24.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
625.500.560.350.160.300.053.80 2
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…ஒரே ஒரு செடியால் குணமாகும் 14 வகை புற்றுநோய்…

இந்த பூமியில் கோடி கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் சிலவற்றையின் பயன்கள் மட்டுமே நமக்கு தெரியும். நமக்கு தெரியாதவற்றின் பயன்கள் ஏராளம். அந்த வகையில் இந்த ஒரு செடி மட்டுமே 14 வகையான புற்றுநோய்களை எளிதாக கட்டுப்படுத்தும் என தற்போதைய ஆராய்ச்சி கண்டுபிடித்துள்ளது.

இதன் அற்புதத்தை கண்டு விஞ்ஞான உலகமே ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளதாம். அப்படி என்ன வகையான செடி நம்ம வீட்டுல இருக்குனு யோசிக்கிறீங்களா..? இதற்கான விடை மிக சுலபம். இதனை நாம் உணவில் அதிகமாக பயன்படுத்துவோம். 14 வகையான புற்றுநோயை தடுக்க கூடிய ஆற்றல் இந்த ஒரு செடியிலே இருப்பதுதான் இதன் மகத்துவம். சரி வாங்க, அது என்ன செடினு வாங்க தெரிஞ்சிக்கலாம்.

ஆயிரம் காலத்திற்கு முன்னர்

இந்த உணவு பொருளை இன்றோ நேற்றோ நாம் பயன்படுத்தவில்லை. பல ஆயிரம் வருடமாக இதைத்தான் இந்தியர்களின் உணவில் பெரிதும் நாம் பயன்படுத்தி வருகின்றோம். இந்த உணவு பொருள் இல்லாத வீடே இல்லை என்றும் நாம் சொல்லலாம்.

அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி

உலக புகழ்பெற்ற ஃபுளோரிடா பல்கலைக்கழகம் இந்த உணவு பொருளை வைத்து பலவித ஆராய்ச்சிகள் செய்தது. அதன் முடிவில் ஒரு வியப்பூட்டும் தகவல் வெளியானது. அதாவது, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து T-வகை செல்களை அதிக ஆற்றலுடன் வைத்து கொள்ளுமாம். இதனால் எளிதில் நம்மால் நோய்களை தடுத்து நிறுத்த முடியும்.

காரணம் என்ன?

இத்தகைய அற்புதங்கள் இந்த செடிக்கு இருப்பதற்கு காரணம் இதிலுள்ள allicin என்கிற முக்கிய மூல பொருள் தான். இது தான் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைக்க காரணம். இதனால் தான் நமது உடல் 14 வகையான புற்றுநோய்களை எதிர்த்து நிற்கிறது.

என்ன செடி அது?

நம்ம வீட்டிலே இருந்து கொண்டு இவ்வளவு மகத்துவம் செய்ய கூடிய அந்த செடி வேறு எதுவும் இல்லை, பூண்டு தான்.

பூண்டை நாம் உணவில் சேர்ப்பதோடு வேறு சில கலவையுடன் சேர்த்து உண்டால் எளிதாக இதன் பலனை நம்மால் அடைய முடியுமாம். உலகம் முழுக்க பல கோடி மக்களின் வாழ்வை காப்பதில் பூண்டிற்கு முக்கிய பங்கு உள்ளது.

பூண்டும் அதன் கலவையும்

பூண்டின் சக்தி இரு மடங்காக உங்களுக்கு கிடைக்க கீழே கூறும் செய்முறையின்படி தயாரித்து சாப்பிடலாம். இதனை வெறும் வயிற்றில் சாப்பிடுவதே சிறந்தது.

தேவையான பொருட்கள்
  1. கண்ணாடி ஜாடி 1
  2. பூண்டு 20 பற்கள்
  3. தேன் தேவையான அளவு
தயாரிப்பு முறை

ஒரு கண்ணாடி ஜாடியில் பூண்டு பற்களை நறுக்கி போட்டு கொள்ளவும். அதன்பின் இவை மூழ்கும் அளவிற்கு தேனை இவற்றுடன் சேர்த்து கொள்ளவும். ஒரு வாரம் இதனை ஊற வைத்து பின்னர் இதனை சாப்பிடவும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தி வந்தால் கெடாமல் நீண்ட நாட்கள் இருக்கும்.

பூண்டு தடுக்க கூடிய முதல் 14 புற்றுநோய் வகைகள்
  • பெருங்குடல் புற்றுநோய்
  • கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
  • பாசல் செல் காற்சினோமா
  • மார்பக புற்றுநோய்
  • இரைப்பை புற்றுநோய்
  • அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுகேமியா
  • இரத்த வகை புற்றுநோய்
  • கருப்பை புற்றுநோய்
  • கல்லீரல் புற்றுநோய்
  • லிம்போமா புற்றுநோய்
  • தோல் வகை புற்றுநோய்
  • இரத்த செல் புற்றுநோய்
  • கணைய புற்றுநோய்
  • எலும்பு புற்றுநோய்
தொற்றுகளுக்கும் தீர்வு

14 வகையான புற்றுநோயை மட்டுமின்றி மேலும் பல முக்கிய நன்மைகளை இந்த பூண்டு தரவல்லது. குறிப்பாக நமது உடலில் ஏற்படுகின்ற நோய் தொற்றுகளையும் இந்த பூண்டு விரட்டி அடிக்கவல்லது. HIV-1 தொற்றுகள், தொண்டையில் ஏற்பட கூடிய தொற்றுகள், வைரஸ் தொற்றுகள் போன்ற பலவற்றை அழிக்க கூடிய வல்லமை இதற்குண்டு.

தினமும் பூண்டு

தினமும் பூண்டை நமது உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் மேலும் ஏரளமான பயன்கள் நமக்கு கிடைக்கும். அதில் சில…

  1. சீரான ரத்த ஓட்டம்
  2. மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்
  3. இதய கோளாறுகளை தடுத்தல்
  4. கொலஸ்ட்ராலை குறைத்தல்
  5. தசைகளுக்கு வலு தருதல்
  6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

Related posts

ஹார்மோன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சோயா!

nathan

தெரிந்துகொள்வோமா? தலைவலி இருக்கும்போது இந்த உணவுகளை தப்பி தவறி கூட சாப்பிடாதீர்கள்!

nathan

கற்பையும், உயிரையும் பலி வாங்கும் நட்பு

nathan

குண்டு ஆண்களை விரும்பும் பெண்கள்

nathan

சிறுநீரகக் கற்கள் உருவாவதை எப்படி தெரிந்துகொள்வது?

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! சாக்லேட் சாப்பிட்டா சர்க்கரை நோய் வருமா? அலசுவோம்

nathan

முருங்கைப்பூ சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

nathan

கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் தெரியுமா?

nathan

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:

nathan