29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.053.800.900 6
ஆரோக்கிய உணவு

தெரிந்துகொள்ள வேண்டிய விடயம்! காளான் பிரியரா நீங்கள்? எப்போது, எவ்வளவு சாப்பிட வேண்டும்?

இன்று காளான் சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. குறிப்பாக சிக்கன் பிரியாணியைப்போல் சைவப் பிரியர்களுக்கு மஷ்ரூம் பிரியாணி என்றால் கொள்ளை பிரியம். வாரத்தில் ஒரு முறையாவது இந்த காளான் உணவு இடம் பெறுகிறது. காரணம் இதன் தனித்துவ சுவையும், அதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களும்தான்.

ஒரு நாளைக்கு 84 கிராம் காளான் சாப்பிடுகிறீர்கள் எனில் அதில் நார்ச்சத்து 6%, காப்பர் 24- 32%, பாஸ்பரஸ் 6 %பொட்டாசியம் – 12-14%, செலினியம் 13-14% , ஸிங்க் 5-6%, நியாசின் 14%, ரிபோஃப்ளாவின் 13-15% , கோலின் 6% அதோடு, கார்போஹைட்ரேட், சோடியம் என இப்படி ஒரு உணவிலேயே இத்தனை ஊட்டச்சத்துக்களை நம்மால் பெற முடியும். இத்தனை நன்மைகளைக் கொண்டிருப்பதால் எந்தெந்த வகைகளில் நமக்கு நன்மை தரும் என்று பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி : காளான் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். நோய் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் உள்ளது.

உடல் எடை குறைக்க உதவும் : நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருக்கிறீர்கள் எனில் காளானையும் உங்கள் உணவுத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதுவும் உடல் எடையைக் குறைக்க உதவும்.

குறைவான இரத்த அழுத்தம் : அதிக இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் எனில் அதை சம அளவில் வைத்துக்கொள்ள காளான் சாப்பிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதில் உள்ள பொட்டாசியம் சோடியத்தின் எதிர்வினை ஆற்றலை தடுக்கும்.

நினைவாற்றல் அதிகரிக்கும் : சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் 3/4 கப் அளவு கொண்ட மஷ்ரூமை வாரம் இரண்டு முறை சாப்பிடுவதால் உங்களுடைய நினைவாற்றல் அதிகரிக்கும் என்கிறது.

வயது குறைவு : Penn State Study படி காளான் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது. அதோடு சருமத்தை பராமரிக்கும் எர்கோதயோனைன் (ergothioneine) மற்றும் குளூட்டோதயான் (glutathione)உள்ளது. இதனால் உங்கள் வயது அதிகரித்தாலும் இளமையான தோற்றத்தை தரும்.

எப்படி சாப்பிட வேண்டும் ? : மஷ்ரூமை எண்ணெயில் வதக்கி சாப்பிடலாம். ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி வதக்கி சாப்பிட்டால் கூடுதல் சிறப்பு. பின் அதில் கொஞ்சம் உப்பு தூவி உங்களுக்கு பிடித்த உணவோடு சேர்த்து சாப்பிடலாம். தோசை, சாண்ட்விட்ச், பர்கர் என விருப்பம் போல் செய்து சாப்பிடலாம்.

Related posts

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுபவர்களா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்

nathan

நல்ல உடல் ஆரோக்கியம் தரும் உணவு வகைகளில் ஒன்றாக இதுவும் உள்ளதாம்….

sangika

கார்ன் பாலக் கிரேவி

nathan

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுதலை தரும் சிறப்பான உணவுகள்!!!

nathan

பச்சை பட்டாணி சூப்

nathan

சமையல் எண்ணெய் தேர்வு செய்யும் போது கவனம் தேவை

nathan

நாற்பது வயதை கடந்த பிறகு, கட்டாயம் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஏழு உணவுகள்!!

nathan

தாமரை தண்டில் இவ்வளவு நன்மையா?அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

உங்களுக்கு தெரியுமா தேங்காய் பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா…?

nathan