28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
idly 31
சிற்றுண்டி வகைகள்

இட்லி

இரண்டு கப் பச்சரிசி
ஒரு கப் உளுந்து
கால் தேக்கரண்டி வெந்தயம்(அரிசியுடன் சேர்த்து ஊறவைக்கணும்)
இரண்டு மேஜைக்கரண்டி சாதம்
உப்பு சிறிதளவு

முதலில் உளுந்தை அரைத்து பிறகு அரிசி வெந்தயத்துடன் சாதம் உப்பு சேர்த்து
(மறக்காமல் கொர கொரப்பாக) அரைத்து எடுத்துக்கொண்டு பிறகு அரிசியை சிறிது கொர கொரப்பாக அரைத்து உளுந்துமாவுடன் சேர்த்து ரொம்ப தண்ணியாகவும் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் சரியான பக்குவத்தில் கரைத்து 6 ல் இருந்து 8 மணி நேரம் புளிக்க வைத்து பிறகு இட்லி அவிக்கலாம்.

குறிப்புகள்:
நல்ல உளுந்தாக இருந்தால் 4 கப் அரிசிக்கு ¾ கப் சேர்த்தால் போதும்.
அரிசி பருப்பை முதல் நாள் இரவு முழுதும் உற வைத்தும் காலையில் அரைக்கலாம்.
அரிசி, பருப்பை ஊறவைக்கும் போது நன்கு கழுவி விடுவதால் அரைப்பதற்கு முன் லேசாக அலசினால் போதுமானது. அதிகமாக கழுவும்போது மாவு பொங்கி(புளித்து)வருவது தடுக்கப்படுவதோடு சத்துக்களும் போய்விடும்.

இரண்டு மேஜைக்கரண்டி வெந்தயத்தை எண்ணை விடாமல் லேசாக வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டால் தேவைப்படும்பொழுது இட்லிமாவில் சிறிது வெந்தயப் பொடியை கலந்து தோசை சுடும்போது ருசியுடன் வாசனையாகவும் இருக்கும்.
பொதுவாக குக்கர் தட்டாயிருந்தாலும். ஏழுகுழி, ஐந்துகுழி அல்லது இரண்டடுக்கு தட்டாயிருந்தாலும் இட்லி வேகும் நேரம் ஏழு நிமிடம் போதுமானது நன்கு அவிந்து விடும்.அதிக நேரம் அவிக்கப்படும்போது இட்லியின் நிறம் மாறி விடக்கூடும்.
idly 3

Related posts

மாலை நேர டிபன் சேமியா புலாவ்

nathan

சோள தயிர் வடை /கார்ன் தஹி வடா

nathan

சில்லி சப்பாத்தி

nathan

பிள்ளையார்பட்டி மோதகம்:

nathan

ஸ்வீட் கார்ன் சுண்டல் செய்வது எப்படி

nathan

ரவா மசாலா இட்லி

nathan

வெங்காயத்தாள் துவையல்

nathan

Brown bread sandwich

nathan

சூப்பரான ஸ்நாக்ஸ் நட்ஸ் குக்கீஸ்

nathan