28.1 C
Chennai
Saturday, Nov 16, 2024
capsicums
சமையல் குறிப்புகள்

குடைமிளகாய் கறி

சைட் டிஷ் என்று மெயின் உணவுக்குத் தொட்டுக்கொள்ள இருக்கும் உணவைக் குறிப்பிடுவோம். அந்த சைட் டிஷ் செய்வதில் கூட மற்ற  காய்கறிகளைப் போல மெயின் காயாக இல்லாமல் குடைமிளகாய் (கேப்சிகம்) சைட் காய்கறியாகவே கருதப்படுகிறது. ஏதாவது மற்றொரு காயின்  துணையோடு சேர்ந்தால்தான் இந்த பதார்த்தம் சுவைக்கும். அவரவருடைய சுவைக்கேற்றாற்போல கொஞ்சமாகவோ அதிகமாகவோ குடைமிளகாயைச்  சேர்த்துக் கொள்ளலாம்.

1. அவரைக்காய் – கேரட் கேப்சிகம் கறி

என்னென்ன தேவை?

அவரைக்காய் – 250 கிராம், கேரட் – 1, குடைமிளகாய் – 1. தாளிக்க: பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, எண்ணெய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை – தேவைக்கேற்ப  (வெள்ளைப்பூண்டு ஒரு பல், சிறிது இஞ்சி – விரும்பினால்), துருவிய தேங்காய், உப்பு – தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

அவரைக்காய், கேரட்டை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். குடைமிளகாயை தனியாக நறுக்கிக் கொள்ளவும். தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்ததும்,  பொடியாக நறுக்கிய அவரைக்காய், கேரட் சேர்த்து, லேசாக நீர் தெளித்து வதக்கவும். நன்றாக வதங்கி வரும்போது, பொடியாக நறுக்கிய குடைமிளகாய்  சேர்க்கவும். உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும்.

2. பீன்ஸ் கேப்சிகம் கறி

என்னென்ன தேவை?

பீன்ஸ் – 200 கிராம், குடைமிளகாய் – அரை. தாளிக்க: பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, எண்ணெய், கடுகு,  பெருஞ்சீரகம், கறிவேப்பிலை – தேவைக்கேற்ப (வெள்ளைப்பூண்டு ஒரு பல், சிறிது இஞ்சி – விரும்பினால்).துருவிய தேங்காய், உப்பு – தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

பீன்ஸை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். குடைமிளகாயை தனியாக நறுக்கிக் கொள்ளவும். தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து பீன்ஸை  சேர்க்கவும். பீன்ஸ் வதங்கியதும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்க்கவும். தேவையெனில் தேங்காய் துருவலைச் சேர்க்கவும்.

3. கேப்சிகம் குருமா

என்னென்ன தேவை?

தக்காளி – 6, குடைமிளகாய் – 2. தாளிக்க: பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, வெள்ளைப்பூண்டு – 2 பல், எண்ணெய்,  கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை – தேவைக்கேற்ப, தக்காளி – 1.அரைக்க 1: வெள்ளைப்பூண்டு – 4 பல், இஞ்சி – சிறிது, பச்சைமிளகாய் – 1.அரைக்க  2: தக்காளி – 4.அரைக்க 3: தேங்காய் – அரை மூடி, பச்சை மிளகாய் – 1, தக்காளி – 1.

சேர்க்க வேண்டிய தூள்கள்: மிளகாய் தூள், தனி மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், தனிவத்தல் தூள் -1 டீஸ்பூன், சீரகத் தூள் – ஒன்றரை டீஸ்பூன், சாம்பார்  பொடி – 3 டீஸ்பூன், கறிமசால் தூள் – 1 டீஸ்பூன். உப்பு, கொத்தமல்லி இலை – தேவைக்கேற்ப, சர்க்கரை – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

குடை மிளகாயை தனியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்தவற்றை மிக்சியில் தனித்தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.  குக்கரில் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். தக்காளி, குடைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும். அரைத்து வைத்தவற்றை  ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். சேர்க்க வேண்டிய தூள்களையும் உப்பையும் சேர்க்கவும். குக்கரை மூடி ஒரு விசில் அடித்ததும் இறக்கி கடைசியில்  சர்க்கரை சேர்த்து, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

4. கேப்சிகம் கேரட் எக் மிக்ஸ்

என்னென்ன தேவை?

