27.7 C
Chennai
Wednesday, Aug 20, 2025
p98
ஆரோக்கியம் குறிப்புகள்

காலை உணவுக்கு நோ… உடல்பருமனுக்கு வெல்கம்!

‘காலையில பிரேக்ஃபாஸ்ட்டை ஸ்கிப் பண்ணிடுவேன். ஜஸ்ட் ஃப்ரூட் ஜூஸ் மட்டும்தான்!’ – சமீபகாலமாக இந்த டிரெண்ட் உருவாகி வருகிறது.

ஆனால், ”காலை உணவைத் தவிர்ப்பது என்பது, கண்டிப்பாகக் கூடாது. இப்படி தவிர்ப்பது ஒபிசிட்டி எனும் உடல் பருமன் நோய்க்கு வழிவகுக்கும்” என்று எச்சரிக்கிறார் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி.

”காலையில் நம் உடல் உழைப்பு அதிகமாக இருக்கும் என்பதால், காலை உணவைத் தவிர்ப்பது சோர்வையே தரும். காலை உணவை எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் எடுத்துக் கொள்கிறோமோ, அதேவேகத்தில் உடலானது விரைவில் இயங்க ஆரம்பித்துவிடும். தேவையான நியூட்ரிஷன்களும் உடலுக்குக் கிடைக்கும்.

உணவைத் தவிர்ப்பதால், செல்களுக்கு போதுமான சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். இதன் காரணமாக செல்கள் சோர்வடைந்து, பேசல் மெட்டபாலிக் ரேட் (அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம்) குறையும். இதுவே பருமன் நோய்க்கு வரவேற்பு வைக்கும். கூடவே, காலையில் சாப்பிடாதவர்கள் மதியம் மற்றும் இரவு உணவை ஹெவியாக எடுத்துக் கொள்வார்கள். இதுவும் சேர்ந்துகொண்டு உடல் எடை அதிகரித்து, நோய்க்கு துணைபுரியும்.

இரவு உணவுக்குப் பிறகு, தொடர்ச்சியாக நீண்டநேரம் ஓய்வெடுக்கும் ஜீரண உறுப்புகளுக்கும், உடம்புக்கும், காலை நேர உணவு முக்கியமாகிறது. இப்படி நீண்ட நேரம் கழித்து சாப்பிடும் காலை உணவு, திட உணவாக இருப்பது மிகவும் நல்லது. திரவ ஆகாரம் சீக்கிரம் செரிமானம் அடைந்துவிடுவதால், ஜூஸ் போன்ற திரவ ஆகாரத்தை மட்டும் குடிப்பது அபாயத்தையே விளைவிக்கும். எனவே, காலை உணவானது புரோட்டீன், விட்டமின், மினரல், கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்” என்று சொல்லும் கிருஷ்ணமூர்த்தி,

”சிலர், இரவு நேர உணவையும் தவிர்ப்பார்கள். இதுவும் தவறுதான். பெரும்பாலும் இரவில் இட்லி, உப்புமா, கோதுமை, பருப்பு சேர்த்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. பழச்சாறு சாப்பிடாமல், பழங்களாக சாப்பிடலாம். அப்போதுதான் நார்ச்சத்து கிடைக்கும். தினமும் மஞ்சள், பச்சை, ஆரஞ்சு நிறம் என மூன்று வகையான பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. இவை, உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். ஆனால், இரவில் பழங்களை மட்டுமே சாப்பிடுவது நல்லதல்ல. இது சரி விகித உணவாக இருக்காது” என்று சொன்னார்.
p98

Related posts

உங்களைப் பற்றி உங்களுக்கு பிடித்த எண் சொல்வது உண்மையா என்று பாருங்கள்…

nathan

மனிதத்தன்மையை இழக்கவைக்கும் இந்த மது!

sangika

தெரிஞ்சிக்கங்க…தினமும் இந்த டீயை குடித்து வந்தால் சர்க்கரை நோயிக்கு உடனடி தீர்வு காணலாமாம்

nathan

கருத்தடை மாத்திரை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி இங்கு காணலாம். செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா?

nathan

ஆரஞ்சு தோல் துவையல்

nathan

துடிப்பாக செயல்படும் மக்கள் பின்பற்றும் மிக இயல்பான பழக்கவழக்கங்கள்!!!

nathan

அதிர்ச்சி ரிப்போர்ட்.!கருச்சிதைற்கு காற்றுமாசுபாடுதான் காரணம்?

nathan

அனைத்து நோய்களுக்கும் ஒரே நிவாரணி தினமும் ஒரு செவ்வாழை!

nathan

ஆரோக்கிய வாழ்விற்கு பயன்தரும் கீரை வகைகள்:-

nathan