36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

இதோ பெண்களின் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சில டிப்ஸ்…!

அழகு
பெண்கள் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க பிளக்கிங், ஷேனிங், வேக்சிங் போன்ற முறைகளையும், முடியினை வேரோடு நீக்க நவீன மருத்துவச் சிகிச்சைகளையும் செய்து வருகின்றனர். ஆனால், இதனால் பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும் எனவே இயற்கை முறையில் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியைக் தடுக்க சூப்பரான டிப்ஸ் உள்ளது.

சில பெண்களுக்கு ஆண்களைப் போல் மீசை வளர்வதுண்டு. இதனைத் தடுக்க அப்பர்-லிப்ஸ் எடுப்பார்கள். அப்பர்-லிப்ஸ் செய்யும் போது கடுமையான வலியை உணரக்கூடும். இதனைத் தவிர்க்க வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் ஒன்றை தயாரித்துப் பயன்படுத்தினால், அதனால் உடனே முகத்தில் வளரும் தேவையற்ற முடியைப் போக்கலாம்

முகத்தில் உள்ள முடிகளை நீக்க மஞ்சள் அதிகம் பங்கு வகிக்கிறது. மஞ்சளுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து தடவினால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

வெதுவெதுப்பான எலுமிச்சை சாற்றில் தேன் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, தேவையற்ற இடத்தில் வளரும் முடியின் மீது தடவி பின் ஸ்கரப் செய்து எடுக்க வேண்டும். இதன் மூலம் மென்மையான சருமத்தைப் பெறலாம்.

கடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்கும்.

ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால், பொலிவான மற்றும் அழகான சருமத்தைப் பெறலாம்.

மஞ்சளை பப்பாளியுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து, பின் 15 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

Related posts

புத்துணர்வு தரும் ஃபேஸ் வாஷ்

nathan

சருமத்தை மின்னச் செய்யும் பூசணிக்காய் ஃபேஸ் பேக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

nathan

பருக்களால் உண்டான தழும்புகள், புள்ளிகள் ஆகியவற்றை மறைக்க உருளைக் கிழங்கு பேஸ் பேக்!….

nathan

ஈரப்பதத்தை தக்க வைக்கும் ஃப்ரூட் பேஷியல் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

பயத்தம் பருப்பில் பளபளப்பு!

nathan

சாமந்தி பூ ஃபேஸ் பேக்

nathan

கன்னம் தொய்வடைந்து இருப்பதை, கழுத்தில் உள்ள சுருக்கங்களை எல்லாம் கண்டு ஒரு நிமிடமாவது மனம் கலங்கி இருப்பீர்கள். எப்படி மீளலாம்

nathan

இதோ எளிய நிவாரணம்! சரும நிறத்தை அதிகரிக்கும் ஷீட் மாஸ்க் பற்றி தெரியுமா?

nathan

பெண்களே உங்கள் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறைய!

nathan