27.9 C
Chennai
Monday, Nov 18, 2024
Kottu Parotta
சிற்றுண்டி வகைகள்

சில்லி கொத்து சப்பாத்தி

என்னென்ன தேவை?

சப்பாத்தி – 4
வெங்காயம் – 2
தக்காளி – 2
குடை மிளகாய் – ஒன்று (சிறியது)
இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – ஒன்று
தனி மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் – ஒரு தேக்கரண்டி
முட்டை- 2

எப்படி செய்வது?

சப்பாத்திகளை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, லவங்கம், பட்டை தாளிக்கவும். தாளித்தவற்றுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கியதும் தக்காளி மற்றும் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். குடை மிளகாய் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தூள் வகைகள், உப்பு சேர்த்து வதக்கவும்.

வதக்கியவற்றுடன் நறுக்கிய சப்பாத்திகளை சேர்த்து வதக்கவும். சப்பாத்தியுடன் மசாலா நன்கு சேர்ந்து வந்ததும் முட்டையை உடைத்து ஊற்றவும். முட்டை வெந்து கலவையுடன் ஒன்றாக ஆனதும் கறிவேப்பிலை சேர்த்து புரட்டி இறக்கவும். சுவையான சில்லி கொத்து சப்பாத்தி தயார். சப்பாத்தி அதிகமாய் மீந்து போனால் இப்படி செய்யலாம்.
Kottu+Parotta

Related posts

பெப்பர் இட்லி

nathan

வேர்க்கடலை லட்டு

nathan

இஞ்சித் தொக்கு

nathan

வாழை இலை கொழுக்கட்டை

nathan

மாலை நேரத்தில் சாப்பிட சிறந்த சிற்றுண்டி வகைகள்

nathan

காலிஃப்ளவர் பக்கோடா

nathan

ராஜ்மா அடை

nathan

மாலைநேர டிபனுக்கு ஏற்ற மைசூர் போண்டா

nathan

இனிப்புச்சீடை

nathan