பள்ளி முடிந்து வீட்டிற்கு சோர்வுடன் வரும் குழந்தைகளை புத்துணர்ச்சியூட்ட அவர்களுக்கு ஜில்லென்று தர்பூசணி, புதினா மற்றும் எலுமிச்சை பயன்படுத்தி ஜூஸ் போட்டுக் கொடுங்கள். இதனால் அவர்கள் புத்துணர்ச்சி அடைவதுடன், அவர்களின் பசியும் அடங்கும். மேலும் இந்த ஜூஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் வண்ணம் ருசியாக இருக்கும்.
சரி, இப்போது அந்த தர்பூசணி புதினா லெமன் ஜூஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
தர்பூசணி – 2 துண்டு
புதினா – 10 இலைகள்
எலுமிச்சை – 1/4
சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
ஐஸ் கட்டிகள் – 2
செய்முறை:
முதலில் தர்பூசணியில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, அதனை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் புதினா, சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் அதில் எலுமிச்சையை பிழிந்து, மீண்டும் ஒருமுறை அடித்து, ஐஸ் கட்டிகளை சேர்த்து பரிமாறினால், தர்பூசணி புதினா லெமன் ஜூஸ் ரெடி!!!