26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
Baby getting immunisation
மருத்துவ குறிப்பு

தடுப்பூசிகள் டாக்டர் என்.கங்கா

குழந்தை பிறந்த 45 நாட்கள் ஆனவுடன் முத்தடுப்பு ஊசி, போலியோ சொட்டு மருந்து (முதல் தவணை) தரப்படவேண்டும். இப்போது DPT எனப்படும் Triple Antigen, HIB எனப்படும் மூளைக் காய்ச்சல் தடுப்பு ஊசி, B வகை மஞ்சள் காமாலைத் தடுப்பு எல்லாம் சேர்ந்து Pentavalent என்ற ஊசி அரசுத்துறை மூலம் அளிக்கப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளிலும் போடலாம். இந்த முத்தடுப்பு ஊசி (acellular DPT) வலி இல்லாததது. சிறிது வலி ஏற்படுத்தக் கூடியது (whole cell DPT) என்று இரண்டு வகைகள் உள்ளன. வலி இல்லாதது விலை அதிகம். கிடைப்பதும் அரிதாக உள்ளது. அதிகம் விலைகொடுத்தாலும் அதனால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி சுமார் 10 வருடங்கள் தான் நிலைக்கிறது என்கிறது மருத்துவ ஆராய்ச்சி. எனவே தடுப்பு ஊசி போட்டு 24 மணி நேரம் வரை தொடைப்பக்கம் வலி, வீக்கம் லேசான காய்ச்சல், சிணுங்கல், அழுகை, இருந்தாலும் சாதாரண தடுப்பு ஊசிதான் நல்லது.

ஓரிரு நாட்கள் குளிக்க வைக்கக் கூடாது. காய்ச்சல், மற்றும் வலிக்கு மாத்திரைகள் மருத்துவர் தருவார். ஊசி போட்ட இடத்திற்கு வெந்நீர் அல்லது ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கக் கூடாது. அழுத்தித் தேய்க்கவும் கூடாது. ஊசி போட்ட தொடைப் பகுதியில் 2-3 வாரத்திற்கு ஒரு சிறு உருண்டை போல வீக்கம் இருக்கலாம். இது தானாக மாறிவிடும்.

குழந்தைக்கு வலிப்பு நோய், மூளை வளர்ச்சி பாதிப்பு போன்ற மருத்துவக் காரணங்கள் இருந்தால் விலை அதிகமான ஊசியை மருத்துவர் பரிந்துரை செய்வார். குழந்தைக்கு 30 நாட்கள் முடியும் வரை அந்த சொட்டு மருந்து ஜீரண மருந்து எதுவும் தேவையில்லை. இரண்டு மாதத்திலிருந்து Vitamin D சொட்டு தினமும் வெறும் வயிற்றில் 400 IV தரப்பட வேண்டும். குழந்தைக்கு ரத்த சோகை இருந்தால் இரும்பு சத்து சொட்டு மருந்து (Iron drops) தரப்பட வேண்டும். இவற்றை மருத்துவரே அறிவுறுத்துவார்!

2-3 மாதங்களில் குழந்தை ஆ, ஊ என்று குரல் கொடுக்க ஆரம்பிக்கும். இந்த பாஷைக்கு cooing என்று பெயர்! ஆமாம்! குயிலின், கிளியின் கூவலாகத் தான் இந்த மொழியை நாம் அனுபவிக்க வேண்டும். எதிர்க்குரல் கொடுத்தால் (எசப்பாட்டு படித்தோமானால்) குழந்தையிடம் நல்ல ரெஸ்பான்ஸ் தெரியும்! செய்து பாருங்களேன். விடிகாலை நான்கு மணிக்கு விழித்துக் கொண்டு கை கால்களை உதைத்து ஆ ஊவென்று சப்தமிடும் குழந்தையிடம் நிறையப் பேசுங்கள்.

3 மாதங்கள் முடிவதற்குள் குழந்தை விரல் சப்ப ஆரம்பிக்கலாம். இது பசியின் அறிகுறி அல்ல! இயற்கை நிகழ்வு. தானாக மாறும். இது oral phase of learning என்பதன் முதல்படி. விரல்களைச் சப்பும்போது குழந்தைக்குச் சில விஷயங்கள் தெரிகின்றன. இது கெட்ட பழக்கம் என்று விரலை எடுத்து விலக்கி விடாதீர்கள்! ஒரு வயதில் இந்தப் பழக்கம் தானாக மாறிவிடும்!

குழந்தை ஒருக்களித்துப் படுக்க ஆரம்பிக்கும். யாராவது அதன் பக்கமாக நடந்து போனால் அந்த திசையை நோக்கி கண்களை ஓட்ட ஆரம்பிக்கும்.
பாப்பாவுடன் உங்கள் பாசப்பிணைப்பு அதிகரிக்க, நீடிக்க, கண்ணோடு கண் பாருங்கள்! பேசுங்கள்! முத்தம் மட்டும் உள்ளங்கால்களில்தான்!
Baby getting immunisation

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் ஆன்டி பயாடிக் மருந்துகளை உட்கொள்வது பாதுகாப்பானதா?

nathan

உடல் சோர்வைப் போக்கும் மூலிகை குளியல்!

nathan

பேச்சுலர்களே! உங்கள் வீடுகளை அழகாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!

nathan

எந்த கஷ்டமும்படாம உங்க உடல் எடையை ஈஸியா குறைக்கணுமா -அற்புதமான எளிய தீர்வு

nathan

நாள்பட்ட நெஞ்சு சளியை காணாமல் செய்ய வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

இரைப்பை குடல் அழற்சிக்கான சில எளிய கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

ஏன் தெரியுமா மருத்துவர் முதலில் நமது நாக்கை பார்ப்பது?

nathan

மருமகள்களுக்கு சில அன்பான ஆலோசனைகள்

nathan

தெரிந்துகொள்வோமா? சிறுநீர் கழிப்பதைப் பொறுத்தவரை பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை

nathan