29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
2 sneezing
மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ்! தும்மல் தொடர்ச்சியா வருதா? அதிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் சில வழிகள்!

உங்களுக்கு தும்மல் தொடர்ச்சியாக வருகிறதா? முக்கியமான மீட்டிங்கில் இருக்கும் போது, இடையூறு அளிக்கும் வகையில் நீங்கள் மட்டும் தொடர்ச்சியாக தும்மல் வருகிறதா? இதனால் மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாகிறீர்களா? இந்த தும்மலே உங்களது பெயரை பாழாக்குகிறதா? முக்கியமாக தும்மல் வருவதாலேயே எந்த ஒரு வேலையிலும் சரியாக கவனத்தை செலுத்த முடியவில்லையா? கவலையை விடுங்கள்.

ஒவ்வொருவருக்கும் தினமும் ஒருமுறையாவது தும்மல் வரும். ஆனால் அந்த தும்மல் தொடர்ச்சியாக வரும் போது சற்று அதிக கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். ஏனெனில் தும்மல் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று சுற்றுச்சூழல் அல்லது காலநிலை மாற்றம் ஏற்படும் போது பலர் தும்மல் பிரச்சனையை சந்திப்பார்கள். இன்னும் சில நேரங்களில் தூசி அல்லது அளவுக்கு அதிகமாக மருன்துகுளை எடுப்பதன் மூலம் தும்மல் வரும். சில சமயங்களில் தும்மல் வைரஸ் தாக்கத்தினாலும் வரக்கூடும்.

தும்மலுக்கான அறிகுறிகள்

தும்மலுக்கான அறிகுறிகளுள் மூக்கு ஒழுகல் மற்றும் இருமல் போன்றவை பொதுவான அறிகுறிகளுள் ஒன்று. சில சமயங்களில் காய்ச்சலும் வரும். அதோடு மிகுதியான களைப்பு மற்றும் தலைவலி போன்றவற்றுடன் மிகுந்த அசௌகரியத்தையும், அன்றாட செயல்பாடுகளை செய்ய முடியாமலும் இருக்கும். மேலும் பசியின்மை மற்றும் மூக்கு பகுதியில் வலியையும் சந்திக்க நேரிடும்.

தும்மலை இயற்கை வழியில் எப்படி தடுப்பது?

பொதுவாக தும்மல் தொடர்ச்சியாக வரும் போது, நாம் உடல்நலம் சரியில்லை என்று நினைத்து, உடனே ஆன்டி-பயாடிக் மருந்துகளை எடுப்போம். ஆனால் இப்படி வெறும் ஆன்டி-பயாடிக் மருந்துகளை எடுப்பதால் மட்டும் இப்பிரச்சனையில் இருந்து விடுபட முடியாது. அதோடு ஆன்டி-பயாடிக் மருந்துகளை அதிகம் எடுப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதும் அல்ல.

சரி, தும்மல் பிரச்சனையில் இருந்து இயற்கையாக விடுபட முடியுமா? நிச்சயம் முடியும். அதிலும் எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் எளிதில் தும்மல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். கீழே தொடர்ச்சியான தும்மல் பிரச்சனையில் இருந்து, விடுவிக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆவி பிடிப்பது

மூக்கில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கும் எளிய வழிகளுள் ஒன்று ஆவி பிடிப்பது. எனவே ஒரு அகலமான பாத்திரத்தில் கொதிக்கும் நீரை நிரப்பி, துணியால் தலையைமூடி 15-20 நிமிடம் ஆவி பிடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை ஆவி பிடியுங்கள். இதனால் தும்மல் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

புதினா எண்ணெய்

தும்மல் பிரச்சனைக்கு புதினா எண்ணெய் நல்ல நிவாரணத்தை வழங்கும். புதினா எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், தும்மலை உண்டாக்கும் வைரஸ் வளர்ச்சியைத் தடுக்கும். அதற்கு சூடான நீரில் சில துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து, அந்த நீரில் ஆவி பிடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்தால், தொடர்ச்சியாக வரும் தும்மலைத் தடுக்கலாம்.

உப்பு

உப்பைக் கொண்டும் தும்மல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். உப்பில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள தொற்றுக்களை நீக்கி, தும்மல் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுவிக்கும். அதற்கு வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, தினமும் 4-5 முறை கொப்பளியுங்கள்.

தேன்

தும்மல் பிரச்சனையில் இருந்து தேன் நல்ல நிவாரணத்தை வழங்கலாம். முக்கியமாக குழந்தைகள் தும்மல் பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், அவர்களுக்கு தேன் கொண்டு சிகிச்சை அளிக்கலாம். அதற்கு 1 ஸ்பூன் தேனில் சிறிது மிளகுத் தூள் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை சாப்பிட்டு வந்தால், தும்மல் பிரச்சனை நீங்கும்.

மற்றொரு வழி, எலுமிச்சை ஜூஸில் தேன் கலந்து குடிப்பது. இதனால் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, மூக்கில் ஏற்படும் அரிப்பில் இருந்து விடுவிக்க உதவும்.

பூண்டு

பல வருடங்களாக, சளி, இருமல், தும்மல் போன்ற பிரச்சனையில் இருந்து விடுபட பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு 2-3 பல் பூண்டை எடுத்து நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் 2 கப் நீரை நன்கு சூடேற்றி, அதில் பூண்டை சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி குளிர வைத்து குடித்தால், தொடர்ச்சியாக வரும் தும்மல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

சிவப்பு வெங்காயம்

சிவப்பு நிற வெங்காயம் தும்மல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், மூக்கில் உள்ள வீக்கத்தைத் தடுத்து, சுவாச பாதையில் உள்ள தொற்றுக்களை நீக்கும். அதற்கு சிவப்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கி, அதில் தேன் சேர்த்து கலந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இப்படி தினமும் சாப்பிட்டால், தும்மல் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

இஞ்சி

தும்மலில் இருந்து விடுபட இஞ்சி பெரிதும் உதவியாக இருக்கும். இதில் உள்ள ஏராளமான மருத்துவ பண்புகள் சுவாச பாதையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, தும்மலில் இருந்து விரைவில் விடுவிக்கும். அதற்கு இஞ்சியை பொடியாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து குடிக்க வேண்டும். அப்படி தினமும் குடித்து வந்தால், சைனஸ் தொற்றுக்களால் ஏற்படும் தும்மலில் இருந்தும் விடுபடலாம்.

சீமைச்சாமந்தி டீ

சீமைச்சாமந்தி மிகச்சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்த ஓர் பொருள். அதனை அன்றாடம் எடுப்பதன் மூலம், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். அதற்கு சுடுநீரில் சிறிது உலர்ந்த சீமைச்சாமந்தி பூக்களைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து, தினமும் 2-3 முறை குடித்து வர, தும்மல் பிரச்சனை நீங்குவதோடு, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தையும் பெறலாம்.

சோம்பு டீ

சோம்பில் உள்ள ஆன்டி-பயாடிக் பண்புகள், தும்மல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதற்கு 2 டீஸ்பூன் சோம்பை ஒரு கப் சுடுநீரில் போட்டு நன்கு 15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தினமும் 2-3 முறை குடித்து வந்தால், சீக்கிரம் தொடர்ச்சியாக வரும் தும்மல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

லாவெண்டர் ஆயில்

லாவெண்டர் ஆயில் தும்மலில் இருந்து உடனடியாக விடுவிப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலிமைப்படுத்தும். மேலும் இது தும்மலை உண்டாக்கும் வைரஸ் மீண்டும் தாக்காமல் தடுக்கும். அதற்கு மூக்கு பகுதிகளில் சிறிது லாவெண்டர் ஆயிலைத் தடவ வேண்டும். இப்படி செய்வதால், தும்மல் தொடர்ச்சியாக வராமல் இருக்கும்.

எள்ளு விதைகள்

எள்ளு விதைகளில் உள்ள மக்னீசியம் சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. அத்தகைய எள்ள விதைகளை பொன்னிறமாக வறுத்து, அதில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலந்து, தினமும் 2-3 முறை சாப்பிட வேண்டும். இதனால் தும்மல் பிரச்சனை நீங்குவதோடு, விரைவில் சுவாசப் பாதையில் இருக்கும் பிரச்சனைகளும் குணமாகும்.

வெந்தயம்

வெந்தயத்தில் உள்ள ஆன்டி-வைரல் பண்புகள், தும்மலில் இருந்து முழுமையாக விடுவிக்கும். முக்கியமாக இது சுவாச பாதையில் இருந்து தும்மல் மற்றும் மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும் சளியை வெளியேற்றும். அதற்கு நீரில் சிறிது வெந்தய விதைகளைப் போட்டு 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தினமும் 2-3 முறை குடித்தால், தும்மல் விரைவில் சரியாகும்.

Related posts

கணவன் மனைவி பிரிவால் குழந்தை நிலை என்னவாகிறது தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தை குண்டா பிறக்கறது நல்லதா? ஒல்லியா பிறக்கறது நல்லதா?

nathan

தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணி பெண்கள் ஐஸ் க்ரீம் சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா?

nathan

சிறுநீரக பாதிப்புடையோர் சாப்பிடக் கூடியவை

nathan

ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது கடுகு

nathan

உங்க உடம்புல இருக்கும் கெட்ட கொழுப்ப குறைக்கணுமா?

nathan

வெள்ளரி…உள்ளே வெளியே !

nathan

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தாய்ப்பாலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றித் தெரியுமா?

nathan