கேரட் – 1,  குடைமிளகாய் – அரை, முட்டை – 4, பீன்ஸ் – 4. தாளிக்க: பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்றரை, பச்சை மிளகாய் – 2,  எண்ணெய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை – தேவைக்கேற்ப (வெள்ளைப்பூண்டு ஒரு பல், சிறிது இஞ்சி – விரும்பினால்). மிளகுத்தூள், சீரகத் தூள்,  உப்பு – தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

கேரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குடை மிளகாயை தனியாக நறுக்கிக் கொள்ளவும். தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து பீன்ஸை  சேர்க்கவும். பீன்ஸ் வதங்கியதும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். முட்டையை அடித்து ஊற்றி பக்குவமாக வதக்கவும். மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்க்கவும். தேவையெனில் தேங்காய்த் துருவல் கலக்கவும்.

5. கேப்சிகம் பனீர்

என்னென்ன தேவை?

பனீர் – 200 கிராம், குடைமிளகாய் – அரை.
தாளிக்க: பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, எண்ணெய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை – தேவைக்கேற்ப.  வெள்ளைப்பூண்டு – 3 பல், இஞ்சி – சிறிது, தக்காளி – 1, உப்பு – தேவைக்கேற்ப.
சேர்க்க வேண்டிய தூள்கள்: மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், தனிவத்தல் தூள் – 1 டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், கறிமசால் தூள் – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் லேசாக வதக்கிக் கொள்ளவும். குடைமிளகாய் நறுக்கிக் கொள்ளவும். தாளிக்கக் கொடுத்தவற்றைத்  தாளித்து, தக்காளியையும் தூள்களையும் கலந்து, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். பனீரையும் உப்பையும் சேர்க்கவும்.

6. கேப்சிகம் பனீர் ரைஸ்

பனீர் கேப்சிகம் தயாரானதும், ஆற வைத்த சாதத்துடன் பிசைந்தால் கேப்சிகம் பனீர் ரைஸ் தயார்.

டிப்ஸ்… டிப்ஸ்…

இங்கு கொடுக்கப்பட்ட பதார்த்தங்கள் ஒவ்வொன்றையும் சாதத்துடன் கலந்தால், அத்தனை வகையான குடைமிளகாய் சாத வகைகள் தயார். வேக  வைத்த சேமியா, பாஸ்தா, நூடுல்ஸுடன் சேர்த்தால் அத்தனை வகையான சேமியா, அத்தனை வகையான பாஸ்தா, அத்தனை வகையான நூடுல்ஸ்  தயார்! நெய்யும் முந்திரிப்பருப்பும் சேர்க்க சுவை கூடும்.

Related posts

இஞ்சி குழம்பு

nathan

அரைக்கீரைவைத்து சத்தான கொழுக்கட்டை செய்வது எப்படி?

sangika

சூப்பரான சில்லி பன்னீர் ரெசிபி

nathan

சுவையான பூசணிக்காய் புளிக்குழம்பு

nathan

சுவையான பூண்டு சிக்கன் சாதம் செய்வது எப்படி?

nathan

சுவையான காளான் வறுவல்

nathan

தயிர் சேமியா செய்வது எப்படி?….

sangika

சுவையான பிட்சா தோசை

nathan

“நீங்க உங்கள் சமையலறையில் (Plastic Cutting Board) பிளாஸ்டிக் கட்டிங் போட் ஐ வைத்து தான் காய்கறிகளை வ…

nathan