30.3 C
Chennai
Wednesday, Jul 16, 2025
16 22 sapota
மருத்துவ குறிப்பு

ஆற்றலை தரும் சப்போட்டா…!!

கண்களுக்கு நல்லது:
சப்போட்டா பழம் வைட்டமின் ஏ வை அதிகளவு கொண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி படி வைட்டமின் ஏ வை கொண்டுள்ளதால் பார்வையை பலப்படுத்துவதோடு முதுமையை தள்ளிபோடும் ஆற்றலை வழங்குகிறது. ஆதலால் தினமும் ஒரு சப்போட்டா பழம் எடுத்துக்கொள்ளலாம்..

இதய பாதுகாப்பு:
இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்றபடி பாதுகாக்கும் தன்மையை சப்போட்டா பழம் கொண்டுள்ளது என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான தூக்கம் வரும்.

ஆற்றலை வழங்கக்கூடியது:
நாம் சுறுசுறுப்பாக நடந்து செல்ல நமக்கு மிகவும் அவசியமாக இருப்பது ஆற்றல். அந்த ஆற்றலை அதிகளவு கொண்டுள்ளது சப்போட்டா பழம் . ஏனெனில் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் குளுக்கோஸ்சை கொண்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு ஆற்றல் அதிகம் தேவைப்படும் அதனால் அவர்களுக்கு சப்போட்டா பழம் பரிந்துரைக்கப்படுகிறது.

புற்றுநோய் தடுப்பு:
வைட்டமின் ஏ மற்றும் பி யை கொண்டுள்ளதால் உடலில் ஏற்படக்கூடிய சளி, தோளின் அமைப்பு முறை, போன்றவற்றை ஆரோக்கியமாக பராமரிக்கிறது. சப்போட்டாவில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்கள், நார்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. அதாவது வாய் குழி புற்றுநோய், பெருங்குடல் சளி சவ்வை நச்சுகளிடமிருந்து பாதுகாக்க வைட்டமின் ஏ வை கொண்டு பாதுகாப்பு வழங்குகிறது.

எலும்பை உறுதிப்படுத்தும்:
எலும்பை பலப்படுத்த தேவையான கால்சியம், பாஸ்பரஸ், இருப்பு சத்துகளை அதிகளவு கொண்டுள்ள சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் எலும்பை பலப்படுத்தலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் எலும்பின் வளர்ச்சியை மேம்படுத்தி எலும்புக்கு வலு சேர்க்கிறது.

மலச்சிக்கலுக்கு நிவாரணம்:
சப்போட்டா சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. சப்போட்டா மூலமாக நார்ச்சத்துகளை நமது உடலுக்கு 5.6/100g அளவு வழங்குகிறது. இதனால் மலச்சிக்கள் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் சப்போட்டா பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.

பித்தம் நீக்க:
சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும் இது நல்ல மருந்து. சப்போட்டா பழத்தை கூழாக்கி, சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்து போட்டு சாப்பிடலாம். இதில் கல்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும்.
16 22 sapota

Related posts

இதயநோய் இருந்தால் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? மருத்துவரின் அறிவுரை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்

nathan

மாமியாரிடம் மருமகள் எதிர்பார்க்கும் விஷயங்கள்

nathan

அதிகமாக கணினி உபயோகப்படுத்துவதனால் ஏற்படும் மோசமான உடல்நலக் கோளாறுகள்!!!

nathan

நண்பர்கள் முதல் நல்ல வேலை அமைவது வரை இது முக்கியம் ப்ரோ…

nathan

உடற்பருமன் சுட்டெண் (body mass index)

nathan

உங்களுக்கு தெரியுமா ஒருவருக்கு மன அழுத்தம் எவ்வளவு உள்ளது என்பதை எளிய இரத்த பரிசோதனையில் தெரிந்து கொள்ளலாம் ?

nathan

குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் தாய்மார்கள் கவனத்திற்கு…!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…’அங்க’ ரொம்ப அரிக்குதா? அதுக்கு இதெல்லாம் தான் காரணம்!

nathan