30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
lose weight
எடை குறைய

உங்களுடைய நிரந்தரமாக எடை இழக்க பயனுள்ள குறிப்புகள்

எடை இழப்பதென்பது எளிதாக ஒன்றுதான். எனினும், நிரந்தரமாக எடை இழப்பதென்பது ஒரு கடினமான வேலை. பெரும்பாலும், எடை இழப்பு, முறைகள் தற்காலிகமானவைகள்தான். இந்த முறைகள் எல்லாம் தவறானவை, ஏனெனில் இதை செய்து எடை குறைந்த பின் நாம் இந்த முறைகளை அடியோடு மறந்து விடுகிறோம். நிரந்தரமாக நம் எடையை சீராக வைக்க, தினசரி நீங்கள் சில ஆரோக்கியமான பழக்கத்தினையும் இணைத்துக்கொள்ள வேண்டும். மேலும் இதை நீங்கள் தினசரி வாழ்வில் ஒரு நிரந்தர பகுதியாக செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

இங்கே எடை இழப்பதற்கான 10 நிரந்தர மற்றும் பயனுள்ள குறிப்புகள் உள்ளன. இதை தினமும் ஒரு வழக்கமாக பராமரித்து ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். எனினும், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இதை ஒரு நிரந்தர பகுதியாக செய்து கொள்ள உறுதி கொள்ளுங்கள். பயனுள்ள எடை இழப்பு குறிப்புகள்

1. தினமும் உடற்பயிற்சி செய்யவும் :

நீங்கள் உண்மையில் குறைந்த பட்சம் 30 முதல் 60 நிமிடங்கள் வரை தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரே நேரம் செய்ய முடியவில்லை என்றால் அதில் ஒரு தவறும் இல்லை, நீங்கள் நாள் முழுவதும் சிறு சிறு பகுதியாக பிரித்தும் செய்யலாம். உதாரணமாக, உங்களால் ஒரு 30 நிமிட அமர்வு தொடர்ந்து செய்ய முடியாது என்றால் மூன்று 10 நிமிட அமர்வுகளாக நீங்கள் உடற்பயிற்சி செய்யலாம்.

2. ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகள்

நீங்கள் ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளுவதில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு ஆரோக்கியமான காலை வேளையை தொடங்க நீங்கள் தானியங்களுடன், வெட்டிய ஸ்ட்ராபெர்ரிகள், வாழைப்பழங்கள் சேர்த்தும் ஆரம்பிக்கலாம். இதனுடன் பாலாடைக்கட்டி அல்லது தயிர், பீச்சஸ் அல்லது பெர்ரி, போன்றவற்ரையும் சேர்க்கலாம். உங்கள் காலை உணவு ரொட்டியின் தரத்தை மேம்படுத்த ஆரோக்கியமான காய்கறிகளான, கீரை, குடைமிளகாய், தக்காளி, வெள்ளரி அல்லது வெங்காயம் போன்றவற்றுடனும் ஆரம்பிக்கலாம் .

3. உணவை கட்டாயம் தவிர்க்க கூடாது

பட்டினி கிடப்பதால், உங்களின் பசியின் தன்மை அதிகரிப்பதோடு அடுத்து சாப்பிடும் போது அதிக அளவில் உணவை சாப்பிட தோன்றும். ஒரு நாளில் குறைந்தது 3 ஆரோக்கியமான உணவு சாப்பிடவும், ஒரு ஆரோக்கியமான காலை உணவையும் சேர்த்து. உயர் கொழுப்பு மற்றும் அதிக கலோரி உள்ள உணவுகள் உண்பதை தவிர்க்க முயற்சி செய்யவும். வசதியான மற்றும் இந்த வகையான கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை உங்கள் வீட்டில் நீங்கள் வைக்காமல் இருப்பதே மிகவும் நல்லது.

4. சுறு சுறுப்பாக இருப்பதை மறக்காதீர்கள்

ஒரு ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை எடை இழப்பை ஊக்குவிப்பதோடு மற்றும் உங்கள் உடலை ஒரேமாதிரியாக பராமரிக்க உதவும் காரணிகளாகும். நீங்கள் தினமும் ஒரு நடைப்பயிற்சியோ அல்லது ஒரு சைக்கிள் சவாரியோ செய்யலாம். அது சாத்தியமில்லை என்றால், டென்னிஸ் விளையாடுவது, பிலேட்ஸ் அல்லது கராத்தே, பால்ரூம் நடனம் அல்லது குறுக்கு நாட்டில் பனிச்சறுக்கு போன்ற புதிய நடவடிக்கைகளை முயன்றும் முயற்சி செய்தும் பார்க்கலாம்.

5. மன அழுத்தத்தினை குறைக்கவும் :

மன அழுத்தத்தினால், நீங்கள் சாப்பிடும் அளவு அதிகரிக்கிறது இதனால் தானாக உடல் எடை அதிகரிக்கிறது. எனவே மன அழுத்தத்தில் இருந்து விலகியே இருங்கள். மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர நீங்கள் பல்வேறு விதமான உத்திகளை முயற்சி செய்யலாம். உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் உடன் சேர்ந்து தசை தளர்வு நுட்பங்கள், நல்ல சிரிப்பு, உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்ற நடவடிக்கைகள் முயற்சி செய்வதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து எளிதாக விடுபடலாம்.

