தற்போது நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்று சொல்வதை விட, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளும் பழக்கம் குறைந்து, ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உட்கொண்டு வருவதால், விரைவில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உயிர் இழப்போரின் அளவு அதிகரித்துவிட்டது. ஆம், ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது குறைவதோடு அழிக்கப்படுகிறது.
இதன் காரணமாக இக்காலத்தில் 50 வயதை எட்டும் முன்பே பலர் இறப்பை சந்திக்கின்றனர். ஆகவே இப்போது உயிருக்கு உலை வைக்கும் மற்றும் உலகில் நாம் வாழும் நாட்களைக் குறைக்கும் சில ஆபத்தான உணவுகளைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, இனிமேல் அவற்றை அதிகம் உட்கொள்ளும் பழக்கத்தைத் தவிர்த்திடுங்கள்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
சூப்பர் மார்கெட்டுகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில், அவை கெட்டுப் போகாமல் இருப்பதற்காக பல்வேறு கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன. அந்த கெமிக்கல்களானது புற்றுநோயை உண்டு பண்ணுபவை. மேலும் அதில் உப்பு அதிகம் இருப்பதால், அவை உடல் பருமனை ஏற்படுத்தி, பல்வேறு நோய்களுக்கு உள்ளாக வழிவகுக்கும். எனவே இவற்றை தவிர்ப்பது மிகவும் அவசியம்.
பாஸ்ட் ஃபுட்
பாஸ்ட் ஃபுட் உணவுகளான பர்கர் மற்றும் பிரெஞ்சு ப்ரைஸ் போன்றவை தான் தற்போது மக்களால் அதிகம் உண்ணப்படும் உணவுப் பொருட்களாக உள்ளன. ஆனால் இந்த உணவுப் பொருட்களை உட்கொள்வதால் வாழ்நாளின் அளவு குறைகிறது என்பது தெரியுமா? ஆம், இந்த உணவுப் பொருட்களில் உப்பு அளவுக்கு அதிகமாக இருப்பதால், அவை உடல் பருமன் பிரச்சனையை ஆரம்பித்து, உடலில் வேறு பல நோய்களையும் மெதுவாக வரவழைக்கும்.
மாட்டிறைச்சி
சமீபத்திய ஆய்வு ஒன்றில் மாட்டிறைச்சியை உட்கொண்டு வந்தால், வாழ்நாளின் அளவு குறையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் போன்றவை நிரம்பியிருப்பதால், இவை இதயம் மற்றும் செரிமான மண்டலத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துமாம்.
மைக்ரோவேவ் பாப்கார்ன்
மைக்ரோவேவ் பாப்கார்னில் புற்றுநோயை ஏற்படுத்தும் பெர்ப்ளூரோக்டனாயிக் அமிலம் அதிகம் நிறைந்திருப்பதால், இதனை உட்கொண்டு வர வாழும் நாட்களும் குறையும்.
சோடாக்கள்
சோடாக்களில் சர்க்கரை அதிகம் இருப்பதோடு, அந்த சர்க்கரை புற்றுநோய் செல்களுக்கு ஊட்டத்தை வழங்கும். எனவே சோடாக்கள் மற்றும் இதர குளிர் பானங்கள் பருகுவதை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், விரைவில் இறப்பை சந்திக்கக்கூடும்.
இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…