30.5 C
Chennai
Thursday, Jul 10, 2025
mango lassi SECVPF
ஆரோக்கிய உணவு

ட்ரை ஃபுரூட்ஸ் மாம்பழ லஸ்ஸி

லஸ்ஸிக்களில் பல வகைகள் உள்ளன. அதிலும் மாம்பழ சீசன் வரப் போகிறது. அந்த சுவையான மாம்பழத்தைக் கொண்டு கூட அருமையான சுவையில் லஸ்ஸி தயாரிக்கலாம். மேலும் இந்த லஸ்ஸியை குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள்.

அதிலும் இதில் ட்ரை ஃபுரூட்ஸ் சேர்த்து செய்வதால், இது ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இப்போது அந்த ட்ரை ஃபுரூட்ஸ் மாம்பழ லஸ்ஸியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

தயிர் – 1 கப்

மாம்பழம் – 1 (தோலுரித்து நறுக்கியது)

பாதாம் – 4-5 (தட்டியது)

பிஸ்தா – 3-4 (நறுக்கியது)

சர்க்கரை – தேவையான அளவு

ரோஸ் வாட்டர் – 1 துளி

ஐஸ் கட்டிகள் – 3-4

செய்முறை:

முதலில் தயிரை நன்கு அடித்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

அடுத்து பிளண்டரில் தயிர் மற்றும் மாம்பழத்தைப் போட்டு, வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை அடிக்க வேண்டும்.

பின்னர் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து, மீண்டும் ஒருமுறை அடித்துக் கொண்டு, அதனை வடிகட்டி ஐஸ் கட்டி சேர்த்து, உலர் பழங்களை தூவி பருகினால், ட்ரை ஃபுரூட்ஸ் மாம்பழ லஸ்ஸி ரெடி!!!

Related posts

சமைக்கும் போது உப்பை கையில் எடுத்து போட்டால் பணம் கொட்டுமாம்!

nathan

வெண்டைக்காய் சாப்பிடுவதால் நடக்கும் நன்மைகள்

nathan

உங்களுக்கு நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? அப்போ இதை படிங்க

nathan

உங்களுக்கு தெரியுமா மருத்துவ குணம் நிறைந்த கிராம்பு மூலம் கிடைக்கும் நன்மைகள்!!

nathan

சுவையான மருத்துவ பண்புகள் நிறைந்த வெங்காயம் மோர்!…

nathan

வெண்டைக்காய் சாப்பிடுவதால் நடக்கும் எண்ணிலடங்காத நன்மைகள்

nathan

இதோ எளிய நிவாரணம்! வயிற்றுப் பிரச்சனைகளைத் தடுக்கும் சத்தான உணவுகள்!!!

nathan

எள் ரசம் செய்வது எப்படி ?

nathan

சுவையான தேங்காய் பால் முட்டை குழம்பு

nathan