தற்போது இருக்கும் உலகில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவில், கோதுமை பெரும் பங்கு ஆற்றி வருகிறது.
கோதுமை உடலுக்கு அவ்வளவு நல்லது, உடலுக்கு அதிகம் பலன் கொடுக்கும் என்று நாம் தாத்தா, பாட்டி சொல்வதை கேட்டிருப்போம்.
அப்படி இந்த கோதுமையை வெறுமேன சாப்பிடாமல் முளைகட்ட வைத்து, அதை பாலாக்கி சாப்பிட்டு வந்தால், எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
முளைகட்டிய கோதுமை
கோதுமையை முதலில் நன்றாக கழுவி முளைகட்ட வைக்க வேண்டும். அதன் பின் முதல் நாள் மாலையில் முளைகட்டியதை, மறுநாள் காலையில் எடுத்து அதனுடன் தண்ணீர்விட்டு நன்றாக அரைத்து பால் எடுக்க வேண்டும்.
அதன் பின் தேங்காய்ப்பால், சுவைக்கு வேண்டும் என்றாள் தேன் என சேர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
பயன்கள்
இப்படி கோதுமை பால் தொடர்ந்து குடித்து வருவதன் மூலம் வாத நோயை குணமாக்கும்.
வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
மூக்கில் நீர் வடிவது நிற்கும்.
மேலும் புற்றுநோயை எதிர்க்கும் சக்தி கூட இந்த கோதுமை பாலுக்கு இருக்கிறது.
வயிற்று போக்கு
இதை தொடர்ந்து சாப்பிடும்போது சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
அப்படி வயிற்று போக்கு ஏற்பட்டால் குடிப்பதை நிறுத்திவிட்டு, வயிற்றுப்போக்கு நின்ற பின், ஒருநாள்விட்டு கோதுமைப்பாலைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் ஏற்றுக் கொள்ளும்.