25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
18 cucumber ginger juice
ஆரோக்கிய உணவு

சூப்பரான வெள்ளரிக்காய் இஞ்சி ஜூஸ்

கொளுத்தும் வெயிலால் உடலின் வெப்பநிலையானது அதிகரித்து, சூடு பிடிக்க ஆரம்பித்து, மேலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆகவே வெயிலின் தாக்கம் தெரியாமல் உடல் குளிர்ச்சியாக இருக்க, காலையில் வெள்ளரிக்காய் இஞ்சி ஜூஸ் குடியுங்கள்.

இதனால் வெள்ளரிக்காய் உடலின் வெப்பத்தை தணிக்கவும், இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்ற நோய்கள் வராமலும் தடுக்கும். இங்கு வெள்ளரிக்காய் இஞ்சி ஜூஸின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

 

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் – 1 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)

இஞ்சி – 1 இன்ச்

சர்க்கரை – 1 டீஸ்பூன்

சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்

கருப்பு உப்பு – 1/2 டீஸ்பூன்

தண்ணீர் – 1 கப்

செய்முறை:

முதலில் பிளெண்டரில் வெள்ளரிக்காய் துண்டு, இஞ்சி மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, கருப்பு உப்பு, சர்க்கரை மற்றும் சீரகப் பொடி சேர்த்து கலந்து பரிமாறினால், வெள்ளரிக்காய் இஞ்சி ஜூஸ் ரெடி!!!

Related posts

உப்புக்கு பதிலாக சுவைத் தரும் சில மூலிகைப் பொருட்கள்!!

nathan

ஒத்தைப்பல் பூண்டுல அப்படி என்ன அற்புதம் இருக்குன்னு தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

நீரிழிவு நோயின் எதிரி

nathan

கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் சரும பலன்கள் என்ன தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கொய்யாவில் மருத்துவப் பொருட்கள் அடங்கியுள்ளது !!

nathan

வெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை!

nathan

அளவுக்கு மேல் எடுத்து கொள்ளாதீங்க! உயிருக்கே உலை வைக்கும் பாதாம்..

nathan

பிஸ்தா சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சூப்பரான ரோஸ் மில்க் செய்வது எப்படி..!

nathan