6. வீட்டிலேயே சாப்பிடுங்கள்

உங்களால், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி கடைகளில் சாப்பிடாமல் விலகி இருப்பது என்பது மிகவும் கடினமானது என்று எனக்கு தெரிகிறது. ஆனால் நிரந்தரமாக எடை இழக்க வேண்டும் என்றால், நீங்கள் முடிந்தவரை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி கடைகளில் கட்டாயம் சாப்பிடாமல் விலகி இருக்க வேண்டும். வீட்டிலேயே எப்போதும் சாப்பிட பழகுங்கள். நீங்களே வீட்டில் சில சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை தயார் செய்ய முயற்சி செய்து சாப்பிட்டால் உங்கள் உடலினை கட்டுக் கோப்பாக பராமரிக்க முடியும், . நீங்கள் வெளியே சாப்பிட நேர்ந்தால், கலோரி எண்ணிக்கையை மறக்க வேண்டாம். இது மிகவும் பயனுள்ள முறையில் எடை இழக்க சிறந்த வழிமுறை ஆகும்.

7. நடைபயிற்சி:

நடைபயிற்சியை மிக முக்கியமான நடவடிக்கை ஆகும் என்வே இதை உங்கள் வாழ்வில் தினசரி இணைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் சாப்பாட்டுக்கு பிறகு குறைந்தது 10 நிமிடங்கள் நடக்கவும். மேலும், ஒரு மணி நேரம் நீண்ட காலை நடைப்பயிற்சி உங்களால் முடியாது என்றால், ஒரு குறுகிய நடைபயிற்சியை காலை முதல் முயற்சி செய்யவும்.

8. கட்டுப்பாட்டிற்குள் வைக்கவும்:

உங்கள் சாப்பிடும் உணவு பகுதிகளில் எப்பொழுதும் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது குறைந்த அளவிலேயே சாப்பிடுங்கள். உங்களுக்கு பசி எடுக்கும் போது மட்டுமே அதிக அளவில் சாப்பிடலாம். இப்படி செய்வதால் நீங்கள் அதிக அளவு சாப்பிடுவஹ்டை கட்டுப்பாட்டிற்குள் வைக்கலாம்
.
9. தினமும் உங்கள் எடையை கண்காணியுங்கள்:

தொடர்ந்து உங்கள் எடை அளவினை கண்காணிக்கவும். உங்கள் எடையை கண்காணிப்பதால், உங்கள் முயற்சிகள் நன்கு வேலை செய்கிறதா இல்லையா என்று கண்டுபிடிக்க உங்களுக்கு உதவும். இப்படி செய்வதால் உங்கள் எடை மாற்‌த்தில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதை கண்டுபிடிக்க மிகவும் உதவியாக இருக்கும். 2 நாட்களுக்கு ஒரு முறை உங்கள் எடையை சரி பார்த்து அதை உங்கள் கையேட்டில் குறித்துக் கொள்ளவும்.

10. நீங்களே உங்களை பாராட்டிக் கொள்ளுங்கள்

நீங்கள் எடை இழக்கும் போதெல்லாம், உணவு சார்ந்த பொருட்களாக இல்லாமல் புதிய ஆடைகள், பைகள், மற்ற பொருட்கள் போன்ற வெகுமதிகளை உங்களுக்கு ஊக்குவிக்க நீங்களே உங்களுக்கு கொடுத்துக் கொள்ளுங்கள். இந்த வெகுமதி முயற்சிகள் உங்களை இன்னும் நல்ல முறையில் எடை இழக்க தூண்டுவதோடு, இதை உங்கள் வாழ்க்கையில் ஒரு நிரந்தர பகுதியாக செய்து விடும். இதற்கு பிறகு, உங்களுடைய கூடுதல் பவுண்டுகளை இழப்பது உண்மையில் ஒரு முக்கிய சாதனை ஆகிறது.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். கீழே உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
lose weight

Related posts

உடல் எடையால் கஷ்டப்படுறீங்களா?

nathan

தினமும்‬ இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!

nathan

குண்டு கத்தரிக்காயா நீங்கள்? கவலை வேண்டாம்

nathan

இதோ பத்தே நாட்களில் உடல் எடையில் மாற்றம் காண எளிய டிப்ஸ்!!!

nathan

உடல் எடை குறைக்க பின்பற்ற வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை – டாப் 10 டிப்ஸ்!

nathan

பெண்களே உடல் எடையை குறைக்க வேண்டுமா?

nathan

உடல் எடையைக் குறைக்கும் சோம்பு நீர்

nathan

உடல்பருமன் குறைக்க உதவும் குறைந்த கலோரியுள்ள 8 உணவுகள்!

nathan

உடம்பு வெயிட்டைக் குறைக்கணுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan