மருத்துவ குறிப்பு

உங்க நாக்கை சுத்தம் வைத்து கொள்ள வேண்டுமா? அப்ப இத படிங்க!

பெரும்பாலும் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் வாய் துர்நாற்றம்.

நமது வாய் துர்நாற்றத்திற்கு ஒரு காரணம் நாக்கு. நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால் வாயை ஆரோக்கியமாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றது.

இதேவேளை நாகின்மீது ஒரு வன்மையான படிவம் படிந்திருந்தாலும் அது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

அதுமட்டுமின்றி நாம் சாப்பிட்டு வாய்கொப்பளிக்காமல் இருந்தால் பேக்டீரியா நம் நாக்கில் வளர்வதை ஊக்குவித்து துர்நாற்றத்ததை ஏற்படுத்தி விடுகின்றது.

தற்போது நாக்கை சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் வைத்துக்கொள்ளவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

  • நாம் நாக்கில் நாம் உண்ணும் உணவின் சிறுதுகள்கள் நாக்கில் படிந்துவிடும் அந்தபடிவத்தை சுத்தம்செய்வது மிகவும் முக்கியம் . இந்த சிறு துகல்களை போக்க சாப்பிட்டவுடன் வாயை ஓவ்வொரு முறையும் கொப்பளித்து சுத்தம் செய்யுங்கள்.
  • நாம் பல் துலக்கிய பின் அந்த பிரஷ்ஷின் பின்புறம் உள்ளநாக்கு சுத்தம் செய்யும் பகுதியால் நாக்கை காலையும் இரவும் சுத்தம் செய்யவேண்டும் .
  • நாக்கை சுத்தம் செய்யும் நாக்கு சீவுளி (tongue scrapper) பயன்படுத்துவது நன்மை அளிக்கும் .
  • ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறையாவது உப்பு கலந்த நீரில் வாயை கொப்பளியுங்கள்.
  • கிரீன் டீ ( Green Tea) அருந்துவது பாக்டீரியா வளர்சியை தடுத்து நாக்கை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகின்றது.
  • நாக்கிற்கு, பற்களை சுத்தம் செய்யும் பற்பசையை பயன்படுத்துங்கள். இது புத்துணர்சியை உண்டாகும் .
  • நாக்கு சீவுளி (tongue scrapper) பயன்படுத்தும் பொழுது வாயை நன்கு கொப்பளித்து சுத்தம் செய்வது மிகவும் அவசியம் .
  • பச்சை காய்கறிகளும் இயற்கையான சத்தான உணவை உண்ணுங்கள்.
  • நாக்கு சுத்தம்செய்யும் பொழுது எப்பொழுதும் கீழ்நோக்கிய நாக்கு சீவுளி பயன்படுத்தி கவனமாக செய்யவேண்டும்.
  • அதிகமான தண்ணீர் குடிப்பதனாலும் வாயையும் அனைத்து உறுப்புகளையும் ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ளலாம்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 3

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button