இயற்கையாகவே ஆண்கள் தாங்கள் திருமணம் செய்துக் கொள்ள போகும் பெண் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஏன், காதலிக்கும் போதே கூட பெரும்பாலான ஆண்கள் ஸ்லிம்மான பெண்களை தான் தேர்வு செய்ய முனைகிறார்கள். இல்லையேனும் கூட, தங்களது காதலி அல்லது மனைவியை ஸ்லிம்மாக ஆகும் படி கூறுவதும் உண்டு.
ஏன் ஸ்லிம்மாக இருக்கும் பெண் தான் அழகா என்று சிலர் கேள்விகளை எழுப்பலாம், ஸ்லிம்மாக இருப்பது அழகு என்பதை தாண்டி, நல்ல உடல்நலன் என்பது தான் முக்கியமான விஷயம். சமீபத்தில் “ஏன் ஆண்கள் ஸ்லிம்மான பெண்கள் மீது அதிக ஈர்ப்புக் கொள்கின்றனர்” என்ற ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள்…..
அபெர்தீன் பல்கலைக்கழகம்
பிரிட்டனில் இருக்கும் அபெர்தீன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தான் ஏன் ஆண்கள் ஸ்லிம்மான பெண்கள் மீது அதிக ஈர்ப்புக் கொள்கின்றனர் என்பது பற்றி கூறப்பட்டுள்ளது. முதலில் இந்த ஆய்வில் பி.எம்.ஐ (BMI – Body Mass Index) 24 – 24.8 உள்ள பெண்களை தான் ஆண்கள் விரும்புவார்கள் என்று கருதப்பட்டது. இந்த ஆய்வில் பிரிட்டன் முதலிய 8 நாடுகளை சேர்ந்த 1,300க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர்.
21 பெண்களின் புகைப்படங்கள்
இந்த ஆய்வில் பங்கெடுத்த 1,300 நபர்களிடமும் வெவ்வேறு உடல்வாகு கொண்ட 21 பெண்களின் புகைப்படங்கள் கொடுக்கப்பட்டு, அவர்களுக்கு பிடித்தவாறு வரிசைப் படுத்த கூறப்பட்டது.
உடல்வாகு சார்ந்த விருப்பம்
ஆண், பெண் என்ற வேறுபாடு இன்றி இந்த ஆய்வில் கலந்துக் கொண்ட அனைவரும் உடல்வாகு சார்ந்தே கொடுக்கப்பட்ட 21 பெண்களின் புகைப்படங்களை வரிசைப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.எம்.ஐ. 19
ஆய்வின் போது, ஆய்வாளர்கள் எதிர்பார்த்தது என்னவோ பி.எம்.ஐ. 24 – 24.8 உடல்வாகு கொண்ட பெண்கள் தான் அதிகம் விரும்பப்படுவர் என்று தான். ஆனால், ஆய்வில் இருபாலரும் தேர்வு செய்தது பி.எம்.ஐ 19-இல் இருக்கும் ஸ்லிம்மான பெண்களை.
உடல்நலனுக்கு ஏற்ற பி.எம்.ஐ
ஃபிட்னஸ் வல்லுனர்கள் பி.எம்.ஐ. 24 – 24.8 தான் சரியான ஆரோக்கியத்திற்கான அளவு என்று கூறுகிறார்கள். ஆனால், இந்த ஆய்வில் கலந்துக்கொண்ட ஆண்கள், மற்றும் பெண்கள், பி.எம்.ஐ. 17 – 20 மத்தியில் இருக்கும் பெண்களை தான் அதிகம் விரும்பியிருக்கிறார்கள்.
ஸ்லிம்மாக இருப்பதன் நன்மைகள்
ஸ்லிம்மாக (ஒல்லியாக அல்ல) இருப்பதால், எதிர்காலத்தில் இவர்களுக்கு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு மற்றும் இனப்பெருக்கம் அல்லது குழந்தை பெற்றுக் கொள்வதில் இவர்களுக்கு எந்த சிரமும் இருக்காது.
ஐரோப்பிய, ஆசியா, ஆப்ரிக்கா
ஐரோப்பிய, ஆசியா, ஆப்ரிக்கா போன்ற கண்டங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின் தகவல்கள் ஒரே மாதிரியான முடிவுகளை தான் கொடுத்திருக்கின்றன. ஆகையால், பெரும்பாலும் ஆண்கள் ஸ்லிம்மான பெண்கள் மீது தான் அதிக ஈர்ப்புக் கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.
கொழுப்பு அதிகமுள்ள பெண்களுக்கு இருக்கும் இடர்பாடுகள்
உடலில் கொழுப்பு அதிகம் இருக்கும் பெண்களுக்கு நாள்பட்ட நோய்களான நீரிழிவு மற்றும் இதய கோளாறுகள் அதிகம் ஏற்படுகின்றன. இது இவர்களுக்கு பெரிய உடல்நல இடர்பாடாக அமைகிறது. மற்றும் பிரசவத்தின் போதும் அதிக உடல் எடை அவர்களுக்கு பெரும் தடையாக இருக்கிறது.
பப்ளியான பெண்கள்
ஸ்லிம்மான பெண்களை அதிகம் ஆண்கள் விரும்பினாலும், அதற்கு அடுத்துப்படியாக பப்ளியான பெண்களையும் ஆண்கள் அதிகமாக விரும்புகிறார்கள். ஸ்லிம் என்ற பெயரில் மிகவும் ஒல்லியாக இருப்பது உடல்நலத்திற்கு தீங்கானது என்று கூறுகிறார்கள்.
சீனா உதவி
அபெர்தீன் பல்கலைக்கழகம் மட்டுமில்லாது உலகம் முழுக்க உள்ள 10 பல்கலைக்கழகங்களுக்கு சீனாவின் தேசிய அறிவியல் மையம் நிதியுதவி வழங்கி இந்த ஆய்வை செய்ய கூறியுள்ளது.