது மாய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்த வேண்டியிருக்கும். எனவே மாய்ஸ்சுரைசரை இவ்வளவு தான் பயன்படுத்த வேண்டும் என்ற அளவு ஏதும் இல்லை.

Related posts

ஈஸியாக வெள்ளை ஆகலாம்! தினமும் இரவில் தூங்கும் முன் இதை செய்திடுங்கள்:

nathan

உடலில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் எப்படி கட்டுப்படுத்தலாம்?

nathan

உங்களுக்கு தெரியுமா சரும பிரச்சனைகளைப் போக்கும் மஞ்சள்!

nathan

இந்த இரண்டு பொருட்களைக் கொண்டே உங்கள் முகத்தை இயற்கையாக ஜொலிக்க வைக்க முடியும். ….

sangika

இதோ ஈஸியான டிப்ஸ்… முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை போக்கும் இயற்கை மாஸ்க்

nathan

இறந்த செல்களை உடனடியாக அகற்றி விட சூப்பர் டிப்ஸ்!…

sangika

உங்க முகத்துல அசிங்கமா சுருக்கம் இருக்கா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

உங்க முகத்தின் அழகை கெடுக்கும் மங்கை போக்க எளிய நாட்டு மருத்துவம்!முயன்று பாருங்கள்

nathan

நீங்கள் அழகில் அதிகம் கவனம் செலுத்தும் நபரா ? அப்ப உடனே இத படிங்க…

nathan