29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
1 healthy foods 22
ஆரோக்கிய உணவு

உங்க குழந்தை சரியாவே சாப்பிடமாட்ராங்களா? இதோ அற்புதமான எளிய தீர்வு….

குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் பெற்றோர்கள் முக்கிய பங்கினை வகிக்கிறார்கள். அதற்கு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அவர்களுக்கு பிடித்தவாறு கொடுக்க வேண்டும். ஆனால் சில குழந்தைகள் சரியாக சாப்பிடமாட்டார்கள். உங்கள் குழந்தையும் இப்படி சரியாக சாப்பிடாமல் இருந்தால், அவர்கள் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். பிரச்சனை என்றதும் பெரிய அளவில் இல்லை. ஆனால் அதுவே நீடித்தால், அதனால் அவர்களுக்கு பெரிய ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.

பொதுவாக சிலருக்கு நன்கு பசிக்கும் ஆனால் அவர்களால் சாப்பிட முடியாது. இந்த நிலை தான் சில குழந்தைகளுக்கும் இருக்கும். இப்படி இருந்தால், அவர்களின் உடலில் ஊட்டச்சத்து மிகவும் குறைவாக இருக்கும். இன்றைய காலத்தில் பல குழந்தைகளுக்கு இப்பிரச்சனை உள்ளது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அவர்களுக்கு பிடித்தவாறு சமைத்துக் கொடுக்க வேண்டும்.

ஏனெனில் இந்த சத்துக்கள் குழந்தைகளின் மன மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமானது. இது அப்படியே நீடித்தால், அதனால் கவனச்சிதறல், ஞாபக மறதி, உடல் பலவீனம், அடிக்கடி நோய்வாய்ப்படுவது, ஏன் சில நேரங்களில் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் இறப்பை கூட சந்திக்க நேரிடும்.

குழந்தை பசி எடுத்தும் சாப்பிட முடியாத பிரச்சனையால் அவஸ்தைப்படுவதைப் ற்றி பெற்றோர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் இதை அப்படியே விட்டுவிட்டால், உங்கள் குழந்தை தான் கஷ்டப்படும்.

இதை எப்படி கண்டறிவது?

உங்கள் குழந்தை ஜங்க் உணவுகளை மட்டும் அதிகம் விரும்பி உட்கொண்டு, ஆரோக்கியமான உணவுப் பொருட்களைக் கொடுக்கும் போது அவற்றை சாப்பிட மறுத்தால், அவர்களின் உடலில் நிச்சயம் ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவாக இருக்கும். மேலும் இன்றைய நவீன உலகில் உணவுகளில் கலோரிகள் அதிகமாகவும், ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவாக உள்ளது.

எனவே ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளதா என்பதை ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுப் பொருட்களில் பால் மிகவும் ஆரோக்கியமான மற்றும் ஏராளமான சத்துக்கள் நிறைந்த ஒன்று. மேலும் இது ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஓர் முக்கிய உணவுப் பொருளும் கூட. அத்தகைய பாலை சில குழந்தைகள் குடிக்க மறுப்பார்கள். இதற்கு பாலின் மணம் மற்றும் சுவை தான். ஆனால் அந்த பாலில் ஒரு ஸ்பூன் ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்தால், பாலின் மணம் மற்றும் சுவை மாறி, குழந்தைகள் விரும்பிக் குடிக்கும் ஓர் பானமாகிவிடும். மேலும் ஹார்லிக்ஸிலும் குழந்தைகளுக்கு வேண்டிய ஏராளமான நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இங்கு உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறான இரண்டு சுவையான ரெசிபிக்கள் செய்முறையுடன் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து, வீட்டில் செய்து உங்கள் குழந்தைக்கு தினமும் கொடுத்து வாருங்கள். இதனால் உங்கள் குழந்தைக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ரெசிபி: 1

ரெசிபி வகை: சூடான பானம்

இந்த ஹார்லிக்ஸ் கலந்த பாலில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது மற்றும் இதனை குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால், அவர்களின் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும். மேலும் இந்த ரெசிபி உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

