24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
Image 78
ஆரோக்கிய உணவு

சுவையான காராமணி சாண்ட்விச்

வட இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு பயறு தான் காராமணி. இந்த காராமணியை வைத்து மசாலா தான் செய்வார்கள். ஆனால் அந்த காராமணியை வைத்து சாண்ட்விச் கூட செய்யலாம் என்பது தெரியுமா?

இங்கு காலை வேளையில் விரைவில் செய்யக்கூடியவாறான காராமணி சாண்ட்விச்சின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பாருங்கள்.

 

தேவையான பொருட்கள்:

காராமணி – 1/2 கப் (ஊற வைத்தது)

வெங்காயம் – 1 (நறுக்கியது)

பன்னீர் – 2 டீஸ்பூன் (துருவியது)

வெள்ளரிக்காய் – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)

சாட் மசாலா – 1 சிட்டிகை

மிளகாய் தூள் – 1 சிட்டிகை

கருப்பு உப்பு – 1 சிட்டிகை

சீஸ் – 1 டீஸ்பூன்

பிரட் துண்டுகள் – 8

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

வெண்ணெய்/நெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஊற வைத்துள்ள காராமணியை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்னர் குக்கரை திறந்து, காராமணியை தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு சிறு பாத்திரத்தில் வெங்காயம், வெள்ளரிக்காய், பன்னீர் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, அத்துடன் சாட் மசாலா, மிளகாய் தூள், கருப்பு உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின் அதில் காராமணியை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் பிரட் துண்டுகளை எடுத்து, அதில் வெண்ணெயை தடவி, அதன் மேல் துருவிய பன்னீரை பரப்பி, அடுத்து காராமணி கலவையை வைத்து, மற்றொரு பிரட்டால் மூடி, டோஸ்டரில் போட்டு பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் செய்தால், காராமணி சாண்ட்விச் ரெடி!!!

Related posts

இவ்வளவு நன்மைகளா தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் !

nathan

உலர் திராட்சை எதற்கு எல்லாம் நல்லது என்று தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

சூப்பர் டிப்ஸ்! ஒரு கையளவு வேர்கடலை போதும்…! இதய நோய் உங்களை கண்டாலே அலண்டு ஓடி விடும்?

nathan

உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ் காய்கறி சூப்

nathan

எலுமிச்சை தேநீர் ஆரோக்கிய நன்மை

nathan

பொரித்த பஜ்ஜி, வடை உணவுகளை நியூஸ் பேப்பரில் வைத்து சாப்பிடுபவரா? உங்களுக்குதான் இந்த விஷயம்!

nathan

மாம்பழங்கள் இயற்கையாகப் பழுத்தவையா அல்லது செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டவையா என்று எப்படிக் கண்டறிவது?

sangika

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்

nathan

சுவையான சத்தான கம்பு லஸ்ஸி

nathan