பொதுவாக உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை நீக்க வேண்டியது அவசியமாகும். இயற்கையான முறையில் இந்த கழிவுகள் வெளியேறினாலும், அது சீராக நடைபெற சில உணவுகள், தேநீர் போன்றவை நமக்கு பெரிதும் உதவுகின்றன.
அதிலும் ஒரு சில இயற்கை தேநீர் உடலில் உள்ள நச்சுகளை நீக்க விரைவாக உதவுகிறது. இது தானாகவே நமது உடலில் இருந்து நச்சுத்தன்மையை அகற்ற உதவுகிறது. ஏனெனில் நமது உடலுக்கு தேவையான நீர்சத்து நிறைந்து காணப்படுவது, நமது சிறுநீரங்களில் இருந்து கழிவுகளை வடிகட்ட உதவுகிறது.
எனவே அவை என்னென்ன தேநீர் என்பதை அறிந்து கொண்டு இதனை எடுத்து கொள்வது நல்லது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
டேன்டேலியன் வேரில் உள்ள சத்துக்கள் சிறுநீர் கழிப்பதை ஊக்குவிக்க உதவுகிறது.டேன்டேலியன் தேநீர் நமது உடலில் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்த உதவுகிறது.
ரூய்போஸ் தேநீர் தென்னாப்பிரிக்க சிவப்பு புளித்த இலைகளிலிருந்து கிடைக்கிறது. மேலும் இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகமாக உள்ளன. இது நமது உடலில் இருந்து நச்சுக்களை நீக்க உதவுகிறது.
பெருஞ்சீரகம் தேநீர் நமது உடலில் செரிமான தசைகளை தளர்த்துவதன் மூலம் மலசிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது. இதன் மூலம் நமது உடலை சுத்தப்படுத்தி, நமது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. எனவே காலையில் இந்த பெருஞ்சீரகம் தேநீரை அருந்துவது பயனுள்ளதாக இருக்கும்.
கொத்தமல்லி நமது உடலில் இருந்து நச்சுக்களை சுத்தப்படுத்த உதவுகிறது. டையூரிடிக்ஸ் கொண்ட மூலிகைகள் மூலம் இந்த தேநீர் தயாரிப்பது ஆரோக்கிய நன்மையை அதிகரிக்க உதவுகிறது.
மஞ்சள் நமது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, கல்லீரல் செல்களை சரிசெய்யு உதவும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டிருக்கும் ஒரு மூலப்பொருள் ஆகும். மஞ்சள் தேநீர் கல்லீரல் பாதிப்பைத் தடுக்க உதவும் பல நன்மைகளை கொண்டுள்ளன.
நெட்டில் தேநீர் நமது உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் அழற்சி நோய்களை எதிர்த்துப் போராட நமக்கு உதவுகிறது. மேலும் இது சிறுநீரில் இருந்து கழிவுகளை அநீக்கவும் நமக்கு உதவுகிறது. பெரும்பாலும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் போன்ற சிறுநீரக பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க இந்த தேநீர் பயன்படுத்தப்படுகிறது.
கிரீன் டீ கல்லீரலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கவும் கல்லீரலை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.மேலும் க்ரீன் டீயில் உள்ள எல்-தியானைன் என்ற அமினோ அமிலம் மற்றொரு உள்ளார்ந்த ஆக்ஸிஜனேற்றியான குளுதாதயோனை உற்பத்தி செய்கிறது