ஹார்லிக்ஸ் – 27 கிராம்

தேங்காய் – 4 துண்டுகள் (துருவியது)

பால் – 200 மிலி

தேன் – தேவையான அளவு

ரோஜாப்பூ இதழ்கள் – அலங்கரிக்க

தயாரிப்பு நேரம்: 5-7 நிமிடங்கள்

உணவு காலம்: காலை உணவு/ஸ்நாக்ஸ் நேரம்/மாலை நேரம்

செய்முறை:

* முதலில் பாலை காய்ச்சி 40 மிலி பாலில் ஹார்லிக்ஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* எஞ்சிய பாலில் துருவிய தேங்காய் சேர்க்கவும்.

* பின் தேங்காய் பாலில் ஹார்லிக்ஸ் கலந்து வைத்துள்ள பாலை சேர்த்து கலந்து, மேலே ரோஜாப்பூ இதழ்களைத் தூவி பரிமாறவும்.

ஊட்டச்சத்து மதிப்பு:

எனர்ஜி (kcal) 601.82
கால்சியம் (mg) 387.5
புரோட்டீன் (g) 14.35
கொழுப்பு (g) 29.65
கார்போஹைட்ரேட் (g) 71.09
சர்க்கரை (g) 8.8

ரெசிபி: 2

ரெசிபி வகை: குளிர் பானம்

இந்த ஹார்லிக்ஸ் ஃபுரூட் ஸ்மூத்தி, ஐஸ் க்ரீம்மிற்கு சிறந்த மாற்றாக இருக்கும். மேலும் இதில் பழங்கள் மற்றும் ஹார்லிக்ஸ் இருப்பதால், இவற்றில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமாக இருக்கும். இது பசியை முழுமையாக போக்குவதோடு, குழந்தைகள் விரும்பி பருகும் வகையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

ஹார்லிக்ஸ் – 27 கிராம்

மாம்பழ ஜூஸ் – 60 மிலி

வாழைப்பழம் – பாதி

ஆரஞ்சு ஜூஸ் – 60 மிலி

எள் – 5 கிராம்

தேன் – தேவையான அளவு

ஐஸ் கட்டிகள் – 2

தயாரிப்பு நேரம்: 5-7 நிமிடங்கள்

உணவு காலம்: காலை உணவு/ஸ்நாக்ஸ் நேரம்/மாலை நேரம்

செய்முறை:

* முதலில் மிக்ஸியில் ஐஸ் கட்டிகளை தவிர அனைத்தையும் போட்டு ஒருமுறை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, ஐஸ் கட்டிகளை சேர்த்து பரிமாறவும்.

ஊட்டச்சத்து மதிப்பு:

எனர்ஜி (kcal) 268.4
புரோட்டீன் (g) 6.715
கொழுப்பு (g) 3.88
கார்போஹைட்ரேட் (g 80.51
சர்க்கரை (g) 7.88
கால்சியம் (mg) 278

Related posts

சின்ன சின்ன மருத்துவ நடைமுறைகளையும் கடைபிடித்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்!…

sangika

நீரிழிவு நோயாளிகளுக்கான கோடைக்கால சாலட் ரெசிபி -ஹெல்த் ஸ்பெஷல்

nathan

தொண்டை வலி தாங்க முடியலையா?சமையலறை பொருளே போதும்…!

nathan

கவணம் உணவு சாப்பிட்டதும் நீங்கள் தப்பியும் இந்த 7 தவறுகளை செஞ்சுடாதீங்க!!

nathan

பெருஞ்சீரகம்! வெறும் வயிற்றில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

சுவையான வேர்க்கடலை சட்னி

nathan

ஆரோக்கியத்திற்கு பச்சை மஞ்சள் பெஸ்டா..? இல்லை மஞ்சள் தூளா..?

nathan

உங்களுக்கு தெரியுமா கருவாடு யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குழந்தை பிறந்து 12 மாதம் வரை எந்த உணவை எப்போது கொடுக்க வேண்டும்?

nathan