24.9 C
Chennai
Wednesday, Jan 22, 2025
soya ice cream212
ஐஸ்க்ரீம் வகைகள்

சோயா ஐஸ்கிரீம்

சோயா ஐஸ்கிரீம் தேவையான பொருட்கள்

சோயா பொடி – 1/4 கப்
முந்திரிப்பருப்பு – 1/4 கப்
பால் – 21/2 கப்
சீனி – 1/2 கப் + 1 டேபிள் ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் – 1 டீஸ்பூன்
கிரீம் – 2 டேபிள் ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் – சில துளிகள் (அ) ஏலக்காய், குங்குமப்பூ

சோயா ஐஸ்கிரீம் செய்முறை

சோயா சங்க்ஸை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இது தான் சோயா பொடி. சோயா பொடியை 1/4 கப் பாலிலும், முந்திரிப் பருப்பை 1/4 கப் பாலிலும் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய முந்திரியை மிக்ஸியில் விழுதாக அரைத்து, அதோடு ஊற வைத்த சோயாவையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஏலக்காய் வாசனை விருப்பமுள்ளவர்கள், முந்திரி, சோயாவுடன் குங்குமப்பூ, ஏலக்காயையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மீதியுள்ள 2 கப் பாலை 1 கப் ஆகும் அளவு காய்ச்சி வைத்துக் கொள்ளவும். கார்ன் ஃப்ளாரை சிறிது ஆறிய பாலில் கரைத்து காய்ச்சிய பாலுடன் சேர்த்து நன்றாகக் கொதித்த பின் இறக்கி வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை பொடித்துக் கொள்ளவும். பாலுடன் அரைத்த சோயா முந்திரி விழுது, கிரீம், பொடித்த சர்க்கரை இவற்றை சேர்த்து சிறிது கொதிக்க விட்டு, ஆறிய பின் மிக்ஸியில் போட்டு ஒரு அடி அடித்து நன்கு கலந்து கொள்ளவும். வெனிலா ருசி விரும்பினால் வெனிலா எசன்ஸ் சேர்த்து ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைக்கவும். பின் அதை ஃப்ரீசரில் இருந்து எடுத்து திரும்பவும் மிக்ஸியில் போட்டு அடித்து ஐஸ்கிரீம் கப்புகளில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து செட் செய்யவும். ஐஸ்கிரீம் செட்டானவுடன் எடுத்து பரிமாறவும்.
soya ice cream212

Related posts

ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம்

nathan

சாக்கோ நட் ஐஸ்கிரீம்

nathan

குல்பி

nathan

கஸ்டார்ட் ஆப்பிள் ஐஸ் கிரீம்

nathan

குழந்தைகளுக்கான கிவி – பைனாப்பிள் ஐஸ்க்ரீம்

nathan

இளநீர் வழுக்கை ஐஸ்கிரீம்

nathan

ஃபிரைடு ஐஸ்கிரீம்

nathan

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் செய்முறை

nathan

மாம்பழ ஐஸ்கிரீம்

nathan