28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
4
சிற்றுண்டி வகைகள்

கோதுமை மாவு சப்பாத்தி

தேவையானப் பொருள்கள்:

கோதுமை மாவு_3 கப்புகள்
தயிர்_ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து லேசாக சூடுபடுத்து.கை பொறுக்கும் சூடு ஆனவுடன், அடுப்பை அனைத்துவிட்டு அதே சூட்டில் மாவைக் கொட்டி நன்றாகக் கிளறு.பின்பு கைகளால் எண்ணெய் மாவு முழுவதும் படுமாறு நன்றாகப் பிசைய வேண்டும்.அடுத்து தயிர்,உப்பு சேர்த்து முன்பு போலவே நன்றாகப் பிசைய வேண்டும்.அடுத்து ஒரு கப் சூடானத் தண்ணீரை சிறிது சிறிதாகத் தெளித்து நன்றாகப் பிசைய வேண்டும்.பூரி மாவை விட சற்றுத் தளர்வாக இருக்க வேண்டும்.ஒரு பேப்பர் டவலை (அ) ஒரு துணியை நனைத்துப் பிழிந்துவிட்டு மாவைச் சுற்றி வைத்து ஒரு மூடியைப் போட்டு மூடி வை.சப்பாத்தி சுடுவதற்கு முன் கண்டிப்பாக குறைந்தது அரை மணி நேரத்திற்கு முன்பே மாவைப் பிசைந்து வைத்து விட வேன்டும்.அப்போதுதான் நல்ல மிருதுவான சப்பாத்தியைப் போடலாம்.

ஒரு அடி கனமானத் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கு.மாவில் இருந்து ஒரு சிறு எலுமிச்சை அளவு எடுத்து லேசாக உருட்டி இரண்டு பக்கமும் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு பூரிகட்டையின் உதவியால் வட்டாமாக உருட்டு.பூரியை விட சற்று மெல்லியதாக இருக்க வேண்டும்.கல் நல்ல சூடானதும் அதில் போடு.கண்டிப்பாக கல் நல்ல சூடாக இருக்க வேண்டும்.

4
சிறுசிறு பபுள்ஸ் மாதிரி வரும்.அடுத்த பக்கம் திருப்பி விட்டு,ஒரு ஸ்பூனின் அடிப்பகுதியில் எண்ணெய் தொட்டு சப்பாத்தி முழுவதும் தேய்த்து விட்டு திருப்பிப் போட்டு மறுபக்கமும் அதே போல் எண்ணெய் தடவு.இப்போது சப்பாத்தி பூரியைப் போல் உப்பிக்கொண்டு வரும்.

இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து விடு.இதுபோல் எல்லாவற்றையும் செய்துகொள்.நல்ல சாஃப்டான சப்பாத்தி ரெடி.

இதற்கு விருப்பம் போல் சைவ,அசைவ குருமா தொட்டு சாப்பிடலாம்.

Related posts

சுவையான வெண்டைக்காய் தயிர் பச்சடி

nathan

மசாலா பூரி

nathan

பிரெட் மோதகம்

nathan

வெஜ் சமோசா செய்ய இதை பாருங்க….

nathan

ஜவ்வரிசி வடை: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

nathan

சுவையான பட்டாணி தோசை

nathan

பச்சை பாசிப்பருப்பு சீயம்

nathan

நேந்திரம்பழ நொறுக்கு

nathan

சிவப்பு அரிசி – தக்காளி தோசை

nathan