25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
03 1446547083 cashew murukku
சிற்றுண்டி வகைகள்

முந்திரி முறுக்கு: தீபாவளி ஸ்பெஷல்

தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் ஒரே குஷி தான். இதற்கு இந்நாளில் அனைவரது வீடுகளிலும் பல்வேறு பலகாரங்கள் செய்யப்படுவது தான். குறிப்பாக தீபாவளிக்கு அனைத்து வீடுகளிலும் முறுக்கு சுடப்படும். எப்போதும் ஒரே மாதிரியான முறுக்கை சுடுவதற்கு பதிலாக, இந்த வருடம் சற்று வித்தியாசமாக முந்திரி முறுக்கு செய்து பாருங்கள்.

இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த முந்திரி முறுக்கை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!


03 1446547083 cashew murukku
தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 1 கப்
முந்திரி – 20
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முந்திரியை சுடுநீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த முந்திரி பேஸ்ட், நெய் மற்றும் உப்பு சேர்த்து கையால் நன்கு பிசையவும். வேண்டுமானால் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி முறுக்கு பதத்திற்கு மாவை மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

எண்ணெய் சூடானதும், முறுக்கு உழக்கில் எண்ணெயை தடவி, பின் அதனுள் பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து நேரடியாக எண்ணெயில் பிழிய வேண்டும்.

பின் அதனை பொன்னிறமாக பொரித்து எடுத்து, மீதமுள்ள மாவையும் அதேப்போல் பிழிந்து பொரித்து எடுத்தால், முந்திரி முறுக்கு ரெடி!!!

Related posts

பிரட் பகோடா :

nathan

சுவையான சத்தான குதிரைவாலி புலாவ்

nathan

ஆந்திரா ஸ்டைல் கார்ன் வடை

nathan

சிவப்பு அரிசி சர்க்கரைப் பொங்கல்

nathan

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்…. மிகவும் பிடிக்கும்

nathan

தித்திப்பான தேங்காய் லட்டு செய்முறை விளக்கம்

nathan

கோதுமை உசிலி

nathan

உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி

nathan

மாங்காய் இனிப்பு பச்சடி

nathan