29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
liporiyal1
ஆரோக்கிய உணவு

ப்ராக்கோலி பொரியல்

இதுவரை எத்தனையோ முறை ப்ராக்கோலியைப் பற்றி படித்திருப்பீர்கள். ஆனால் இந்த ப்ராக்கோலியை எப்படி செய்து சாப்பிடுவது என்று பலருக்கு தெரியாமல் இருக்கும். அத்தகையவர்கள் ப்ராக்கோலியை பொரியல் போன்று செய்து சாப்பிடலாம். இங்கு அந்த ப்ராக்கோலி பொரியலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.

அதைப் படித்து அதன்படி முயற்சித்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு ப்ராக்கோலி பொரியல் மிகவும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்:

ப்ராக்கோலி – 1 (சிறியது)

வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1

துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – 1/2 டீஸ்பூன்

வரமிளகாய் – 2

உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ப்ராக்கோலியை நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்த தாளிக்க வேண்டும்.

பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் ப்ராக்கோலி மற்றும் உப்பு சேர்த்து 3-5 நிமிடம் நன்கு வதக்கி, ப்ராக்கோலி நன்கு அடர் நிறத்தில் மாறும் போது, அதில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ப்ராக்கோலி பொரியல் ரெடி!!!

Related posts

சுவையான சாதம் கஞ்சி சூப்

nathan

கிரீன் டீக்கு பதிலா இந்த சிகப்பு டீயை குடிச்சு பாருங்க… இவ்வளவு நன்மைகளா….

nathan

பலத்துக்கு வலுசேர்க்கும் பயறு வகைகள்!

nathan

பீட்ரூட் புலாவ்

nathan

பச்சை பட்டாணி சூப்

nathan

கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!தெரிந்துகொள்வோமா?

nathan

வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

வெற்றிலையில் நெல்லி ரசம் எப்ப‍டி வைப்ப‍து?…

sangika

14 நாட்கள்.. 2 பேரிச்சம்பழம் மட்டுமே சாப்பிட்டால் போதும் தெரியுமா?

nathan