22.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
bdbd
முகப் பராமரிப்பு

முகத்தை வெள்ளையாக்க விரும்புவோர் செய்யும் தவறுகள்.!

நம்மில் பலருக்கு வெள்ளைத்தோலின் மீது மோகம் அதிகம் இருக்கும். அதனால் தங்களின் சருமத்தை வெள்ளையாக்க பலரும் பல முயற்சிகளை செய்வார்கள். அப்படி வெள்ளையாவதற்கு முயற்சிக்கும் போது சில பல தவறுகளையும் செய்வார்கள். அதில் முதன்மையானது டிவிக்களில் விளம்பரப்படுத்தப்படும் கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவது.

இதுப்போன்று நிறைய தவறுகளை வெள்ளையாக முயற்சிக்கும் போது பலர் செய்கின்றனர். அவற்றை பார்ப்பதற்கு முன், வெள்ளையாக வேண்டுமானால் கண்ட அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை வழிகளைப் பின்பற்றினால் நல்ல பலனை எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் பெறலாம் அல்லவா!

போதிய அளவில் உடலில் நீர்ச்சத்து இல்லாவிட்டால், என்ன தான் முயன்றாலும் வெள்ளையாக முடியாது. எனவே தினமும் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

சிலர் சருமத்திற்கு தான் க்ரீம்களைப் பயன்படுத்துகிறோமே, பின் ஏன் ஸ்கரப் செய்ய வேண்டுமென்று அதனைத் தவிர்ப்பார்கள். ஆனால் அப்படி ஸ்கரப் செய்வதைத் தவிர்த்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்காமல் அப்படியே தங்கி, சருமத்தின் அழகை மேன்மேலும் தான் பாதிக்கும். எனவே அதனைத் தவிர்க்காதீர்கள்.

க்ரீம்களை பரிசோதிக்காமல் அப்படியே சிலர் பயன்படுத்துவார்கள். ஆனால் அப்படி செய்தால், அதனால் மோசமான பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே எப்போதும் எந்த ஒரு க்ரீம்மை பயன்படுத்துவதற்கு முன்பும், பரிசோதித்து பின்னரே பயன்படுத்த வேண்டும்.

சருமத்தை வெள்ளையாக்கும் க்ரீம்களைப் பயன்படுத்தினால் சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று பலர் நினைத்து, சன் ஸ்க்ரீன் லோசனைத் தவிர்க்கிறார்கள். ஆனால் அது தவறு. என்ன இருந்தாலும், சன் ஸ்க்ரீன் லோசன் பயன்படுத்துவதைத் தவிர்க்கக்கூடாது.

சருமம் வெள்ளையாவதற்கு க்ரீம்களைப் பயன்படுத்துவதாக இருந்தால், தோல் மருத்துவரிடன் ஆலோசனையின் பேரில், அவர் பரிந்துரைத்த க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துங்கள். கண்டதைப் பயன்படுத்தினால், நன்மைக்கு பதிலாக, தீமைகளையே சந்திக்க நேரிடும்.
bdbd

கண்ட க்ரீம்கள் வாங்கி பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். குறிப்பாக மெர்குரி உள்ள க்ரீம்கள் மற்றும் லோசன்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் அவை சருமத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியவை. வேண்டுமானால், தோல் மருத்துவரிடம் கேட்டுப் பாருங்கள்.

Related posts

சூப்பர் டிப்ஸ் ! எலுமிச்சை சாற்றினை எதனுடன் சேர்த்து முகத்திற்கு மாஸ்க் போடுவது பலன் தரும்…!

nathan

மூக்கைச் சுற்றியுள்ள கரும் புள்ளிகளை எவ்வாறு அகற்றுவது?

nathan

பொலிவான பட்டுப்போன்ற சருமத்தைப் பெற உதவும் ஆயுர்வேத ஃபேஸ் பேக்கு(face pack)

nathan

ஹீரோயின் மாதிரி ஜொலிக்க உங்க பாட்டிகள் சொல்லும் ‘இந்த’ இயற்கை வழிகள

nathan

வீட்டிலேயே கோல்டு ஃபேஷியல் செய்வதற்கான சுலபமான வழி இதோ…!

nathan

அத்திப்பழத்தை வைத்து எல்லா முக பிரச்சினைகளையும் சரி செய்ய இத படிங்க!…

sangika

பெண்களே உஷார்! சீக்கிரமா கலர் ஆக நீங்க க்ரீம் யூஸ் செய்பவரா?

nathan

முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமா?

nathan

வறட்சியான சருமத்தை பராமரிக்கும் முறை

nathan