26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.053.800.900.16
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் நிகழும் அதிசயம்

தண்ணீர் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது என்று அனைவருக்குமே தெரியும். மேலும் தண்ணீரை தினமும் அதிக அளவில் குடித்து வர வேண்டியது அவசியம் என்றும் தெரியும். ஏனெனில் உடலானது 80 சதவீத நீரால் ஆனது. மேலும் உடலில் சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை சுமந்து செல்வதற்கு தண்ணீர் தான் உதவுகிறது.

அத்தகைய தண்ணீரை இன்னும் சிறப்பான வழியில் எப்படி குடிப்பது? நீருடன் தேனைக் கலந்து குடித்தால், இன்னும் ஏராளமான பலனைப் பெறலாம். ஏனெனில் தேனும் மருத்துவ குணம் நிறைந்த ஓர் மருத்துவ பொருள். அத்தகைய தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியம் இன்னும் மேம்பட்டு, நோய்களின்றி இருக்கும்.

சரி, இப்போது தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து குடித்து வந்தால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்…

 

  • வெதுவெதுப்பான தண்ணீரில் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் வாயு தொல்லையால் அவதிப்படுகிறவர்கள் அதிலிருந்து விடுபடலாம்.
  • தேனிற்கு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் சக்தி உள்ளதால், நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.
  • உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படும். அதிலும் அந்நீருடன் சிறிது எலுமிச்சையை சேர்த்துக் கொண்டால், சிறுநீர் பெருக்கத்தினால், எளிமையாக டாக்ஸின்களை வெளியேற்றலாம்.
  • தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்குவதோடு, கழிவுப்பொருட்களை உடலில் இருந்து வெளியேற்ற உதவும். மேலும் சருமத்தையும் பாதுகாக்கின்றது.
  • எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சர்க்கரையை உணவில் சேர்ப்பதைத் தவிர்த்துவிட்டு, இதனை குடித்துவந்தால் நிச்சயம் எடை குறையும்.
  • குளிர் அல்லது மழைக்காலங்களில் வெதுவெதுப்பான நீரில் தினமும் காலையில் தேன் கலந்து குடித்து வந்தால், தொண்டையில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் புண்கள் குணமாக்கப்படும். மேலும் இக்கலவை சளி, இருமல், சுவாசக்கோளாறுகளுக்கு சிறந்த நிவாரணியாகும்.
  • இரத்த சர்க்கரை அளவு சீராக்கப்படுவதோடு, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.
  • தற்போது இதய நோயால் தான் நிறைய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த இதய நோய் தாக்காமல் இருக்க வேண்டுமெனில், தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிக்கலாம்.

Related posts

கொய்யாவில் மருத்துவப் பொருட்கள் அடங்கியுள்ளது !!

nathan

கண் பிரச்சனைகளுக்கு வைட்டமின் சார்ந்த ஆரோக்கிய நலன் மற்றும் பலன்கள்!!

nathan

அன்றாட வாழ்வில் பழங்கள் ஆரோக்கியம் நம்மிடம்

nathan

சூப்பர் டிப்ஸ்! சளி தொந்தரவுக்கு தீர்வு தரும் பூண்டு மஞ்சள் பால்

nathan

தாய்மையை தடுக்கும் உணவுகள்! கவனம் தேவை

nathan

வெறும் வாழைப்பழத்தை 12 நாட்களுக்கு உட்கொண்டால் போதும்!…

sangika

டயட்டில் இருப்பவர்களுக்கு கோதுமை மிளகு தோசை

nathan

இதயத்தில் கொழுப்பு அறவே சேராமல் இருக்க வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

குழந்தையின்மையை போக்கும் ஆவாரபஞ்சாங்கம்.!

nathan